Squid Game 3: ஓடிடியில் வந்தாச்சு ஸ்குவிட் கேம் சீசன் 3, விமர்சனம் இதோ! இறுதி சீசன் களைகட்டியதா? சொதப்பியதா?
சென்னை: ஸ்குவிட் கேம் (squid game 3) மூன்றாவது சீசன் netflix ott தளத்தில் வெளியாகி இருக்கிறது. ஆறு எபிசோடுகளை கொண்ட இந்த வெப் சீரிஸ் ரிலீசான முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் இரண்டு சீசனை விடவும் மூன்றாவது சீசனுக்கு மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருக்கிறது. காரணம் இது இறுதி சீசன் என்று கூறப்பட்டதால். ஆனால் இதில் சில சுவாரஸ்யமான விஷயங்களும் நடந்து இருக்கிறது அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
netflix ott தளத்தில் அதிகமாக விரும்பி பார்க்கப்பட்ட வெப் தொடர்களில் ஸ்குவிட் கேமும் ஒன்று. இதன் முதல் சீசன் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது. உலகமெங்கும் நல்ல வரவேற்பு பெற்ற இந்த சீசனில் மொத்தம் ஒன்பது எபிசோடுகள் இருந்தது. இந்த வெப் சீரிசை ஹவாங் டாங் ஹியூக் இயக்கியிருந்தார். முதல் சீசனுக்கு கிடைத்த எதிர்பாராத வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் கடந்த டிசம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆனது. ஆனால் முதல் சீசன் போல இரண்டாவது சீசன் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.

ஸ்குவைட் கேம் 3 கதை
காரணம் முதல் சீசனில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாவது சீசனில் குறைந்துவிட்டது என்று பலர் கருத்து கூறியிருந்தனர். முதல் சீசன் பெரிய அளவில் திரில்லர், எமோஷனல் கலந்து இருந்தது. ஆனால் இரண்டாவது சீசனில் சில சொதப்பல்களும் இருந்தது. அதனால் மூன்றாவது சீசன் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு இந்த சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அதிலும் மூன்றாவது சீசனை இறுதி சீசன் என்று சொல்லப்பட்டதால் இந்த சீசனை பார்ப்பதற்காக மக்கள் ஆர்வம் காட்டி வந்த நிலையில் ஜூன் 27ஆம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது.
ஸ்குவாட் கேம் 3 ரிவ்யூ
இரண்டாவது சீசன் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை என்றாலும் மூன்றாவது சீசன் சுவாரசியமாகவும், எமோஷனல் நிறைந்ததாகவும் இருக்கிறது. (Squid game 3 review) முதலில் மூன்று கேம் மட்டும் இருக்கிறது. முதல் கேம் ஹைடன் ஷிக்கேமாக இருக்கிறது. அதில் யார் யாரை கொல்ல போகிறார்கள் என்று ஒரு சஸ்பென்ஸ் இருக்கிறது. சில காட்சிகள் தவிர சஸ்பென்ஸ் எல்லாமே ஓரளவிற்கு சுவாரசியமாகவே இருக்கிறது. அதோடு எமோஷனல் அதிகமாகவே இந்த சீசன் முழுக்க இருக்கிறது.
அடுத்த சீசன்
அதிலும் குழந்தைகள் கேம் வந்த பிறகு நடக்கும் ஒவ்வொன்றும் சுவாரசியமாக இருக்கிறது. இந்த சீரியஸின் ஹீரோ தன்னுடைய குழந்தையை காப்பாற்றுவதற்காக போராடும் நிலையில் அப்பாவே தன்னுடைய குழந்தையை கொல்ல நினைக்கிறார். ஆனால் கிளைமாக்ஸில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருக்கிறது. இரண்டாவது சீசன் முடிந்த இடத்திலிருந்து தான் மூன்றாவது சீசனுக்கான கதை தொடங்கி இருக்கிறது. ஆனால் இது மூன்றாவது சீசனோடு முடிந்து விடும் என்று சொல்லப்பட்டு இருந்தாலும் இந்த சீசனில் சில விஷயங்கள் அடுத்த சீசன் தொடங்குவதற்கு க்ளூ கொடுக்கப்பட்டிருக்கிறது.
எதிர்பார்க்காத முடிவு
சில இடங்களில் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒரு சில கேரக்டர்கள் போட்டியாளர்களாக இறக்கப்படுகிறார்கள். அவங்க வந்த பிறகு சீரிஸ் திரில்லிங்காகவே போய்க்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஹீரோவுக்கு ஸ்பேஸ் கம்மியாக இருக்கிறது. ஆனால் கடைசி எபிசோட்டில் அவர் அனைவருடைய அனுதாபத்தையும் பெற்று விடுகிறார். எதிர்பார்க்காத ஒரு முடிவாக இந்த மூன்றாவது சீசன் இருக்கிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications