Sri Kirishna: எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை...!
புதுடெல்லி: டிடி நேஷனல் சானலில் தினமும் ஸ்ரீ கிருஷ்ணா சீரியலை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். வழக்கம் போல இதுவும் மறு ஒளிபரப்புத்தான். என்றாலும் மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். இன்றைய காலத்துக்கும் ஈடு கொடுக்க முடியாத பிரமாண்ட படைப்பு.
என்றென்றும் புராதன சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது என்பதை உண்மையாக்கி வரும் மற்றும் ஒரு சீரியல் ஸ்ரீ கிருஷ்ணா.ராமாயணம், மகாபாரதம் இவைகள் இதில் முன்னணியில் இருக்கின்றன.
ராமாயணம் ஒளிபரப்பியது டிடி நேஷனல் சானல் இந்திய அளவிலான ரேட்டிங்கில் எட்டாத உயரத்துக்கு சென்றுவிட்டதாம். டிடி நேஷனல் சானளுக்கு அதே சனால்தான் போட்டி என்பது போல அடுத்த சூப்பர் ஹிட் சீரியல் மகாபாரதமும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

ராமாயணம் மகாபாரதம்
ராமாயணம், மகாபாரதம், ஸ்ரீகிருஷ்ணா என்று புராதன சீரியல்களுக்கு வரவேற்பு ஒரு புறம், சக்திமான், மோட்டோ பட், டாம் அண்ட் ஜெரி, ஜங்கிள் புக் என்று குழந்தைகளுக்கான சீரியல் ஒரு புறம் என்று டிடி கலக்கி வந்தாலும், சாணக்கியா போன்ற வரலாற்று சீரியல்களுக்கும் மக்கள் வரவேற்பு அமோகம் எனும் அளவுக்கு இருக்கிறது.

ஸ்ரீகிருஷ்ணா கிருஷ்ணன்
ஸ்ரீகிருஷ்ணா சீரியலில் கிருஷ்ணன் சிறையில் பிறக்கிறார். கம்சன் கிருஷ்ணனை சிறைக்குள் வந்து கொல்ல வரும் சமயம். கிருஷ்ணன் என்ன மானுட பிறவியா... தெய்வமாயிற்றே... எப்படியாவது அவர் பிழைத்தே ஆக வேண்டும். சிறைக்குள் மின்னல் அடிக்கிறது.. காவலர்கள் மயங்கி விழுகிறார்கள்...

சலிக்காத காட்சி
சங்கிலி கட்டுக்கள் தானாக அவிழ்கின்றன...சிறைக்கதவு திறக்கிறது. தேவகி மயக்கத்தில் இருக்க கண்ணனை தூக்கிக்கொண்டு கிளம்புகிறார் தேவகியின் கணவர். வழியில் ஆற்றைக் கடந்தாக வேண்டும்.. தண்ணீர் மூச்சு முட்டுகிறது. கூடையில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ண பகவானை தலைக்கு மேலாக தூக்கிக்கொள்கிறார்.

சோதனையாக மழை
இதற்கும் சோதனை தருவது போல மழை பெய்கிறது. அப்போதுதான் ஐந்து தலை ஆதிசேஷன் பாம்பு கிருஷ்ணபகவானுக்கு குடை பிடிக்கிறது. குழந்தையை கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கிறார். இப்படியான காட்சிகள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் இருக்கிறது. இதே போலத்தான் மகாபாரதம் சீரியலிலும் கண்ணன் சிறைக்குள் பிறக்கும் காட்சிகளும் ஒளிபரப்பாகி வருது.

கிருஷணன் லீலைகள்
இனிதான் ஸ்ரீ கிருஷ்ணா சீரியலில் கிருஷ்ணன் லீலைகள் பார்க்க பார்க்க ஆனந்தமாக இருக்கும், வெண்ணெய் திருடுவது...குட்டி கண்ணன் சுட்டித்தனம் செய்வது என்று மனதை அள்ளும் காட்சிகள் ...ஸ்ரீ கிருஷ்ணா சீரியலில் பார்த்து மகிழுங்கள். குழந்தையை நடிக்க வைப்பது என்பது சும்மாவா?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications