சரிகமப சினேகாவின் நிஜ நிலைமை! இலங்கை ஷோக்கும் தமிழக ஷோக்கும் ஆடை வித்தியாசம், கண்ணீருடன் பெற்றோர்
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட சினேகா பற்றிய விவாதம் தான் இணையத்தில் அதிகமாக இருக்கிறது. சினேகா இலங்கையை சார்ந்தவர். ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே இலங்கையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பாடல் பாடி இருக்கிறார். அப்போது அவர் இருந்ததற்கும் இப்போது சரிகமப நிகழ்ச்சியில் அவருடைய உடையிலும் வித்தியாசம் இருக்கிறது என்று பல விவாதங்கள் எழுந்து வருகிறது. இதுக்கு சினேகாவின் பெற்றோர் கண்கலங்க பேசி இருக்கிறார்கள்.
சின்னத்திரையில் சரிகமப நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதே நேரத்தில் சர்ச்சைகளும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் சோகமான பக்கத்தை மட்டுமே போட்டு காட்டி டிஆர்பிஐ பெறுகிறார்கள் என்று பலரும் கருத்து கூறி வருகிறார்கள். மேலும் போட்டியாளர்களின் சோக கதையை பிஜிஎம் உடன் போட்டு ரசிகர்களை கண்கலங்க வைத்து விடுகிறார்கள். அதனால் தான் இந்த நிகழ்ச்சிக்கு டிஆர்பி அதிகரிக்கிறது, உண்மையான திறமை இருப்பவர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் அங்கீகாரம் சரியாக கிடைக்கவில்லை என்றெல்லாம் விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

சரிகமப சினேகா
அதுபோல இலங்கையில் இருந்து வரும் போட்டியாளர்கள் எல்லாரும் இந்த நிகழ்ச்சியில் அவர்கள் கஷ்டப்படுவது போல காட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அவர்கள் உண்மையில் நல்ல வசதி வாய்ப்புடன் தான் இருக்கிறார்கள் என்ற விவாதமும் எழுந்தது. அதிலும் சரிகமப சீனியர் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட சினேகா குறித்த புகைப்படங்கள் தான் சோசியல் மீடியா எங்கும் டிரெண்டானது.
இலங்கை போட்டியாளர்
சினேகா இலங்கையை சார்ந்தவர். அங்கு ஏற்கனவே ஒரு தனியார் தொலைக்காட்சியில் பாடியிருந்தார். அப்போது வசதியான குழந்தை போலவே உடைகள் மற்றும் அணிகலன்கள் அணிந்திருந்தார். ஆனால் ஜீ தமிழ் நிகழ்ச்சியில் மிகவும் ஏழ்மையான சூழ்நிலையில் இருந்து வரும் குழந்தை போல கழுத்தில் ருத்ராட்சை மாலை, கையில் கண்ணாடி வளையல் பழைய பாவாடை சட்டை போன்ற உடைகளை உடுத்தி இருந்தார்.
விமர்சனங்கள்
இதனால் ஜி தமிழ் டிஆர்பிக்காக சினேகாவை இப்படி மாற்றிவிட்டார்கள் என்ற விமர்சனம் வந்தது. இந்த நிலையில் சினேகாவின் பெற்றோர் இலங்கையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றியத்துக்கு கண்ணீருடன் பேட்டி கொடுத்திருக்கின்றனர். அதில் அவர்கள் பேசும்போது, என்னுடைய மகள் தமிழ்நாட்டில் உள்ள ஒரு தனியார் நிகழ்ச்சியில் பாடுவதற்காக சென்று இருக்கிறார். ஆனால் என்னுடைய மகளை பற்றி தவறாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது.
உடை கொடுத்தது இவர்தான்
நாங்கள் மிகவும் வசதியானவர்கள் என்று சொல்கிறார்கள். அப்படி எல்லாம் கிடையாது. நாங்கள் இப்போதும் அடுத்தவர்களின் வீட்டில் பாத்திரம் கழுவும் வேலையை தான் செய்து கொண்டிருக்கிறோம். அடுத்தவர்களின் பாத்திரத்தை கழுவி தான் எங்கள் வயிற்றை நிரப்பி கொண்டிருக்கிறோம். கூலி வேலைக்கும் குறைவான வேலைகளை தான் செய்து கொண்டிருக்கிறோம். என்னுடைய பிள்ளை இலங்கையில் உள்ள ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அப்போது அந்த நிகழ்ச்சியில் அவரை அழகாக காட்ட வேண்டும் என்பதற்காக அவர்களே உடை வாங்கி கொடுத்தார்கள். நகைகளும் ஊக்கப் பொருள்களும் வாங்கி கொடுத்திருந்தார்கள். பஸ்ஸுக்கு கூட அவர்கள்தான் பணம் கொடுத்து அனுப்புவார்கள்.

நேர்மையான சூழ்நிலை
அதனால் தான் என்னுடைய மகள் அந்த நிகழ்ச்சியில் அப்படி கலந்து கொண்டார். அதுபோல அவருடைய நண்பர்களும் தெரிந்தவர்களும் கூட அந்த நிகழ்ச்சிக்கு போகும்போது தங்களுடைய உடை, செருப்பு போன்றவற்றையும் நிகழ்ச்சிக்காக கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் எங்களுடைய குடும்பம் இன்னமும் கஷ்டத்தில் தான் இருக்கிறது. என்னுடைய பிள்ளைகளுக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கொடுக்கும் சாப்பாடை அவர்கள் எங்களுக்கு கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள். அப்படித்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
தவறாக பேசாதீர்கள்
தமிழகத்தில் எங்களுடைய மகள் தனியார் தொலைக்காட்சியில் கலந்து கொள்வதை யாரும் தவறாக பேசாதீர்கள். அவ எங்களுடைய நிஜ நிலைமையில் அப்படியே அந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டார். ஆனால் அவளை யாரும் வற்புறுத்தி அதுபோல உடை அணிய சொல்லவில்லை. அதனால் என்னுடைய மகளைப் பற்றி தப்பாக பேசி அவர் பாடுவதை தடுத்து விடாதீர்கள். அவளுடைய திறமையாஐஅ அவளாவது நல்லா இருக்கட்டும், என்று அந்த பேட்டியில் சினேகாவின் பெற்றோர் பேசியிருக்கிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications