திருமண வாழ்க்கை.. அப்பா சொன்ன வார்த்தையை மறுக்க முடியல! ஆனால் இப்போ! நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் ஓபன்
சென்னை: நடிகர் விஜயகுமாரின் மகளான ஸ்ரீதேவி விஜயகுமார் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் தான் அரேஞ் மேரேஜ் செய்வதற்கு காரணம் என்ன என்பது குறித்தும் தன்னுடைய தந்தை மீது தனக்கு இருக்கும் மதிப்பு குறித்தும் பேசியிருக்கிறார்.
சினிமாவில் ஒரு சில பிரபலங்கள் குடும்பமாகவே சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் நடிகர் விஜயகுமார் குடும்பமும் ஒன்று. விஜயகுமார் 50 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். அவருடைய மனைவியான மஞ்சுளாவும் சினிமாவில் கதாநாயகியாக நடித்து குணசித்திர வேடங்களிலும் நடித்திருந்தார்.

அதுபோல விஜயகுமாரின் மகன் மகள் சினிமாவில் நடித்திருக்கிறார்கள். விஜயகுமார் முத்து கண்ணு என்பவரை திருமணம் செய்து இருந்த நிலையில் அவருக்கு கவிதா, அனிதா, அருண் விஜய் என்ற மூன்று குழந்தைகள் இருந்தனர். அப்போது முத்துக்கண்ணுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிறகு தன்னுடைய முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவியோடு விஜயகுமார் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார். அதில் விஜயகுமார் மஞ்சுளா தம்பதிக்கு வனிதா, ஸ்ரீதேவி, பிரீத்தா என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். விஜயகுமாரின் மகள்களில் அனிதா மட்டும் தான் சினிமாவில் அடி எடுத்து வைக்கவில்லை. அவருக்கு பல வாய்ப்புகள் வந்தபோதும் அனிதா மட்டும்தான் டாக்டராக மாறி இருக்கிறார்.

அதுபோல இந்த குடும்பத்திலிருந்து நடிகை வனிதா மட்டும் பிரிந்து தனியாக தன்னுடைய மகள்கள் உடன் வந்து வருகிறான் அதுபோல வனிதாவின் தங்கையான ஸ்ரீதேவி தேவதையை கண்டேன் போன்ற பழக்கத்தை திரைப்படங்களில் நடித்திருந்தார் கதாநாயகிகளில் ஒருவரான ஸ்ரீதேவி கூட்டத்தில் இருக்கும்போது ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஸ்ரீதேவி திருமண வாழ்க்கை குறித்து பேசுகையில், நான் திடீர் திருமணம் செய்து கொள்வதற்கு காரணம் தன்னுடைய அம்மாவும் அப்பாவும் தான். நான் அப்பாவுக்கு செல்ல பொண்ணு. ஆனால் அப்பா என்ன சொன்னாலும் அதை மீறமாட்டேன். அவர் எது செய்தாலும் என்னுடைய நல்லதுக்கு தான் செய்வார் என்பது எனக்கு தெரியும். அதுபோல அம்மாவுடைய பேச்சையும் என்னால் மீற முடியாது. ராகுலை அம்மா அப்பா தான் தேர்ந்தெடுத்தாங்க.

ஆனால் அம்மா, அப்பா தேர்ந்தெடுத்த திருமண வாழ்க்கை எனக்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. அவர்களை நம்பி எடுத்த முடிவு தப்பா போகல. திருமண வாழ்க்கையில் நான் சந்தோஷமாக இருக்கிறேன். ராகுல் என்னையும் என்னுடைய குடும்பத்தினையும் நன்றாகவே பார்த்துக் கொள்கிறார்.

அதுபோல இப்போது மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்திருக்கிறேன். இனி சினிமாவிலும் நல்ல வாய்ப்புகள் வரும்போது அது குறித்து முடிவெடுக்கலாம் என்று இருக்கிறேன் என அந்த பேட்டியில் நடிகை ஸ்ரீதேவி பேசியிருக்கிறார்.

-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications