Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Saregamapaவில் அசத்தும் மலையக சிறுமி அசானி.. ரூ 15 லட்சத்தில் நிரந்தர வீடு.. இலங்கை அமைச்சர் உறுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஈழத்து சிறுமி அசானிக்கு ரூ.15 லட்சம் செலவில் வீடு கட்டித் தருவதாக இலங்கை அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சேம்ஸ்தான். இது இரு சீசன்களை கடந்து தற்போது 3ஆவது சீசன் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஆங்கர் அர்ச்சனா தொகுத்து வழங்கி வருகிறார்.

Srilanka girl Asani will get permanent hosue worth Rs 15 lakhs in Kandi

இந்த சீசனில் 28 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இது வரை 5 பேர் வெளியேறியுள்ளனர். மீதம் 23 பேர் போட்டி போட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் அசானி கனகராஜ் என்ற ஈழத்து சிறுமி கலந்து கொண்டார்.

அவர் இலங்கை கண்டியை சேர்ந்தவர். இவருடைய தந்தை தேயிலை தோட்ட தொழிலாளி. 150 ஆண்டுகளுக்கு முன்னர் ராமேஸ்வரம்தான் இவர்களது சொந்த ஊராக இருந்தது. அதன் பிறகு இவர்கள் இலங்கைக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துவிட்டனராம். ஒரு தேயிலை தோட்டத்தில் பல ஆண்டுகளாக இவர்கள் தலைமுறையே கொத்தடிமையாக வேலை பார்த்து வருகிறார்கள்.

தற்போது அசானியின் அம்மா, அப்பா, அண்ணன் ஆகிய மூவரும் தேயிலை தோட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ 200 சம்பளத்திற்கு வேலை செய்து வருகிறார்கள். அசானியின் மற்றொரு அண்ணன் டீ கடையில் வேலை பார்த்து வருகிறார். சினிமா, டிவி என எதுவுமே பார்க்காமல் எஃப்எம் ரேடியோவில் வரும் பாடல்களை அசானி கேட்டு பழகியுள்ளார்.

அவரின் திறமையை பார்த்த அவருடைய குடும்பத்தினர் சரிகமப நிகழ்ச்சியின் ஆடிஷனுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பணம் இல்லாததால் இந்தியாவில் நடந்த மெகா ஆடிஷனுக்கு அசானியால் வர முடியவில்லை. இதை அறிந்த ஊர்மக்கள், உறவினர்கள் என சேர்ந்து தங்களால் முடிந்த உதவிகளை அசானிக்கு செய்து அவரை சென்னைக்கு அனுப்பினர்.

அவருக்கு பாடும் வாய்ப்பை நடுவர்கள் அளித்துள்ளனர். பொதுவாக ஆடிஷனில் கலந்து கொள்ளாவிட்டால் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. ஆனால் அசானி கடல் கடந்து தமிழகத்தை நம்பி வந்ததால் அவருக்கு நடுவர்கள் ஒரு வாய்ப்பை தந்துள்ளார்கள். தனது இனிய குரல் வளத்தால் அவர் அரங்கையே அதிர வைத்து வருகிறார்.

அசானிக்கு முறைபடி இலவசமாக சங்கீதம் கற்றுக் கொடுக்க இலங்கையில் ஒரு பெண் முன்வந்துள்ளார். இந்த நிலையில்தான் அசானிக்கு நிரந்தர வீடு கட்டித் தருவதாக இலங்கை கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் உறுதியளித்துள்ளார். நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இதை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் இலங்கையிலிருந்து மலையகத்தை சேர்ந்த சிறுமி பாட்டு பாட தமிழகம் சென்றுள்ளார். அவருக்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் எனது மகன், கனடாவில் வசிக்கும் எனது குடும்ப உறுப்பினர்கள் சார்பாக 15 லட்ச ரூபாய் செலவில் ஒரு வீட்டை நிர்மாணித்து கொடுக்க தீர்மானித்துள்ளோம். ஆகவே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அசானியின் ஊருக்கு எனது உதவியாளரை அனுப்பி, அவருக்கான வீட்டை எங்கே எப்படி கட்டிக் கொடுக்க முடியும் என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெரிவித்துள்ளேன் என்றார். கடல் கடந்து சென்னை வந்த அசானியின் விமான டிக்கெட் ஒன்றரை லட்சமாகும். இதை மலையக மக்கள் கொடுத்து அனுப்பியுள்ளனர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+