இனி அதிரடி சண்டை காட்சிகளுக்கும் ஆஸ்கர்.. ஆர்ஆர்ஆர் ஸ்டண்ட் உடன் அறிவிப்பை வெளியிட்ட அகாடமி அமைப்பு
நியூயார்க்: உலகெங்கும் உள்ள சினிமா கலைஞர்கள், ரசிகர்கள் என அனைவரும் எதிர்பார்க்கும் விருது நிகழ்ச்சி என்றால் அது ஆஸ்கர் தான். தற்போது வரை 23 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இப்போது அத்துடன் புதிதாகச் சண்டைக் காட்சிகளுக்கான ஆஸ்கரை வழங்க அகாடமி அமைப்பு முடிவு செய்துள்ளது.
சினிமாவுக்கு என்னதான் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டாலும் கூட அதன் உச்சமாக ஆஸ்கர் விருதுகள் தான் கருதப்படும். ஒவ்வொரு ஆண்டும் உலகமே எதிர்பார்க்கும் சினிமா விருதுகள் நிகழ்ச்சியாக ஆஸ்கர் விருதுகள் இருந்து வருகிறது. ஹாலிவுட் மட்டுமின்றி உலகளவில் வெளியாகும் படங்களுக்கும் ஆஸ்கர் அமைப்பு விருதுகளை வழங்கும்.

23 பிரிவுகளில் ஆஸ்கர்
தற்போது சிறந்த நடிப்பு, சிறந்த இயக்கம், சிறந்த கதை, சிறந்த ஒளிப்பதிவு உட்பட 23 போட்டி பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகிறது. இதற்கிடையே ஆஸ்கர் விருதுகளில் போட்டி பிரிவில் சிறந்த ஸ்டண்ட் என்ற பிரிவில் தனியாக விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை பல ஆண்டுகளாகவே இருந்து வந்தது.
ஒவ்வொரு ஆண்டும் அதிரடி ஆக்ஷன் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்களும் அதை விரும்பி பார்த்து வருகிறார்கள். இதுபோன்ற ஆக்ஷன் படங்களுக்கு ஸ்டண்ட் தான் முக்கியம்.. ஸ்டண்ட் எந்தளவுக்கு அட்டகாசமாக இருக்கிறதோ.. படமும் அந்தளவுக்கு ஹிட் அடிக்கும். இதன் காரணமாகவே சிறந்த ஸ்டண்ட் பிரிவில் ஆஸ்கர் விருது வழங்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்..
சிறந்த ஸ்டண்ட் வடிவமைப்பிற்கான ஆஸ்கர்
இதற்கிடையே ஸ்டண்ட்டை அங்கீகரிக்கும் வகையில் சிறந்த ஸ்டண்ட் வடிவமைப்பிற்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும் என்று ஆஸ்கர் விருதை வழங்கும் அகாடமி அமைப்பு அறிவித்துள்ளது. வரும் 2027ம் ஆண்டு ஆஸ்கர் 100வது ஆண்டை நிறைவு செய்யும் நிலையில், அப்போது முதல் சிறந்த ஸ்டண்ட் வடிவமைப்பிற்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமாவின் தொடக்க நாட்களிலிருந்தே ஸ்டண்ட் கலை என்பது சினிமாவின் ஒரு பகுதியாக இருந்து வந்த நிலையில், அதற்கு இப்போது அங்கீகாரம் கிடைக்கிறது.
தி ஃபால் கை, புல்லட் டிரெயின் மற்றும் டெட்பூல் 2 ஆகிய படங்களை இயக்கி முன்னாள் ஸ்டண்ட் இயக்குநர் டேவிட் லீட்ச் என்பவர் ஸ்டண்ட் வடிவமைப்பிற்கு ஏன் ஆஸ்கர் வழங்கப்பட வேண்டும் என்பதை விளக்கிப் பல முறை அகாடமி அமைப்பிற்கு பிரசன்டெஷன்களை முன்மொழிந்திருந்தார். அதைத் தொடர்ந்தே அகாடமி அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அகாடமி அமைப்பு
புதிய பிரிவை அறிவித்த அகாடமி, "சண்டைப் படங்கள் எப்போதும் சினிமா மாயாஜாலத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. இப்போது அவை ஆஸ்கர் விருதுகளின் ஒரு பகுதியாகிறது. ஸ்டண்ட் டிசைனில் சாதனை படைத்ததற்காக அகாடமி ஒரு புதிய விருது பிரிவை உருவாக்கியுள்ளது.. 2027ம் ஆண்டு வெளியாகும் ஆஸ்கர் படங்களைக் கவுரவிக்கும் வகையில் 2028இல் நடைபெறும் 100வது ஆஸ்கர் விழா முதல் இவை தொடர்ச்சியாக வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ஆர்ஆர்
மேலும், இது குறித்த அறிவிப்பில் மொத்தம் மூன்று படங்களின் போஸ்டர்கள் இடம்பெற்று இருந்தது. அதில் அட்டகாசமான ஸ்டண்ட் காட்சிகளுக்குப் பெயர் போன மிஷன் இம்பாசிபிள், எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் காட்சிகளுடன் இணைந்து ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தின் காட்சியும் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆர்ஆர்ஆர் படத்தில் வரும் நாட்டு நாட்டு படலுக்காக 2023ல் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications