நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு முத்தம் கொடுத்த முதியவர்..சீச்சீ இப்படியா? கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அதில் நிகழ்ச்சி பார்க்க வந்த நபர் பிரியங்காவிற்கு பிளைன் கிஸ் கொடுத்தது வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
நிகழ்ச்சியில் சுவாரசியத்திற்காக இப்படி எல்லாமா பண்ணுவாங்க என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக வலம் வரும் விஜே பிரியங்கா தற்போது செய்த செயல் சமூக வலைத்தளத்தில் அதிகமாக கலாய்க்கப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சி என்றாலும் அங்கே இப்போது அதிகமாக பிரியங்கா தான் தொகுப்பாளராக கலக்கிக் கொண்டிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்காவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இல்லையா? என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் இப்போது அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளில் பிரியங்கா கலந்துகொண்டு நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு போய்க் கொண்டிருக்கிறார். அந்த வகையில் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சியில் மூன்று சீசன்கள் முடிவடைந்து இப்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் விஜய் டிவியில் உள்ள பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு இருக்கின்றனர். பல சின்னத்திரை நடிகர்கள் இதில் கலந்துகொண்டு சுவாரசியமாக விளையாடி பணத்தை வெற்றி பெற்று கொண்டு செல்கின்றனர். பிரபலங்கள் மற்றும் பிரியங்கா சேர்ந்து அடிக்கும் லூட்டி பார்ப்பதற்காக இந்த நிகழ்ச்சிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
அந்த வகையில் இந்த வாரத்திற்கு ஆன வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் இந்த வார நிகழ்ச்சியை பார்ப்பதற்காக ஒரு முதியவர் குடும்பத்தோடு வந்திருக்கிறார். அப்போது அவருடைய அருகில் சென்று பிரியங்கா ஸ்டார் மியூசிக் என்று சொல்லுமாறு கூறுகிறார். ஆனால் அவர் தனக்கு சொல்ல வராது என்று வெட்கப்பட்டு கொண்டிருக்கிறார்.

மீண்டும் மீண்டும் பிரியங்கா சொல்லிக் கொண்டே இருக்க அந்த நபர் மறுத்து விட கடைசியில் அப்போ எனக்கு ஒரு பிளேன் கிஸ் கொடுங்க என்று கூறுகிறார். அதற்கு அந்த நபரும் பிளைன் கிஸ் கொடுக்கிறார். தற்போது அது வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் அந்த நபர் பிளைன் கிஸ் கொடுத்த பிறகு பிரியங்கா நாம் இப்போது எந்த நிகழ்ச்சியில் இருக்கோம் என்று கன்பியூஸ் ஆகி இருக்கிறார். அது குறித்து நெட்டிசன்கள் இப்போது கலாய்த்து வருகிறார். நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்காக இப்படியா செய்வாங்க என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
-
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
விஜயாவை அவமானப்படுத்திய மீனா.. ஸ்ருதியை பழிவாங்க நீத்து பிளான்! ரோகிணி வைத்த செக்.. சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications