பொம்பள சோக்கு கேக்குதா கோபி? பொளந்து கட்டிய ராதிகா.. பாக்கியா போட்ட குத்தாட்டம்.. வெளியான வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் சீசன் 4-இல் பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகள் கலந்து இருக்கின்றனர்.

சீரியலில் எதிரும் புதிரமாக இருக்கும் பாக்கியா மற்றும் ராதிகா ஒரே நிகழ்ச்சியில் எதிரெதிர் அணியாக கலந்து கொண்டிருக்கின்றனர்.

தங்கள் வாழ்க்கையில் விளையாடிய கோபியை ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியில் பாக்யாவும் ராதிகாவும் பழி வாங்கி இருக்கின்றனர்.

நான்காவது சீசன்

நான்காவது சீசன்

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பிரியங்கா இருந்து வருகிறார். பிரியங்கா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி என்றால் அங்கே பரபரப்புக்கும் கலகலப்புக்கும் பஞ்சமில்லாமல் தான் இருக்கும். அந்த மாதிரி தான் தற்போது இந்த வாரமும் இந்த நிகழ்ச்சியில் இருக்கிறது. மார்ச் 26 ஆம் தேதி எபிசோடுகான நான்காவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

கோபியை காணவில்லை

கோபியை காணவில்லை


ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து பாக்யாவாக நடிக்கும் சுசித்ராவும், ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மாவும் கலந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவரும் எதிரெதிர் தனியாக கலந்து கொண்டு இருக்கும் நேரத்தில் கோபி மட்டும் வரவில்லை. ஏற்கனவே கோபி கேரளாவில் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் கால் சீட் இல்லாததால் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் இல்லையென்றால் பாக்கியலட்சுமி சீரியல் அணியினர் மொத்தமாக கலந்து கொண்டிருந்தால் நிகழ்ச்சி மேலும் களைகட்டி இருக்கும்.

செம அடி

செம அடி

இந்த நிலையில் கோபிக்கு பதிலாக இன்னொரு நபர் கோபியின் முகமூடியை அணிந்து கொண்டு நிகழ்ச்சியில் அறிமுகமாக பாக்யாவும் ராதிகாவும் அந்த நபரை, பொம்பள சோக்கு கேக்குதா கோபி என்று அடித்து வெளுத்து வாங்குகின்றனர். தற்போது வெளியாகி இருக்கும் இந்த ப்ரோமோ வில் கோபி அடி வாங்குவது பார்த்த ரசிகர்கள் ஐயோ இது நிஜ கோபியாக இருக்கக் கூடாதா? இப்படி இருந்தால் மேலும் சுவாரஸ்யமாக இருந்திருக்குமே என்று கூறி வருகிறார்கள்.

செம குத்தாட்டம்

செம குத்தாட்டம்

அது மட்டுமல்லாமல் மற்றொரு ப்ரோமோவில் பாக்யா தோற்றுப் போய் இருக்கிறார். சீரியலில் மட்டும் பாக்யா அடுத்தடுத்து ஜெயித்துக் கொண்டே இருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் பாக்கியா அவர் செலெக்ட் பண்ண பெட்டியில் முட்டை தான் இருக்கிறது. ஆனாலும் தனது கையில் இருக்கும் முட்டையை வைத்துக்கொண்டு வடிவேலு டான்ஸ் போட்டு பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். இவர் போட்ட குத்தாட்டத்தை பார்த்து நம்ம பாக்கியாவா இப்படி, இவர் சுடிதார் போட்டாலே சீரியல் மாஸ் என்று காட்டுகிறார்கள். சிம்பிளா முடியை கட் பண்ணினால் கூட அதையும் பெரிய அளவில் பண்ணுகிறார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் பாக்கியா போட்ட குத்தாட்டத்தை யாரும் பார்க்கவில்லையா? என்று இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அதை வேக வேகமாக பகிர்ந்து கமாண்டுகளை குவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+