நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் பிக் பாஸ் பிரபலங்கள்.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஓவியா, ஜூலி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் சீசன் 4 நிகழ்ச்சியின் செப்டம்பர் 17 தேதிக்கான முதல் பிரமோ வெளியாகியிருக்கிறது.
அதில் போட்டியாளர்களாக பிக் பாஸ் சீசன் 1 பிரபலங்கள் ஆறு பேர் கலந்து கொண்டிருக்கின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதிரும் புதிருமாக இருந்த ஓவியா மற்றும் ஜூலி இந்த நிகழ்ச்சியில் ஒரே அணியில் இணைந்து இருக்கின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களில் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படும் போது எப்படி பிரபலங்கள் 100 நாட்கள் இருக்கப் போகிறார்கள்? என்று பலரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சி எல்லாம் செட் ஆகாது என்று நெகட்டிவ்வான கமாண்டுகளும் வந்து கொண்டு தான் இருந்தது.
ஆனால் அதையெல்லாம் தாண்டி நிகழ்ச்சி தொடங்கப்பட்ட பிறகு 100 நாட்களும் டிஆர்பியில் பட்டையை கிளப்பியது. சற்றும் எதிர்பார்க்காமல் முதல் பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்களாக பல பிரபலமான நடிகர்களாக களம் இறக்கி இருந்தனர். அதனால் அந்த சீசன் அதிகமான ரசிகர்களின் மனதையும் கவர்ந்திருந்தது. அதற்கு காரணமாக இருந்தவர்களில் நடிகை ஓவியாவும் ஒருவர்.
வெள்ளந்தியான பேச்சு டக்கென்று வரும் கோபம் அந்த கோபத்தோடு வரும் சினுங்கள் சிரிப்பும் ஓவியாவுக்கு என்று தனித்துவமான இருக்கும் அவருடைய பேச்சு திறமை எல்லாமே ரசிகர்களுக்கு பிடிக்கத் தொடங்கிவிட்டது. அதனாலேயே அவருக்கு ஓவியா ஆர்மி தொடங்கி பிக் பாஸ் நிகழ்ச்சியை பிரபலம் அடைய வைத்தனர் ஓவியாவின் ரசிகர்கள்.
அதுபோல இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் வெள்ளந்தியாக வெகுளித்தனமாக இருந்த ஜூலி பிறகு ஓவியாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரசிகர்களின் மனதில் வில்லியாக மாறிவிட்டார். ஜூலிக்காக போட்ட குறும்படம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து சில வருடங்களாகவே ஜூலி பற்றி சமூக வலைத்தளத்தில் அதிகமானோர் நெகட்டிவ் கருத்து வெளியிட்டு வந்தனர். இப்போது அதையெல்லாம் மறந்து அவர் சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்க, அவருடைய நடிப்பை பலரும் பாராட்டியும் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை போட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜூலி மற்றும் ஓவியா இணைந்து ஸ்டார் மியூசிக் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கின்றனர். இதை பார்த்ததும் அதிகமான ரசிகர்கள் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். சமீபத்தில் தான் சில வாரங்களாக ஓவியா பல youtube சேனல்களில் பேசிக் கொண்டிருக்கிறார் .இந்த நிலையில் விஜய் டிவியில் நிகழ்ச்சியில் அவர் மீண்டும் அறிமுகமாகி இருப்பது அவருடைய ஆர்மி ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதே நேரத்தில் பழைய பகை எல்லாம் மறந்து ஓவியாவும் ஜூலியும் இந்த நிகழ்ச்சியில் ஜாலியாக விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்த ரசிகர்கள் நீங்க ரெண்டு பேரும் இப்படி இருக்கீங்க...! இது தெரியாம இன்னும் ஒரு சிலர் ஜூலியை திட்டிகிட்டு இருக்காங்களே? என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர். அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சி இந்த வாரம் டிஆர்பியில் தாறுமாறாக எகிற போகிறது என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications