டிஜே பிளாக்குக்கு திடீர் கல்யாணம்..!? மணகோலத்தில் இருக்கும் வீடியோவை வெளியிட்ட பிரியங்கா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமான டி ஜே பிளாக் மணகோலத்தில் இருக்கும் வீடியோவை விஜே பிரியங்கா வெளியிட்டு இருக்கிறார்.

டிஜே பிளாக்க்கு திருமணம் என்று ஆரம்பத்தில் கூறி நான் அப்படி சொல்ல மாட்டேன் என்று பிரியங்கா கடைசியில் ட்விஸ்ட் வைத்து இருக்கிறார்.

இந்த வாரம் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெறப்போகிறது என்று பிரியங்கா க்ளூ கொடுத்திருக்கிறார்.

Star Music season 4 promo for 21th May DJ Blacks surprise wedding

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் சீசன் 4 நிகழ்ச்சிக்கான மே 21 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மணகோலத்தில் டிஜே பிளாக் உட்கார்ந்திருக்க அங்கு வரும் பிரியங்கா என் தம்பி டிஜே பிளாக்குக்கு கல்யாணம் என்று கூறுகிறார்.

பிறகு நான் அந்த மாதிரி ஏதாவது சொல்லுவேன்னு நினைச்சீங்கன்னா..! உங்களுக்கு ஏப்ரல் ஃபூல் மக்களே. ஸ்டார் மியூசிக் சீசன் 4 இந்த வாரம் ஒரு கல்யாணம் நடத்தி வைக்க இருக்கிறோம். ஆனால் அது யாரோட கல்யாணம் எந்த டீம் உடைய செலிப்ரேஷன் எல்லாமே தெரிஞ்சுக்கோங்க. ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு தான் என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் அய்யர் முன்பு டிஜே பிளாக் உட்கார்ந்து இருக்கும் வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் இது என்ன புது ட்விஸ்ட் அப்போ யாரு பொண்ணு என்று ஆர்வத்தோடு காத்திருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகிறார். இன்னும் ஒரு சிலர் டிஜே பிளாக் யோசிக்கிறதை பார்த்தா பிரியங்கா இருக்கிற வரைக்கும் நமக்கு கல்யாணம் ஆகாது போலயே என்று யோசிப்பதாகவும் கமெண்ட்களை அடித்து விடுகிறார்கள்.

Star Music season 4 promo for 21th May DJ Blacks surprise wedding

அதைத்தொடர்ந்து இன்னும் ஒரு சிலர் அப்போ ஆஹா கல்யாணம் சீரியல் தான் இந்த வாரம் விருந்தினர்களாக வரப்போகிறார்களா? நாங்கள் இப்பவே கண்டுபிடித்து விட்டோம் என்று கமெண்ட் தட்டி விடுகிறார்கள். ஏற்கனவே விஜய் டிவிக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது எல்லாம் கைவந்த கலை தான் அப்படித்தான் இந்த வாரமும் புதுசா யாராவது மாட்டி இருக்காங்களா? என்றும் சிலர் நக்கலாக கலாய்த்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+