ஒரே நிகழ்ச்சியில் அறிமுகமாகும் ராதா-அம்பிகா.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. வரலாற்றிலேயே முதல் முறை!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் சீசன் 4 நிகழ்ச்சியின் ஏப்ரல் 9ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
இந்த வார இந்த நிகழ்ச்சியில் நடிகை அம்பிகா மற்றும் நடிகை ராதா இருவரும் ஒன்றாக கலந்து கொள்கின்றனர்.

இதுவரைக்கும் அக்கா தங்கச்சி இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்த நிலையில் முதல் முறையாக விஜய் டிவியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இதுதான் முதல் முறையாம்:

விஜய் டிவியில் பிரியங்கா தொகுத்து வழங்கும் காமெடியான நிகழ்ச்சியாக இருந்து வரும் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் புது புது பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் இந்த வாரம் 80ஸ் ரசிகர்களை பரவசப்படுத்திய நடிகை ராதா மற்றும் அம்பிகா இருவரும் ஒன்றாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். அக்கா தங்கச்சியாக இருந்தாலும் இவர்கள் இருவரும் எந்த நிகழ்ச்சியிலும் ஒற்றுமையாக கலந்து கொண்டது கிடையாதாம். இந்த நிலையில் தென் இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக இந்த நிகழ்வு நடக்கிறது என்று விஜய் டிவி கொக்கரிக்கிறது.
மாறாத கேரக்டர்:

அக்கா தங்கச்சியாக ஒரே நிகழ்ச்சியில் ஒற்றுமையாக கலந்து கொண்டு இருவரும் இரு அணியாக இருந்து இவர்கள் செய்யும் கலாட்டா மற்றும் கலவரத்தை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு அதிகமான கருத்துக்களை குவித்து வருகிறார்கள். வீட்டுக்குள் மட்டுமல்லாமல் சகோதரிகள் வெளியே இருந்தாலும் இப்படித்தான் என்பதை நிரூபிக்கும் விதமாக இவர்கள் இருவரும் மேடையிலே போட்டி போட்டுக் கொள்கின்றனர்.
மாறாத சேட்டை:

அக்காவுக்கு தங்கையும் தங்கைக்கு அக்காவும் சலித்தவர்கள் இல்லை எத்தனை வயது ஆனாலும் மாறாது என்பதை இருவரும் மாறி மாறி கலாய்த்து நிரூபித்து இருக்கிறார்கள். இன்ட்ரோடக்சன் பிரியங்கா செய்ததும் நிகழ்ச்சிக்கு வந்த ராதா, அக்கா ரொம்ப நல்லவங்க எனக்காக எல்லாத்தையும் விட்டுக் கொடுத்துடுவாங்க என்று பெருமையாய் பேச, சைடு கேப்பில் அம்பிகா பரிசு மட்டும் எனக்கு கொடுத்துடுங்க என்று கலகலப்பு ஊட்டுகிறார்.
நடனத்தில் வேற்றுமை:
இருவரும் தனித்தனியாக நடித்த திரைப்படங்களில் நடந்த சுவாரசியங்களை பற்றியும் நிகழ்ச்சிக்கு இடையே பேசிக் கொண்டிருக்கின்றனர். அதில் நடிகர் கமலஹாசனோடு நடிகை ராதா ஆடிய ஏய் உன்னைத்தானே எனும் பாடல் பற்றிய சுவாரசியத்தை ராதா, தெரிவிக்க நான் இந்த பாடலுக்காக விலையுயர்ந்த உடைகளை எல்லாம் அணிந்து கொண்டு எனக்கு ஸ்டெப் தருவார்கள் என்று காத்திருந்தால், அங்கே ஸ்டெப்பே இல்லை என்று ஃபீல் பண்ண, அப்போது அம்பிகா நான் ஏதாவது அதிகமாக டான்ஸ் ஆடுகிற மாதிரி ஸ்டேப் நமக்கு வந்து விடக்கூடாது என்று வேண்டிக்கொண்டு இருக்கிற கேரக்டர் என்று பேச இந்த ப்ரோமோவை பார்ப்பவர்களுக்கும் சிரிப்பு தன்னாலே வருகிறது.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications