விஜய் டிவி நிகழ்ச்சியில் நடிகர் செந்தில்.. இமான் கேட்ட கேள்வி.. பல வருட கேள்விக்கு விடை கிடைத்தது
சென்னை: காமெடி நடிகர் செந்தில் முதல் முறையாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.
அப்போது அவர் தான் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலை பாடி எதிர் அணியினரை கலாய்த்து கலகலப்பை ஏற்படுத்தி இருந்தார்.

அதைத்தொடர்ந்து நடிகர் இமான் அண்ணாச்சி நடிகர் செந்தில் இடம் கலகலப்பான கேள்விகளை கேட்க அரங்கமே அதிர்ந்து போயிருந்தது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன விஜய் டிவியில் புதிது புதிதாக பல நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியும் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரியங்கா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை கலகலப்பாகவும் புதுப்புது போட்டியாளர்களோடும் காமெடி செய்து கொண்டு போய்க் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது வரைக்கும் இந்த நிகழ்ச்சி மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து நான்காவது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதில் ஒவ்வொரு வாரமும் விஜய் டிவியில் பிரபலமான சீரியல் நடிகர்களும் முன்னணி நடிகர்களும் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் காமெடி நடிகர் செந்தில் முதல் முறையாக கலந்து கொண்டிருக்கிறார். இவரோடு சேர்ந்து இமான் அண்ணாச்சி உட்பட பல நகைச்சுவை நடிகர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் வழக்கம் போல பேக்ரவுண்ட் மியூசிக் ஒளிபரப்பப்பட்டது. அப்போது அந்த பாடலுக்கான ஊரு விட்டு ஊரு வந்து பாடல் டியூன் ஒலிக்க விடுகின்றனர். அதில் செந்தில் அந்த பாடலை கண்டுபிடித்து விடுகிறார். அது மட்டும் இல்லாமல் தான் அந்த படத்தில் நடித்திருக்கிறேன் என்றும் சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது அவருக்கு அருகில் இருக்கும் இமான் அண்ணாச்சி நடிகர் செந்தில்டம் "இப்போ சொப்பன சுந்தரி காரை யாரு வச்சிருக்கா" என்று கேட்க, அதற்கு செந்தில் "சத்தியமா நான் வச்சுக்கல" என்று சொல்ல. அதை கேட்டு அரங்கத்தில் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். இப்படியாக இந்த கலகலப்பான பிரமோ வெளியானதை தொடர்ந்து அதிகமான ரசிகர்கள் நாங்கள் இந்த வாரம் நிகழ்ச்சியை பார்க்க தவற மாட்டோம் என்று கருத்து கூறி வருகிறார்கள்.
-
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
விஜயாவை அவமானப்படுத்திய மீனா.. ஸ்ருதியை பழிவாங்க நீத்து பிளான்! ரோகிணி வைத்த செக்.. சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications