சன் டிவி நிர்மலா பெரியசாமியின் ஸ்டன்னிங் ஜர்னி.. “பாலிடிக்ஸ் வர்றீங்களா?னு கலைஞர் கேட்டதுமே! பார்ரா
சென்னை: என் அப்பா ஒரு மார்க்சியவாதி என்பதால் நிறைய புத்தகங்களை படிக்க வைப்பார்.. ஒரு நாளைக்கு ஆயிரம் பக்கம் வரை படிப்பேன்.. வாசிப்புப் பழக்கம் அதிகம் இருந்தது.. அதேபோல மீடியாவிற்கு வருவதற்கு தேவையான தகுதிகளுடன் தான் வந்தேன்" என்று பேட்டி ஒன்றில் நிர்மலா பெரியசாமி தெரிவித்துள்ளார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள நிர்மலா பெரியசாமி, "தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே சிறுவயதில் நான் நன்றாக படிப்பேன் என்று சொல்வார்கள்.. 2ம் வகுப்பில் இருந்தே பேச்சு போட்டிகளில் பரிசுகள் வென்றிருக்கிறேன்.. பாட்டு, டான்ஸ், விளையாட்டு இவைகளை தவிர மற்ற போட்டிகள் அனைத்திலுமே கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றுவிடுவேன்.

சன் டிவி நிர்மலா பெரியசாமி
இதுதான் ஊடகத்தில் எனக்கு அடித்தளமிட்டது.. ஊடகத்தில் எனக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்தன.. சக கலைஞர்கள் மிகுந்த மரியாதை தருவார்கள்.. மக்கள் மத்தியில் இன்று எனக்கான அங்கீகாரம் இன்றுவரை அப்படியே உள்ளது.. இதனால் இன்னமும் நான் லைம்லைட்டில் இருப்பது போலவே எனக்கு தெரிகிறது. இந்த ஊடக வெளிச்சம்தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியது.
என் அப்பா ஒரு மார்க்சியவாதி என்பதால் நிறைய புத்தகங்களை படிக்க வைப்பார்.. ஒரு நாளைக்கு ஆயிரம் பக்கம் வரை படிப்பேன்.. வாசிப்புப் பழக்கம் அதிகம் இருந்தது.. அதேபோல மீடியாவிற்கு வருவதற்கு தேவையான தகுதிகளுடன் தான் வந்தேன்..
ஜெயலலிதா அம்மா
2004-ல் சன் டிவியில் இருந்து நான் விலகிவிட்டேன். அப்போது நான் ஏன் அங்கிருந்து நின்றேன் என்பது குறித்து ஜெயலலிதா அம்மா, தெரிந்துகொள்ள ஆசைப்பட்டுள்ளார், அதனால் என்னை நேரில் வரச்சொல்லி தகவல் வந்தது. சிட்டிங் முதல்வராக இருந்த முதல்வர் ஜெயலலிதாவை அன்றுதான் முதலில் சந்தித்தேன்.
இந்த சந்திப்பு 55 நிமிடங்கள் நீடித்தன.. அது ஒன் டு ஒன் சந்திப்பு,.. என்னுடைய குடும்ப பின்னணி, குடும்ப விவரங்கள், கணவர், சன் டிவியில் என்ன நடந்தது என்று அனைத்து விவரங்களையும் கேட்டார்.. கடைசியாக, "உங்கள் லட்சியம் என்ன?" என்று கேட்டார்.. இப்படி திடீர்னு கேட்டதுமே எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
உடனே ஜெயலலிதாம்மாவே, "அரசியல் என்றால் எங்கள் கட்சியில் சேர்ந்துவிடுங்கள், மீடியா என்றால் ஜெயா டிவியில் சேர்ந்துவிடுங்கள்" என்று 2 சாய்ஸையும் அவரே தந்தார்.
கலைஞர் கேட்ட கேள்வி
நான் சன் டிவியில் இருந்தபோது, அரசு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி கொண்டிருந்தேன். அப்போது, திமுக தலைவர் கலைஞரை அறிவாலயத்தில் சந்திக்கும் வாய்ப்பு அதிகம் கிடைக்கும்..
ஒருமுறை என்னிடம் "அரசியலுக்கு வர்றீங்களா?, விருதுநகர் மாநாட்டில் பேசறீங்களா? என்று கலைஞர் கேட்டார்.. அங்கிருந்தவர்கள் எல்லாரும், "சரின்னு சொல்லுங்க" என்றனர்..
ஆனால், அரசியல் என்பது மிகப்பெரிய விஷயம், வீட்டில் யாருடனும் கலந்தோசிக்காமல் எப்படி பதில்சொல்வது? என்று யோசித்தேன்.. அதனால் கலைஞர் கேட்டபோதுகூட என் முடிவை உடனடியாக சொல்லவில்லை.
நட்சத்திர பேச்சாளர்
அதற்கு பிறகுதான், ஜெயலலிதா அம்மாவை சந்தித்து பேசினேன்.. திமுகவில் உறுப்பினராககூட நான் இல்லாத நிலையில், முதல் முதலில் நான் சேர்ந்த அரசியல் இயக்கமே அதிமுகதான், அம்மாவின் கையில்தான் உறுப்பினர் அட்டையை பெற்றேன்.
அந்த நேரத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தல் என்பதால் எனக்கு அப்போது நட்சத்திரப் பேச்சாளராக பொறுப்பை தந்தார் அம்மா..
ஆனாலும், வெளியூர் செல்லணுமா? என்று நான் தயங்கினேன்.. "அம்மா உங்களுக்கு பொருத்தமான பொறுப்பை தந்துள்ளார்.. உங்களை கவனமாக பார்த்துக்கொள்ள எங்களிடம் சொல்லி உள்ளார்கள்.. அதனால் தைரியமாக வெளியூர் பிரச்சாரங்களை மேற்கொள்ளுங்கள் என்று உடனிருந்தவர்கள் தைரியம் சொன்னார்கள்.. இப்போதுவரை நாங்கள் குடும்பமாகவே உள்ளோம்.
போயஸ் கார்டனில் அம்மாவின் கார்
போயஸ் கார்டனில் அம்மாவின் காரை பார்த்தாலே எனக்கு கண்ணீராய் வந்துவிடும்.. எப்படி அவ்வளவு பிரியம் அவர்மீது எனக்குள் வந்தது என்றே தெரியவில்லை..
ஜெயலலிதா அம்மா மருத்துவமனையில் இருந்த அந்த 72 நாட்களை எப்படி கழித்தோம் என்றே தெரியவில்லை.. அழுதுட்டே இருப்பேன்.. கடைசியாக ராஜாஜி பவனில் படிக்கட்டில், அவரது உடலின் அருகில் உட்கார்ந்திருக்கக்கூடிய பாக்கியம் எனக்கு கிடைத்தது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications