"Su from So" இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஹாரர் காமெடி படம்.. ஓடிடியில் ரிலீஸ்
சென்னை: கன்னட சினிமாவில் வெளியாகி அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்ட Su from So திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸாகி இருக்கிறது. குடும்ப வன்முறைக்கு எதிரான திரைப்படத்தை ஹாரர் காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது.
அண்மையில் கன்னட சினிமாவில் இருந்து வெளியாகிய Su from So என்ற திரைப்படம் கர்நாடகாவையே தெறிக்கப்பட்டுள்ளது. சுலோச்சனா ஃப்ரம் சோமேஷ்வரா என்பதன் சுருக்கமே Su from So. வெள்ளந்தியான மனிதர்கள் நிறைந்த ஒரு குக்கிராமத்தில் வாழும் அசோகா என்ற இளைஞரை, ஒரு பெண்ணின் ஆவி பிடித்திருப்பதாக மொத்த ஊரும் நம்புகிறது.

அவ்வாறு நம்பப்படும் அந்த ஆவி, அந்த கிராமத்தையும், அந்த இளைஞனையும், அவரின் குடும்பத்தையும் என்னவெல்லாம் செய்கிறது என்பதை அட்டகாசமான காமெடியுடன் கூறி இருக்கின்றனர். இந்தியாவில் அதிகம் பேசப்படாத குடும்ப வன்முறைக்கு எதிரான விஷயத்தை ஜாலியாக சொல்லி சென்றுள்ளனர். இதனால் இந்தப் படம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
இயக்குநர் ராஜ் பி ஷெட்டி தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை ஜேபி துமினாட் இயக்கி இருக்கிறார். இந்தப் படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. இதனால் Su from So திரைப்படம் ஓடிடி ரிலீஸிற்காக காத்திருந்தனர். அதற்கேற்ப ஜூலை மாதம் ரிலீஸான திரைப்படம், 6 வாரங்களுக்கு பின் ஓடிடியில் ரிலீஸாகி இருக்கிறது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸாகி இருக்கும் இந்த படம் தமிழ் அல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கிறது. வழக்கமாக ஓடிடியில் ரிலீஸாகும் ஒரு திரைப்படம், இந்தியாவின் முக்கிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படும். ஆனால் இந்த படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்யாதது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ் சினிமா வட்டாரத்தில் விசாரித்த போது, Su from So படத்தின் தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர் ஒருவருக்கு ரீமேக் உரிமையை விற்றிருக்கிறார். இதனால் விரைவில் அந்தப் படம் தமிழில் எடுக்கப்பட உள்ளது. இதன் காரணமாகவே ஓடிடியில் தமிழில் ரிலீஸாகவில்லை என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் என்றும் ட்ரெண்டில் இருக்கும் ஜானர் என்றால், அது ஹாரர் காமெடிதான். இதனால் தமிழிலும் சக்கைப்போடு போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications