சீரியல்ல என்கூட நடிக்க முடியாதுன்னு ராதிகா சொல்லிட்டாங்க.. அதற்கு பிறகு நடந்த சம்பவம்.. நடிகர் சுப்பு பேட்டி
சென்னை: சில நேரங்களில் ஒரு நடிகருக்கு கிடைக்கும் வாய்ப்பு அவர் திட்டமிட்டு போனதாகவே இருக்காது. ஆனால் திடீரென ஒரு அழைப்பு 2 நாள் மட்டும் நடித்துக் கொடுத்துவிட்டு பொங்க என்று தொடங்கி, எதிர்பாராத விதமாக அந்த கேரக்டர் பல மாதங்கள் பயணிக்கும் அளவுக்கு பெரிதாக மாறி இருக்கிறது என நடிகர் சுப்பு பஞ்சு அருணாச்சலம் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
குறிப்பாக அரசி சீரியலில் நடிகை ராதிகாவுடன் நடித்த அனுபவம் குறித்து அவர் பேசுகையில், நான் அந்த சமயத்தில் சினிமாவில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன். அப்போது தான் எனக்கு சீரியலில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் வந்து கூப்பிட்டார். நானும் வரவில்லை சினிமாவில் எனக்கு ஏகப்பட்ட பிரச்சனை இருக்கிறது என்று சொன்னேன்.
நடிகர் சுப்பு பஞ்சு அருணாச்சலம்
அப்போது அந்த கேரக்டருக்கு வேற நடிகர் வர வேண்டியது அவர் வரவில்லை. 2 நாள் மட்டும் நீ வந்து நடித்துக் கொடுத்து விட்டு போ... ராதிகா மேடத்தோட நடிக்கணும் இங்கிலீஷ் பேசுற மாதிரி ஒரு கேரக்டர் வேற யாராவது தப்பா பேசினா ராதிகா கோபப்பட்டு வாங்க என்று இயக்குனர் சொன்னதும் சரி என்று சுப்பு பஞ்சு அங்கு போனாராம். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போனதும் அவருக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது.
நடிக்க முடியாதுன்னு சொன்ன ராதிகா
இவரை பார்த்ததும் ராதிகா இவன் கூட நடிக்கணுமா? இவன் கூட எல்லாம் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம். அதைப்பற்றி சிரித்தபடியே சுப்பு சொல்லி இருக்கிறார். எங்களுக்கு ஏற்கனவே பழக்கம் இருப்பதால் அக்கா என் கூட நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. பிறகு 2 நாள் தானே சரி என்று நடித்தாங்க. அதற்குப் பிறகு ஒரு நாள் இயக்குனர் எனக்கு போன் செய்து அந்த கேரக்டரை முடிக்க வேண்டும் அதனால இன்னொரு நாள் வா என்று சொன்னார்.

ராதிகாவின் மனமாற்றம்
நானும் சரின்னு போய் நடித்துக் கொடுத்துவிட்டு வந்தேன். அதற்குப் பிறகு அந்த கேரக்டருக்கு இருந்த ரீச் பார்த்து ராதிகா அக்காவே அந்த கேரக்டரை இன்னும் ஸ்டாங் பண்ணலாம் என்று சொல்லி இருக்காங்க. அதற்கு பிறகு தான் அந்த கேரக்டர் 300 எபிசோடு வரைக்கும் போனது. அந்த சீரியலில் நான் நடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் மலேசியாவுக்கு ஒரு நிகழ்ச்சிக்காக போயிருந்தோம். அப்போது ராதிகா, நான், இன்னும் ஒரு சிலர் மட்டும் போயிருந்தோம்.
ரசிகர்கள் அன்பு
எல்லோரும் ஒரு இடத்தில் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு சில ஆடியன்ஸ் அங்கே வந்து கொண்டு இருந்தாங்க. உடனே நான் ராதிகா அக்காவிடம் நீங்க இங்கிருந்து போய் விடுங்க அவங்க எல்லாரும் இங்க சூழ்ந்து விட்டார்கள் என்றால் தேவையில்லாத கூட்டம் வந்துடும் என்று சொன்னேன். சரின்னு அவங்களும் நகர்ந்து போனாங்க. ஆனா அந்த கூட்டம் வேறு திசையில வர தொடங்கிட்டாங்க. என்ன இவங்க இப்படி வராங்கனு நினைச்சுட்டு இருக்கும்போதே அவங்க என்கிட்ட வந்து சார் ஒரு போட்டோ எடுக்கணும் என்று கேட்டார்கள்.
ராதிகா சொன்ன வார்த்தை
எனக்கு ரொம்ப ஷாக் எனக்கு இந்த சீரியல் இவ்வளவு பிரபலம் கொடுத்திருக்கிறதா? என்று எனக்கு அப்போதான் தெரிந்தது. அப்புறம் அந்த கேமராவை அக்காகிட்ட கொடுத்து ஒரு போட்டோ எடுக்க சொல்ல... அவங்க செருப்பு பிஞ்சிரும்னு சொன்னாங்க... உனக்கு வந்திருக்கும் வாழ்க்கையை பாரு என்று நக்கல் பண்ணிட்டு போனாங்க. அதை எல்லாம் மறக்கவே முடியாது. அந்த சீரியலை பார்த்துட்டு எங்க அப்பா கூட உனக்கு நடிக்க தான் புடி ச்சிருக்குன்னா நீ ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கலாமே என்று கேட்டார். அப்பாக்கு அந்த சீரியல் ரொம்பவே பிடிக்கும் என்று சுப்பு பஞ்சு அருணாச்சலம் பேசியிருக்கிறார்.
நடிகர் சுப்பு பஞ்சுவின் இந்த அனுபவத்தை கேட்டால் சினிமா மற்றும் சின்னத்திரையில் ஒரு நடிகரின் பயணம் எப்போது எந்த திசையில் மாறும் என்று சொல்லவே முடியாது என்பது தான் தெரிகிறது. சுப்புவின் அப்பா பஞ்சு அருணாச்சலம் தமிழ் சினிமாவின் முக்கியமான எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒருவர். கவிஞர் கண்ணதாசனின் உறவினரும் அவருடைய வழிகாட்டுதலை பெற்றவருமான பஞ்சு அருணாச்சலம் ஏராளமான படங்களுக்கு கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதியவுடன் பல படங்களை தயாரித்தும் இயக்கியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
