அந்தப்புரம் அம்பலம்.. நடிகை, நடிகர்கள் கும்மாளம்.. விஜய் சேதுபதி அட்வைஸ் மட்டும் பண்ணாதீங்க: பிரபலம்
சென்னை: "நடிகர்கள் நேரிலும், நிஜத்திலும் ஒரே மாதிரி இருக்கணும்.. சினிமாவில் நீங்கள் பேசுவது நிழல் வசனம்தான்.. ஆனால், நிஜத்தில் வேறு மாதிரியாக இருக்கு.. மேடைப்பேச்சு வேறு மாதிரியாக இருக்கிறது" என்று விமர்சனம் செய்து காட்டமாக பேசியிருக்கிறார்.
Sankranthiki Vasthunam என்ற தெலுங்கு படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி நல்ல வசூல் தெலுங்கில் பெற்றிருந்தது.. இதனை சென்னையில் பார்ட்டி வைத்து படக்குழுவினர் கொண்டாடி இருக்கிறார்கள்.. இந்த நிகழ்வில் விஜய் சேதுபதி கலந்து கொண்டுள்ளார். இந்த பார்ட்டி, மதுவிருந்து போல இருப்பதாகவும், அது தொடர்பான போட்டோக்கள் வெளியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, BBTCinema என்ற யூடியூப் சேனலில், மூத்த பத்திரிகையாளர் சேகுவேராவிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்னதாவது:
மதுபான விருந்துகள்: "மதுபான விருந்துகள் நடப்பதை குற்ற நடவடிக்கையாக நான் சொல்லவில்லை.. மது என்பது சமூகத்துக்கு கேடு என்பது எல்லாருக்குமே தெரியும்.. ஆனால், இதுபோன்ற பிரபலங்கள், குடிப்பெருமையை பொதுமேடையில் பேசுவது, தனிப்பட்ட விழாக்களில் அந்த போட்டோக்களை எடுத்து வெளியிடுவது என்பது சமூகத்தில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் நினைக்க வேண்டும்.
தனிப்பட்ட ஒருவரை நாம் எப்படி கேள்வி எழுப்பலாம்? என்று நீங்கள் சொல்லலாம்.. ஆனால், அந்த தனிப்பட்ட விஷயத்தை, இங்கே பொதுகாட்சிக்கு கொண்டுவந்தீர்கள் என்றால் அது சிக்கலாகிவிடும். யாரோ ஒரு நபர் குடித்துவிட்டு, சாலையில் படுத்து கிடந்தாலோ அல்லது அதை போட்டோ எடுத்து வெளியிட்டாலோ, யாரும் அதை கேள்வி கேட்க போவதில்லை.. அதை நீங்கள் காட்சிப்படுத்தினாலும், அதை பார்க்கக்கூட மாட்டார்கள்
குத்தாட்டம்: ஆனால், நடிகர், நடிகைகள் குடிக்கவில்லை என்றாலும்கூட, மதுபானம் அருந்துவது போலவோ, குத்தாட்டம் போடுவது போலவே காட்சிகள் வெளியானாலேயே அது கவனம் பெறும்.. மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு என்று தெரிந்தும்தானே, பொதுமக்கள் பார்வைக்கு அதை கொண்டு வருகிறீர்கள்?
30 வருடத்துக்கு முன்பு எனக்கு நடந்த அனுபவம் இது.. அவர் மிகப்பெரிய எழுத்தாளர்.. சமூக நீதி, சமூக அவலத்தை பற்றிதான் எழுதுவார்.. அவருடன் 2 மாதம் சேர்ந்து நான் பயணிக்கும் சூழ்நிலை வந்தது.. இவர் எழுதுவதற்கும், நடந்து கொள்வதற்கும் சம்மந்தமில்லையே என்று அவரை பார்க்கும்போது எனக்குள்ளேயே கேள்வி எழுந்தது.
விஜய் சேதுபதி: அப்படிப்பட்டவர்தான் விஜய் சேதுபதி.. தத்துவங்களை யார் வேணும்னாலும் பேசலாம்.. யதார்த்தங்களை பேசலாம்.. ஆனால், அதுபோல வாழ்ந்து காட்டணும் இல்லையா? விஜய் சேதுபதி குடித்தாரா? இல்லையா? என்பது நமக்கு தெரியவில்லை. ஆனால், வெளிவந்த அந்த போட்டோ காட்சிகளை, அவரது உறவினர்களோ, குடும்பத்தினரோ பார்க்கும்போது, நிச்சயம் அதை பாராட்ட போவதில்லை. தனிப்பட்ட முறையில் இதை கொண்டாடியிருந்தால், இந்த போட்டோக்கள் எப்படி வெளியே வந்தது?
உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை நீங்கள் எப்படி வேணும்னாலும் வாழ்ந்து கொள்ளுங்கள்.. ஆனால், மக்களுக்கு அறிவுரை சொல்ல மட்டும், தயவுசெய்து இங்கே வந்துடாதீங்க.. உங்களைவிட எத்தனையோ சிறந்த ஆளுமைகள் இங்கு பல்துறைகளில் இருக்கிறார்கள்..
நடிகர்கள் என்பதாலேயே, எல்லா தகுதியும் வந்துவிட்டதாக அர்த்தமில்லை. பிரபலம் என்பதாலேயே, எல்லாருக்கும் அறிவுரை சொல்ல தகுதி வந்துவிட்டது என்று நினைத்து கொள்ளாதீர்கள்.. இது தகுதி கிடையாது,..
நிழல் வசனம்: நேரிலும், நிஜத்திலும் ஒரே மாதிரி இருக்கணும்.. சினிமாவில் நீங்கள் பேசுவது நிழல் வசனம்தான்.. ஆனால், நிஜத்தில் வேறு மாதிரியாக இருக்கு.. மேடைப்பேச்சு வேறு மாதிரியாக இருக்கிறது.. இதுபோன்ற பார்ட்டி நடக்கும்போதே சுசித்ரா போன்றோர் இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.. ஆனால், 10 வருஷம் கழிச்சு வந்து, இந்த நிகழ்வை சொல்லுவாங்க போல" என்றெல்லாம் பேசியிருக்கிறார்
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications