நடிகை சமந்தா- விஜே பிரியங்கா வாழ்க்கையில் இப்படி ஒரு ஒற்றுமையா? நெகிழ்ச்சி பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில சந்தோஷங்களை எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் மறைத்து வைக்க முடியாது. அப்படித்தான் இப்போது சின்னத்திரை ரசிகர்களின் செல்லமான விஜே பிரியங்காவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கர்ப்ப காலத்தில் வயிறு தெரியும் வகையில் பிரியங்கா மற்றும் சமந்தா வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

பிரியங்கா ஏற்கனவே ஜூன் மாதத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை கணவர் வசி- யுடன் வீடியோ மூலம் அறிவித்திருந்தார். இருவரும் மாம், டேடி என்று எழுதப்பட்ட தொப்பிகளை அணிந்து டான்ஸ் ஆடியபடி வெளியிட்ட வீடியோயும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இப்போது கர்ப்ப கால போட்டோக்களையும் அவர்கள் வெளியிட்டிருப்பதால் அந்த மகிழ்ச்சி இன்னும் அதிகமாக இருக்கிறது.

Samantha

பிரியங்கா வெளியிட்ட பதிவு

பிரியங்காவிற்கு இது ஒரு புதிய வாழ்க்கை. பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான கட்டம். முதல் திருமணம் முடிவுக்கு வந்த பிறகு கடந்த 2025 ஏப்ரல் 16ஆம் தேதி டிஜே மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டலான வசியை திருமணம் செய்து கொண்டார். வசிக்கு ஏற்கனவே ஒரு திருமணம் முடிந்து அதில் ஒரு மகள் இருக்கிறார். ஒரு காலத்தில் பிரியங்கா திருமணம் பற்றி தேவையில்லாத வதந்திகள் கூட வந்தது. அதற்கு பிரியங்கா தன்னுடைய பாணியில் பதில் கொடுத்திருந்தார்.

Samantha

கர்ப்பகால போட்டோ

இப்போது அதை எல்லாம் கடந்து அம்மாவாக போகிறேன் என்று சந்தோஷத்தில் இருக்கும் பிரியங்காவிற்கு பலரும் வாழ்த்துக்கள் சொல்லி வருகிறார்கள். இதே நேரத்தில் இன்னொரு பிரபல நடிகையின் வாழ்க்கையில் இதே மாதிரியான புதிய அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. அது வேறு யாரும் இல்லை நடிகை சமந்தா தான். இருக்கும் சமீபத்தில் தான் இரண்டாவது திருமணம் முடிந்தது. தற்போது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள்.

Samantha

புதிய வாழ்க்கை

இருவருமே ஏற்கனவே ஒரு திருமண வாழ்க்கையை கடந்து வந்தவர்கள் என்பதால் இந்த புதிய வாழ்க்கை இருவருக்குமே இன்னொரு தொடக்கமாக பார்க்கப்படுகிறது. சமந்தா இப்போது கர்ப்ப காலத்தில் சீமந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார். அவருடைய குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்பதற்காக அவருடைய உறவினர்கள், நண்பர்கள் அவருக்கு எளிமையாக வளைகாப்பு நடத்தி வைத்திருக்கிறார்கள். இது புகைப்படங்களை அவர் பகிர்ந்தது சோசியல் மீடியாவில் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வருகின்றனர்.

Samantha

இருவருக்கும் வாழ்த்துக்கள்

அதைத்தொடர்ந்து பிரியங்காவும் தன்னுடைய கர்ப்ப கால வயிறு தெரிகிற மாதிரி புகைப்படங்களை வெளியிட்டதும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிகிறார்கள். பிரியங்கா சின்னத்திரையில் பல வருடங்களாக ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார். பிக் பாஸ் முதல் குக் வித் கோமாளி வரை பல நிகழ்ச்சிகளில் தன்னுடைய கலகலப்பால் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அதுபோல சமந்தாவும் பெரிய திரையில் பல்வேறு கேரக்டரில் நடித்து இந்திய அளவில் பிரபலமாக இருக்கிறார். சின்னத்திறையிலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இப்போது இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையைப் பற்றி தான் பேசப்பட்டு வருகிறது.

Samantha
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+