தாய் 8 அடி.. மகனோ 16 அடி.. அசத்தும் சுஜிதாவின் மகன்!
சென்னை: சுஜிதா தனது மகனுடன் இன்ஸ்டாகிராமில் விதம் விதமாக கலக்கிக் கொண்டிருக்கிறார். கிடைத்துள்ள இந்த கொரோனா கேப்பை சரியான முறையில் அம்மாவும் மகனும் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்த லாக்டவுன் டைம்ல பொதுவா எல்லாருக்கும் வீட்டில் இருக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கு. திரைப்படத்துறையினர் இதற்கு விதிவிலக்கு அல்ல. அனைவரும் வீட்டில் இருப்பதால் தங்களுடைய குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடுவதற்கும் அவர்களுக்கு நேரம் கிடைத்திருக்கிறதாம்.
அந்த நேரத்தை பயனுள்ளதாக குழந்தைகளுக்காகவே செலவிட்டுக் கொண்டிருக்கிறார் நம்ம சுஜிதாவும். அவரும் அவரது மகனும் இணைந்து இன்ஸ்டாகிராமில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்

பாண்டியன் ஸ்டோர் சுஜிதா
சுஜிதா என்றதுமே நிறைய பேருக்கு தெரியும் சின்ன வயதில் இருந்தே சினிமாக்களிலும் இப்ப சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் கலக்கிக் கொண்டிருக்கிறார். தனது ஐந்து வயதிலேயே பூவிழி வாசலில் வாய் பேசமுடியாத பையனாக நடித்து இருப்பார். அந்த படத்தில் சத்யராஜ் உடன் சேர்ந்து நடித்துவிட்டார். அதன்பிறகு நிறைய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. நடிகர் அஜித் குமார் வாலி படத்தில் நடித்திருப்பார்.

அஜீத்தின் பாசக்கார தங்கச்சி
அதன்பிறகு இன்றுவரையிலும் அஜித்தை இவர் அண்ணா என்றுதான் கூப்பிடுவார். அந்த அளவுக்கு இவர் அனைவருடனும் பாசமாக பழகுவார்.
முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இவர் ஓரளவிற்கு நடித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இப்போ சீரியல்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அதுவும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இவர்தான் குடும்பத்தலைவி நாட்டாமையாக நடித்திருக்கிறார்.

மகனுடன் இணைந்து அசத்தல்
இந்த கேரக்டர் இவருக்கு முழுமையாகவே பொருந்தியிருக்கிறது. அமைதி சொரூபமாகவும் குடும்பத்தை காப்பதற்காக இவர் ஒவ்வொரு விஷயங்களையும் யோசித்து யோசித்து செய்து கொண்டிருக்கிறாராம் அந்த சீரியலில். இவர் விஜய் டிவியில் மிஸஸ் சின்னத்திரை மூலம் தனது மகனுடன் சேர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவருக்கும் இவருடைய மகனுக்கும் எந்த அளவுக்கு பாசமும் புரிதலும் உள்ளது என்று மக்களுக்கு காட்டினார்கள். இவருடைய மகனும் இவரைப்போலவே அழகாகவும் அறிவாகவும் இருக்கிறார்.

பிறவி நடிகை
சுஜிதா பிறந்த 41வது நாளிலேயே நடிக்க வந்தவராம். ஒரு படத்தில் கே ஆர் விஜயா வின் பேத்தியாக நடித்திருக்கிறார். அப்படி பிறவியிலேயே நடிகை இவர். அப்படிப்பட்ட இவரின் பையன் எப்படி இருப்பார்.. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாய்கிறது. அம்மாவான பிறகுதான் சுஜிதா வாழ்க்கையின் முழுமையை அடைந்தாராம். ஒரு பெண் தாயாக ஆனால் தான் அவள் பெண் என்ற முழுமையை அடைகிறாள் என்று கூறியிருக்கிறார்.

நல்ல நல்ல விஷயம்
சுஜிதா 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் தன் குடும்பத்தோடு குடும்பத்துக்காக வாழ்வது என்றால் பெரிதாக நினைக்கிறாராம்.
இப்ப சீரியல் இல்லாத இந்த நேரத்துல பயனுள்ள ஒரு வேலையை பண்ணிக் கொண்டிருக்கிறார் . தன் மகனுடன் இணைந்து கதை கேளு கதை கேளு அப்படிங்கிற ஒரு யூடியூப் சேனல் ஓபன் பண்ணி கலக்கிவிட்டு வராங்க. இதில் குழந்தைகளுக்கான கதைகளை கூறி குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் ரசிக்க வைத்துள்ளன.

மகனின் யூடியூப் சானல்
வீட்டில் இருந்து கொண்டு பயனுள்ளதாக இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறிக்கொண்டு வருகின்றனர். இந்த லாக்டோன் டைம்ல சிலர் கவர்ச்சி புயலாக மாறி இணையதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த மாதிரி பயனுள்ள தகவல்களும் இணையதளத்தில் பரவிக்கொண்டிருக்கிறது. இதை பார்க்கும்போது ரசிகர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகள்கூட பயனுள்ளதாக இருக்கிறது. சுஜிதாவின் ஜெராக்ஸ் காப்பி ஆக இருக்கும் அவரது மகன் குழந்தைகளுக்கும் பிடித்தவராக மாறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications