கணவர் இறக்கும்போது கேட்ட வார்த்தை.. மறுமணம் செய்யாமல் சாதித்த சுமதி ஸ்ரீ... நெகிழ வைக்கும் விளக்கம்
சென்னை: பிரபல நடிகையான சுமதி ஸ்ரீ சின்னத்திரை, வெள்ளித்திரை என தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் தன்னுடைய குடும்ப வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
மூன்று வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட சுமதி ஸ்ரீ திருமணத்திற்கு பிறகு சில வருடங்களிலேயே தன்னுடைய கணவர் மாரடைப்பால் இறந்து போன பிறகு தான் பட்ட கஷ்டங்கள் குறித்து அதில் பேசியிருக்கிறார்.

அத்தோடு தான் எதனால் மறு திருமணம் செய்யவில்லை என்பது பற்றியும் அந்த வீடியோவில் சுமதி ஸ்ரீ பேசி இருக்கிறார்.
அந்த வகையில் பல நடிகர்கள் சினிமாவிலும், சீரியல்களிலும் சந்தோஷமாக தன்னுடைய முகத்தை காட்டிக் கொண்டிருந்தாலும் அவர்களுடைய நிஜ வாழ்க்கை சோகமும் கண்ணீரும் நிறைந்ததாக தான் இருக்கிறது. அது பல பேருக்கு தெரியாது.
அந்த வகையில் ஒருவர் தான் நடிகை சுமதி ஸ்ரீ. இவர் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சேனல்களிலும் பல சீரியல்களில் நடித்து பிரபலமடைந்து இருக்கிறார்.
சீரியல்களில் மட்டும் அல்லாமல் பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். 13 வயதில் இருந்து சினிமாவில் நடிக்க தொடங்கிய சுமதி ஸ்ரீ இப்போது சீரியல்களில் மட்டும் தான் அதிகமாக கவனத்தை செலுத்தி வருகிறாராம். கடைசியாக நடிகர் தனுசுக்கு அம்மாவாக நடித்தது அதற்குப் பிறகு எந்த சினிமாவிலும் நான் நடிக்கவில்லை என்று சுமதி ஸ்ரீ கூறியிருக்கிறார். அதோடு சீரியலில் நடிப்பதே எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. நடிக்கப் போனால் அந்த மூன்று மணி நேரம் நான் ரொம்பவே சந்தோசமாக இருப்பேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அத்தோடு அவர் பேசுகையில் தான் 13 வயதில் சினிமாவில் நடிக்க தொடங்கி நடிக்க வந்தேன். நடிப்பு என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். வீட்டில் அப்பா, பெரியப்பா, அம்மா எல்லாருமே நடிகர்கள் என்பதால் நான் நடிப்பது யாரும் தடை செய்யவில்லை. வீட்டில் கண்ணாடி முன்பு நானாக பாட்டு பாடி ஆடிக்கொண்டே இருப்பேன். அதற்கு பிறகு எனக்கு வாய்ப்புகள் வந்த பிறகு நடிப்பது எனக்கு பெரிய கஷ்டமாகவும் இல்லை. நான் துணை நடிகையாக தான் நடித்துக் கொண்டிருந்தேன் அதனால் எந்த வதந்திகளிலும் நான் சிக்கவில்லை.
சினிமாவில் மட்டுமல்லாமல் நாடகங்களிலும் நான் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தான் என்னுடைய கணவர் என்னை ஒரு நாடகத்தில் நடிக்க வைப்பதற்காக பேச வந்தார். முதல் முறையாக அவரோடு அந்த நாடகத்தில் நடித்தபோதே இங்கு இருவருக்கும் ஒரு பிடித்தம் ஏற்பட்டது. பிறகு நாங்கள் காதலிக்க தொடங்கினோம்.
எங்களுடைய காதல் யாருக்கும் தெரியாது. நாங்கள் காதலித்தாலும், எங்கேயும் போய் பேசிக் கொண்டதோ வெளியே சுற்றியதோ கிடையாது.அந்த நேரத்தில் எங்கள் வீட்டில் அவரை பிடித்து போக திருமணம் செய்து வைக்கலாம் என்று சொன்னார்கள். ஆனால் அவருடைய வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.

பிறகு போராடி தான் எங்களுடைய கல்யாணம் நடந்தது. ஆனாலும் நான் கல்யாணத்துக்கு பிறகு நடிக்க கூடாது என்று என்னுடைய கணவர் வீட்டில் சொல்லி இருந்தனர். என்னுடைய கணவரும் கூட அதையேதான் விருப்பப்பட்டார். அதனால் நான் நடிப்பதை விட்டு விட்டேன். திருமணத்திற்கு பிறகு அவருடைய டிரஸ் எல்லாம் அயன் பண்ணி அவர் நடிக்கும் இடத்திற்கு எடுத்துட்டு போவேன். அப்படி சந்தோஷமாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் தான் எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு எட்டு வயது இருக்கும்போது என்னுடைய கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. முதல் அட்டாக் வந்த நேரத்திலேயே அவர் இறந்து விட்டார். ஆனால் அவர் இறப்பதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்பு என்னிடம், "சுமதி நீ ரொம்ப அன்பானவள். அதனால நான் இறந்தாலும் நீ யாரையும் கல்யாணம் பண்ண கூடாதுன்னு" சொன்னார். அதுபடி தான் அவர் இறந்த பிறகும் நான் கல்யாணம் பண்ணாமலே வாழ்ந்தேன். அவர் இருக்கும்போதே நான் நடிப்பை விட்டதும் எங்க அம்மா அப்பா எவ்வளவோ சொன்னார்கள்.
நடிப்பை விடாத, பிறகு நீ பத்து பாத்திரம் தேய்க்க தான் போகணும் என்று சொன்னாங்க. அது மாதிரி தான் என் கணவரின் மரணத்திற்கு பிறகு என்னுடைய நிலைமையும் ஆனது. எனக்கு நடிப்பு மட்டுமே தெரியும் என்பதால் வேற வழி இல்லாமல் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். அதற்கு பிறகு தான் எனக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பெரிய கஷ்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் என்னுடைய மகளை நல்லபடியாக படிக்க வைத்து ஆளாக்கி விட்டேன்.
என்னுடைய கணவரின் மரணத்திற்கு பிறகு பல வரன்ங்கள் வந்தது. நான் எங்க அம்மாவிடம் உறுதியாக சொல்லி விட்டேன். நான் இன்னொரு கல்யாணம் பண்ண மாட்டேன். என்னுடைய குழந்தையை வரப்போறவர் எப்படி பார்ப்பார் என்று தெரியாது. அதனால் வேண்டாம் என்று சொன்னேன் அதனாலயே அவர்கள் என்னை தொந்தரவும் செய்யவில்லை. இப்படியே நாட்கள் போய்விட்டது என்று அந்த பேட்டியில் நடிகை சுமதி ஸ்ரீ பேசியிருக்கிறார்.
-
அறந்தாங்கி நிஷா ஓபனாக சொன்ன ஒரு வார்த்தை.. அறிவே இல்லையா இப்படியா பேசுறது? மேடையிலேயே திட்டிய நடிகர் -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
Happy Raj OTT: ஓடிடிக்கு வரும் ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்... எந்த தளத்தில், எப்போ பார்க்கலாம்? லீக்கான தகவல் -
நடிகர் பிரகாஷ் ராஜின் அம்மா திடீர் இறப்பு.. இவ்வளவு பெரிய சோகங்களை கடந்து வந்தவரா அவர்! நெகிழ வைத்த கதை -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம்












Click it and Unblock the Notifications