குணசேகரனுக்கு கிடைக்காத "சிறந்த வில்லன் விருது”..யாருக்கு கிடைச்சிருக்கு தெரியுமா?திட்டும் ரசிகர்கள்
சென்னை: சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் சன் குடும்ப விருதுகள் 2023-க்கான சூட்டிங் முடிவடைந்தது.
அதைத்தொடர்ந்து எந்தெந்த நடிகர்களுக்கு என்னென்ன விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தற்போது சிறந்த வில்லன் விருது கயல் சீரியல் தர்மலிங்கத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது குறித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
பொதுவாக சின்னத்திரையில் சன் டிவி சீரியல்களுக்கு என்று தனி மதிப்பு உண்டு. இந்த சேனல் பல வருடங்களாக ரசிகர்களின் மத்தியில் தனக்கான தனி இடத்தை யாரும் அசைக்க முடியாதபடி இருந்து வருகிறது. சன் டிவிக்கு போட்டியாக பல சேனல்கள் வந்து விட்டாலும் டிஆர்பியில் இப்போதும் சன் டிவி சீரியல்கள் தான் டாப் இடத்தை பிடித்துக் கொண்டிருக்கின்றது.
புதியது புதிதாக பல நிகழ்ச்சிகள் சின்னத்திரையில் அறிமுகமாகி கொண்டிருக்கும் நேரத்திலும் சன் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் தனித்துவமான வரவேற்பு இருக்கும் நிலையில் ப்ரைம் டைம் சீரியல்களுக்கு மேலும் பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது
அந்த வகையான சீரியல்கள் தான் டிஆர்பி யிலும் முன்னணியில் இருக்கின்றது. இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் சன் குடும்ப விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல இந்த 2023 ஆம் ஆண்டுக்கான சன் குடும்ப விருதுகளுக்கான சூட்டிங் முடிவடைந்து இருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

அந்த வகையில் சன் டிவி சீரியல்களுக்கு ரசிகர்களின் ஓட்டு அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் தற்போது வெளியான புகைப்படம் தான் ரசிகர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது வேறொன்றும் இல்லை சிறந்த வில்லனுக்கான விருது இந்த முறை கயல் சீரியல் தர்மலிங்கத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே சன் டிவி சீரியல் வில்லன்களில் அதிகமான ரசிகர்களை கவர்ந்தவராக குணசேகரன் இருக்கிறார்.குணசேகரன் வேற யாரும் இல்லை. எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து தான். இவர்தான் இப்போது தன்னுடைய சொந்தப் பெயரை மறந்து குணசேகரனாகவே அனைவருடைய மனதையும் கவர்ந்திருக்கிறார். "ஏய் இந்தாம்மா" என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இவரைப் போலவே பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது சன் டிவியில் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த வில்லன் விருது இவருக்கு வழங்கப்படாமல் கயல் சீரியல் தர்மலிங்கத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அது குறித்து அறிவிப்பு வெளியான நிலையில் இதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது, சன் டிவி இப்படி ஏமாற்றும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை, இது நாங்கள் எதிர்பார்க்காததாக இருக்கிறது என்று ரசிகர்கள் தொடர்ந்து கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications