மீண்டும் சன் டிவியிடம் சரணடையும் விஜய்..? ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் விற்பனை இத்தனை கோடியா? ட்விஸ்ட்
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ஜன நாயகன்' திரைப்படம், திரைக்கு வருவதற்கு முன்பே பலத்த எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது. இந்தப் படம் தான் நடிகர் விஜய்யின் கடைசி படம் என்றும், இதில் நடித்து முடித்த கையோடு அவர் முழுவதுமாக அரசியலில் இறங்க உள்ளார் என்றும் கூறப்படும் நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் உரிமையைச் சன் டிவி பெரும் தொகை கொடுத்து வாங்கியிருப்பதுதான் இப்போது தமிழ் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.

ஜன நாயகன் ஒரு பார்வை
எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், கெளதம் மேனன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்து வருகிறது. யாஷின் 'டாக்ஸிக்' படத்தை தயாரிக்கும் கேவிஎன் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
55 கோடிக்கு சன் டிவி வசம்
'ஜன நாயகன்' படத்தின் தொலைக்காட்சி உரிமத்தைச் சன் டிவி கைப்பற்றி இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதுவும் சாதாரண விலைக்கு அல்ல, இதுவரை இல்லாத வகையில் அதிக தொகையாக 55 கோடிக்கு அப்படத்தை வாங்கி உள்ளதாம். மேடைகளில் ஆணித்தரமாக திமுக-வைத்தான் தங்களது எதிரி என்று அறிவித்த விஜய், இப்போது அவர்களுக்கு சொந்தமான சேனலிடமே பிசினஸ் டீலிங் பேசியிருக்கிறாரா என்று நெட்டிசன்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.
அரசியல் ரீதியான விளைவுகள் என்ன
விஜய் தனது கட்சிப் பொதுக்குழுவிலும், மாநாட்டிலும் திமுக-வை எதிர்ப்பதாக ஆணித்தரமாக அறிவித்த நிலையில், தற்போது அவரின் கடைசி படத்தின் உரிமம் திமுக-வின் குடும்ப சேனல் வசம் சென்றிருப்பது பல விவாதங்களை எழுப்பியுள்ளது. சன் டிவி வழக்கமாகப் பொங்கலுக்கு வாங்கும் படங்களை அதே ஆண்டுத் தமிழ் புத்தாண்டுக்கு ஒளிபரப்பிவிடும். ஆனால், 'ஜன நாயகன்' படமும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதால், அதைத் தமிழ் புத்தாண்டுக்குச் சன் டிவி ஒளிபரப்புவது கேள்விக்குறி தான்.

தேர்தல் சிக்கல்
ஏனெனில், அடுத்த ஆண்டு அந்தச் சமயத்தில் தான் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது ஒளிபரப்பினால், அது விஜய்க்குப் பிரச்சாரம் செய்வது போல் ஆகிவிடும் என்றும், அதனால் சன் டிவி அப்போது அப்படத்தை ஒளிபரப்பாது என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
அரசியல் களத்தில் ஒரு கட்சிக்குத் தன்னை எதிரியாக அறிவித்துவிட்டு, அதே எதிரியின் குடும்ப நிறுவனத்துடன் பிரம்மாண்டமானத் தொழில் ஒப்பந்தம் செய்திருப்பது, அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியாகவும் நடிகர் விஜய்க்குச் சில தர்மசங்கடங்களைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'ஜன நாயகன்' படத்தின் வெளியீடு, தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆகியவை, தமிழக அரசியல் களத்தில் மேலும் சுவாரசியமானத் திருப்பங்களை ஏற்படுத்தும் என நம்பலாம்.
-
இது லிஸ்ட்லயே இல்லையே? பட்ஜெட்டுக்கு முன் முழு பயிர்க் கடன் தள்ளுபடி? விஜய் கையில் வேற லெவல் ப்ளான்! -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
"ஜோசியக்காரர் சொன்னாரே" விஜயின் கயிறும் ராகுலின் கேக்கும்! விடியல் பயணம் மட்டும் இல்லேனா? லியோனி நச் -
விஜய் அதிரடி உத்தரவு! டெல்லி பயணம் முடித்த பின்பு முக்கியமான சேஞ்ச்! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
விஜய்யை அவமானப்படுத்திய கர்நாடக காங்., அமைச்சர் யுடி காதர்? வரவேற்க போய் பூங்கொத்து கூட கொடுக்கலையே! -
விஜய்யின் பெயரை கூட தவறாக சொன்ன கர்நாடகா அமைச்சர்.. இப்படி செய்வாருனு யாரும் எதிர்பார்க்கலை -
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம்












Click it and Unblock the Notifications