சன் டிவியில் அடுத்தடுத்து முடிவுக்கு வரும் சீரியல்கள்.. இந்த டாப் சீரியலுமா? வருத்தத்தில் ரசிகர்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னணியில் இருக்கும் சீரியல்கள் ஒரு சில வாரங்களில் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. எந்தெந்த சீரியல்கள் என்பது பற்றி பார்க்கலாம்.
சீரியலுக்கு பெயர் போன சேனல் என்றால் சன் டிவி தான் என்று சொல்ல வேண்டும். ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும். அதனாலேயே டிஆர்பியிலும் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் முன்னணி இடத்தை பிடித்திருக்கும். டாப் 10 இடங்களில் அதிகமாக சன் டிவி சீரியல்கள் தான் இடம் பிடித்திருக்கும்.

அதுபோல கிராமப்புறங்களில் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு அதிக வரவேற்பு இருப்பதை தொடர்ந்து இந்த சேனலில் நடிக்கும் நடிகைகளும், நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் எளிமையாக பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அதனாலேயே சன் டிவி சீரியல்களில் நடிப்பதற்காக பலர் போட்டி போடுகின்றனர். இந்த நிலையில் சன் டிவி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.
அதாவது சன் டிவியில் ஐந்து சீரியல்கள் அடுத்தடுத்து முடிவுக்கு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகை ஆலியா மானசா நடிக்கும் இனியா சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்பட்டது. இந்த சீரியல் முடிவுக்கு வந்ததும் ஆலியா மீண்டும் விஜய் டிவி சீரியல் புதியதாக தொடங்க இருக்கும் சீரியலில் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து ஆனந்த ராகம், சுந்தரி, மிஸ்டர் மனைவி, மலர் சீரியல்கள் முடிவுக்கு வருவதாக கூறப்படுகிறது. சுந்தரி சீரியல் பல மாதங்களுக்கு முன்பே முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அடுத்தடுத்து இந்த சீரியல்களில் பல பிரச்சனைகள் வந்து, சீரியல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் இப்போதும் மீண்டும் இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது என்று கூறப்படுகிறது.
ஆனாலும் இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தில்தான் இருக்கிறது. தற்போது இந்த வாரம் வெளியான டிஆர்பி லிஸ்டில் கூட ஆறாவது இடத்தில் இந்த சீரியல் இருக்கும் நிலையில் இது முடிவுக்கு வருவது சந்தேகமாக தான் இருக்கிறது. ஆனாலும் அதிகாரப்பூர்வமாக இன்னும் சேனல் தரப்பில் இருந்து இந்த தகவலை உறுதி செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications