சன் டிவியில் முடிவுக்கு வரும் 2 வருடத்தை தாண்டிய சீரியல்..நேரம் மாற்றப்படும் இரண்டு பிரபல சீரியல்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி சீரியல் கிளைமாக்ஸ் காட்சிகள் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் இந்த சீரியலின் முடிவால் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இரண்டு முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டிருக்கிறது.
நடிகர் லிவிங்ஸ்டனின் மகளான ஜோவிதா லிவிங்ஸ்டன் கதாநாயகியாக நடிக்கும் அருவி சீரியல் கடந்த செப்டம்பர் 2021 ஆம் வருடத்தில் ஒளிபரப்பானது. மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதே நேரத்தில் வீட்டிற்கு சாப்பிட வரும் ஆண்களும் விருப்பம் இருக்கிறதோ இல்லையோ இந்த சீரியலை பார்த்தே ஆக வேண்டிய நிலை தான் பல வீட்டில் இருந்தது.

அதனாலேயே இந்த சீரியலின் கதை பலருக்கும் தெரிந்திருக்கும். இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிகை அம்பிகாவும் நடித்திருந்தார். ஆனால் சில மாதங்களாகவே அம்பிகா இந்த சீரியலில் இல்லை. இதனால் இவர் சீரியலை விட்டு விலகி விட்டாரா? என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் தான் நேற்று இந்த சீரியலுக்கான கிளைமேக்ஸ் ஷூட்டிங் நடைபெற்று இருக்கிறது.
அதனால் இதில் நடித்த நடிகர் நடிகைகள் பலரும் இந்த சீரியல் குறித்து பல நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள். கிளைமேக்ஸ் சூட்டிங்கில் நடிகை அம்பிகாவும் கலந்து கொண்டிருக்கிறார். இது இவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் அதே நேரத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வருவதால் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் மதிய நேரத்தில் 3:00 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த மலர் சீரியல் இனி ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.
அது போல ஆறு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ஆனந்தராகம் சீரியல் இனி 3:00 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. இப்படியான நிலையில் அதிகமான ரசிகர்கள் எதிர்பார்த்த இராமாயணம் சீரியல் திங்கள் முதல் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த சீரியல் வெள்ளிக்கிழமை வரைக்கும் தான் ஒளிபரப்பாக போகிறதா? அல்லது சனிக்கிழமை வரை ஒளிபரப்பாக போகிறதா? என்று உறுதியாக கூறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த மூன்று சீரியல்களின் நேரம்தான் இப்போது மாற்றப்பட்டு இருக்கிறது. மற்றபடி எந்த சீரியலின் நேரமும் மாற்றப்படவில்லை. எப்போதும் ஒளிபரப்பாவது போல தான் சன் டிவி சீரியல்கள் ஒளிபரப்பாக போகிறது. ஏற்கனவே டிஆர்பியில் சமீபகாலமாக குறைந்த ஆனந்த ராகம் சீரியல் இப்போது 3 மணிக்கு ஒளிபரப்பாவதால் மேலும் அடி வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோல மூன்று மணிக்கு ஒளிபரப்பாகி வந்த மலர் சீரியல் இனி மதிய நேரத்திற்கு ஒளிபரப்பாவதால் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும். அது மட்டுமல்லாமல் இராமாயணம் சீரியலுக்கான ப்ரோமோ வந்ததிலிருந்து அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த சீரியல் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாக போகிறது. அதற்குப் பிறகு எப்படி இருக்க போகிறது என்றும் பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications