மீண்டும் ஒன்று சேர்ந்த “தெய்வமகள்” பிரபலங்கள்..அடடா காரணம் இதுதானா?அந்த போட்டோவ கவனிச்சீங்களா?
சென்னை: சன் டிவியில் 2013 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் பிரபலங்கள் பல வருடங்கள் கழித்து ஒன்றாக சந்தித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் இவர்களுடைய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து இந்த சீரியலில் வில்லியாக அண்ணியார் கேரக்டரில் நடித்து வந்த ரேகா கிருஷ்ணகிருஷ்ணப்பா பல புகைப்படங்களையும் சில தகவல்களையும் பகிர்ந்து இருக்கிறார்.

சன் டிவியில் தற்போது அதிகமான ரசிகர்களை கவர்ந்து கொண்டிருப்பது எதிர்நீச்சல் சீரியலாக இருக்கிறது. இந்த சீரியலில் "ஏய் இந்தாம்மா..." என்கிற குணசேகரின் டயலாக் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதுபோலதான் சில வருடங்களுக்கு முன்பு முடிவடைந்த தெய்வமகள் சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்தது. அந்த சீரியலில் "அண்ணியாரே" என்கிற வசனம் வேர்ல்ட் லெவலில் பேமஸ் என்று சொல்லும் அளவிற்கு பிரபலமானது.
தன்னுடைய அண்ணியே தனக்கு வில்லியாக இருக்கும் நிலையில் கதாநாயகன் பிரகாஷ் அதிரடியாக செய்யும் செயல்களும் அவருக்கு துணையாக சத்யா எடுக்கும் முடிவுகளும் அதிகமான ரசிகர்களை கவர்ந்தது. இந்த சீரியலில் நடித்த பிரபலம் அடைந்த வாணி போஜன் இப்போ வெள்ளித்திரைகளில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
வாணி போஜன் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் தெய்வமகள் சீரியல் அவருக்கு பெரிய அளவில் ஒரு திருப்புமுனையை கொடுத்தது. இந்த சீரியலில் சந்தியா கேரக்டரில் துருதுருவென வீட்டின் முன்னேற்றத்திற்காகவும், தன்னுடைய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் போராடும் போராட்டம், அதைத் தொடர்ந்து கணவர் மீதும் கணவர் குடும்பத்தின் மீது இருக்கும் பாசம் என அனைத்து பக்கங்களிலும் 6 அடிச்சு ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் விட்டு அமர்ந்திருந்தார்.
அதுபோல கதாநாயகி மட்டும்தான் பிரபலம் என்று இல்லை வில்லி, நானும் பிரபலம் என்று சொல்லும் விதமாகத்தான் ரேகா கிருஷ்ணப்பா அந்த சீரியலில் அண்ணியாக காயத்ரி கேரக்டரில் நடித்து அனைவருடைய திட்டல்களை வாங்கிக் கொண்டு இருந்தாலும் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிகாட்டி இருந்தார்.

இந்த நிலையில் இந்த சீரியல் முடிவடைந்து 5 வருடங்கள் ஆன நிலையில் தற்போது இந்த சீரியலில் அண்ணியாராக நடித்த ரேகா கிருஷ்ணப்பா, பிரகாஷின் அண்ணன் ராஜுவின் மனைவியாக நடித்த சிந்து, அதுபோல பிரகாஷின் அண்ணன் ராஜுவாக நடித்த அரவிந்த், பிரகாஷின் அம்மாவாக நடித்த வெண்ணிற ஆடை நிர்மலா, அது போல பிரகாஷின் தங்கையாக நடித்த வனிதா ஹரிகரன் என பலரும் ஒன்று சேர்ந்து சந்தித்திருக்கின்றனர்.
பல வருடங்கள் கழித்து இவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்த நிலையில் அங்கு எடுத்த புகைப்படங்களை ரேகா கிருஷ்ணப்பா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அதற்கு அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் பலரும் பிரகாஷ், சந்தியா எங்கே என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications