சன் டிவியில் அதிக சம்பளம் இந்த நடிகைக்கு தானா? ஆலியா மானசாவுக்கு இவ்வளவுதானாமே
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடிக்கும் நடிகைகளின் சம்பள விபரம் தான் இப்போது இணையத்தில் பலரையும் இயக்க வைத்திருக்கிறது. டாப் சீரியலில் நடிக்கும் நடிகைகளின் சம்பள விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கும் நிலையில் இதில் யார் அதிக சம்பளம் வாங்குகிறார் என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.
அந்த காலம் முதல் இந்த காலம் வரை சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆரம்பத்தில் எல்லாம் வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டும்தான் சீரியலை விரும்பி பார்ப்பார்கள். ஆனால் இப்போது நிலைமை அப்படி கிடையாது. இப்போது எல்லோரிடமும் இணையம் இருக்கும் காரணத்தால் எந்த நேரத்திலும் பிடித்த சீரியலை பார்த்து விடலாம் என்ற நிலைமை தான் இருக்கிறது

ஒரு சீரியலை பார்த்து பழகி விட்டால் அதைத் தொடர்ந்து பார்த்து வருபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். ஒரு சிலர் சீரியல் பிடிக்கிறதோ இல்லையோ அதை விமர்சிப்பதற்காகவாவது அதை தினமும் பார்த்து விடுகிறார்கள். இதனாலையே புதியது புதியதாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. காலையில் தொடங்கி இரவு 10.30 மணி வரைக்கும் சீரியல்கள் வரிசை வரிசையாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வந்த நிலையில் இப்போது ஞாயிறு வரைக்கும் சீரியல்கள் ஒளிபரப்பாக தொடங்கி விட்டது. ஒரு சீரியல் மக்கள் மத்தியில் கவர தொடங்கி விட்டால் அந்த சீரியல் குறைந்தபட்சம் 500 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. அதனாலேயே அதிகமான நடிகைகள் சினிமாவில் நடிப்பதை விடவும் சீரியலில் கமிட் ஆகிவிட்டால் செட்டில் ஆகிவிடலாம் என்று சின்னத்திரையில் அடி எடுத்து வைத்து கலக்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் சின்னத்திரையில் அதிகமான சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதிலும் சன் டிவியில் டாப் சீரியலில் நடிக்கும் நடிகைகளின் சம்பள விவரங்கள் இப்போது இணையத்தில் வெளியானகி இருக்கிறது. அதில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் ஸ்ருதிக்கு ஒரு நாளைக்கு 40,000 சம்பளமாக வழங்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.
ஸ்ருதி ராஜ் ஏற்கனவே ஆபீஸ் சீரியலில் தொடங்கி பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அது போல கயல் சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சைத்ரா ரெட்டி ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வாங்குகிறார் என்றும் கூறப்படுகிறது. சைத்ரா ஆரம்பத்தில் விஜய் டிவியில் கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியல் மூலமாகத்தான் தமிழில் அறிமுகம் ஆகி இருந்தார். அதைத் தொடர்ந்து ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்து இப்போது சன் டிவியில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
சைத்ராவை தொடர்ந்து டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆலியா மானசா இப்போது சன் டிவியில் இனியா சீரியலில் நடித்து வரும் நிலையில் அவருக்கு 20 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. ஆலியா மானசா ராஜா ராணி சீரியலின் மூலம் தான் செம்பா கேரக்டரில் பிரபலம் அடைந்தார். ராஜா ராணி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்து கொண்டார். பிறகு இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவானாலும் மீண்டும் பழைய நிலையில் மாறி இனியா சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதுபோல ஆலியாவை தொடர்ந்து சுந்தரி சீரியலில் நடிக்கும் கேப்ரில்லாவிற்கு 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. சன் டிவியில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குவது நடிகை ஸ்ருதி தான் என்று கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும் தற்போது இணையத்தில் வெளியான இந்த தகவல் ரசிகர்களின் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications