இப்படியும் மனுஷங்க இருப்பாங்களா? விஜய் டிவி நடிகையை கல்யாணம் செய்த சன் டிவி நடிகர் ஆதங்க பதிவு
சென்னை: சன் டிவியில் தொகுப்பாளராகவும் நடிகராகவும் பிரபலம் அடைந்து சமீபத்தில் நடிகை கண்மணியை மனோகரை காதலித்த திருமணம் செய்து கொண்ட அஸ்வந்த் சமூக வலைதளத்தில் சிலர் தவறாக பேசும் கருத்துக்கு தன்னுடைய ஆதங்கத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று அவர் தெரிவித்திருக்கிறார்.
சமூக வலைதளத்தில் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்க அதிகரிக்க அதனால் சில நல்ல விஷயங்கள் நடந்தாலும் பல கெட்ட விஷயங்களும் நடக்கிறது. தனிமனித தாக்குதல்கள் அளவு கடினமாக இருக்கிறது. அதுவும் பிரபலமாக இருப்பவர்களை சிலர் கேவலப்படுத்துவது, அவமானப்படுத்துவதும் ஏதோ சாதித்தது போல செய்து கொண்டிருக்கிறார்கள்.

முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர்களை பார்ப்பதற்காக பல நாட்கள் காத்திருப்பார்கள். ஏதாவது ஒரு இடத்தில் அவர்களை பார்ப்பது பெரிய அதிசயமாக தெரியும். ஆனால் இப்போது சமூக வலைதளத்தின் மூலமாக அவர்கள் ரசிகர்களுடன் பழகி வருவதால் அவர்களை அதிகமாக விமர்சிக்கவும் செய்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் செய்யும் செயலால் பல பிரபலங்கள் வீட்டிற்குள்ளும் பல பிரச்சனைகள் வெடிக்கத்தான் செய்கிறது.

சமூக வலைத்தளத்தில் பேக் ஐடி மூலம் சிலர் கமாண்டுகளில் வன்மத்தை கக்குகிறார்கள். அதுபோலத்தான் தற்போது சமீபத்தில் திருமணம் முடிந்த நடிகர் அஸ்வந்த் மற்றும் சீரியல் நடிகை கண்மணி மனோகரன் பற்றி ஒரு நெட்டிசன் மிகவும் தவறான ஒரு வார்த்தையை கமெண்ட் கொடுத்து இருக்கிறார். அதை பார்க்கும் ரசிகர்களுக்கே வருத்தம் ஏற்படுகிறது.
இந்த பதிவை ஸ்கிரீன்ஷாட் ஆக எடுத்து அஸ்வந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதாவது kayenvkarathi84 இன்ஸ்டாகிராம் ஐடியில் இருந்து கமெண்ட் போட்ட நபர் கண்மணி மற்றும் அஸ்வந்த் புகைப்படத்திற்கு கீழே "இந்த இரண்டு லூசு சீக்கிரமாக சாகணும் என்று நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்" என்று அதில் கூறியிருக்கிறார்.

இதை பார்க்கும்போது நமக்கே கூட இந்த அளவிற்கு கேவலமாக ஒருத்தங்களால யோசிக்க முடியுமா என்று தான் தோணுகிறது. காரணம் கல்யாணம் ஆகி அந்த புகைப்படத்தை இந்த தம்பதி வெளியிட்டு இருக்கும் நிலையில் இதற்கு இப்படி ஒரு பதிவு போட வேண்டுமா? வாழ்த்த மனமில்லை என்றால் அதை கடந்து விட்டு போய்விட வேண்டியது தானே? ஆனால் இதை இப்படி போஸ்ட் போடுவதால் இந்த நபர்களுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது என்று தெரியவில்லை.
பார்க்கும் நமக்கு இருக்கும் கேள்விகள் தான் அஸ்வத் மற்றும் கண்மணி தம்பதிக்கும் வந்திருக்கிறது. அஸ்வந்த் இதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இந்த அளவிற்கு மோசமான விஷயத்த நீங்க யாராவது கிராஸ் பண்ணி இருக்கீங்களா? சோசியல் மீடியா இப்போ எல்லாம் ரொம்ப டாக்ஸி ஆகிடுச்சு.

அதிலும் என்டர்டைன்மெண்ட் இண்டஸ்ட்ரியில் இருப்பவர்களுக்கு அதிகப்படியான ஷேட்புல் கமெண்ட்ஸ் ஸ்பேஸ் பண்ண வேண்டி இருக்கு. இதெல்லாம் பார்க்கும் போது ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. நீங்க எல்லாம் உண்மையில் மனிதர்கள் தானா? என்று எனக்கு கேள்வி வருகிறது.

இந்த மாதிரி நெகட்டிவிட்டி எங்களுக்கு தேவை இல்லை. நான் இந்த மாதிரி கமெண்டுக்கு ரிப்ளை பண்ண மாட்டேன். ஆனால் இதுக்கு பண்ண வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. நாங்க ஸ்கிரீனுக்கு முன்னாடி மட்டும் தன் நடிக்கிறோம். நிஜ வாழ்க்கையில் நாங்களும் மனிதர்கள் தான்... என்று தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் அவருக்கு சப்போர்ட் கொடுத்து வருகிறார்கள்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications