கயல் சீரியல் அட்ராசிட்டி.. தனுஷ் படத்தை தொடர்ந்து அஜித் படம் காப்பி.. இப்படியா பண்ணி வைப்பாங்க?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்தாலும் இந்த சீரியலில் ஒரு சில காட்சிகள் இணையத்தில் அதிகமான ரசிகர்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது. அதுவும் தற்போது வெளியான ப்ரோமோ ஏற்கனவே நடிகர் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான கிரீடம் திரைப்பட காட்சியை காப்பி அடித்து வைத்திருப்பதாக ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
பொதுவாக திரைப்படங்களில் வெற்றி பெறும் பாடல்கள் மற்றும் மாஸ் சீன்கள் சீரியலில் காப்பியடித்து அதை அப்படியே பயன்படுத்துவார்கள். அதிலும் பாடல்களுக்கு காப்பிரைட் இல்லை என்பதால் ஒரு பாடலை ட்ரெண்ட் ஆனாலே அதை எல்லா சீரியல்களிலும் பேக்ரவுண்ட் பாடலாக ஒலிக்க விட்டு விடுவார்கள்.

அது பல சீரியல்களிலும் நடந்து கொண்டிருப்பது தான். அந்த வகையில் இப்போது கயல் சீரியலிலும் செய்திருக்கும் செயல் குறித்த மீம்ஸ்கள் தான் அதிகமாக இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சன் டிவியில் கயல் சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதுவும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இந்த சீரியல் தான் ஃபேவரிட் என்று தெரிகிறது.
அதனாலேயே இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் சில மாதங்களுக்கு முன்பு வரைக்கும் இந்த சீரியல் தான் முதல் இடத்தில் இருந்தது. ஆனால் இப்போது சிங்க பெண்ணே சீரியல் முதல் இடத்திலும் கயல் சீரியல் இரண்டாவது இடத்திலும் இருந்து வருகிறது. இதனாலையே இந்த சீரியலின் இயக்குனர் சீரியலின் கதையை ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி இருக்கிறார்.
ஆரம்பத்தில் கயலும் எழிலும் நண்பர்களாக இருந்த நிலையில் இப்போது இருவரும் காதலர்களாக மாறியிருக்கின்றனர். எழில் ஆரம்பத்தில் இருந்தே கயலை காதலித்துக் கொண்டிருந்தார். ஆனால் கயல் காதலை ஏற்றுக் கொள்ளாமல் இருந்த நிலையில் இப்போது அவரும் சம்மதம் தெரிவித்திருக்கும் நிலையில் இரு வீட்டாரும் திருமணத்திற்கு ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றனர்.
ஆனால் எழிலின் அம்மாவிற்கு இந்த திருமணத்தில் விருப்பம் கிடையாது. திருமணத்தை நடத்த விடாமல் தடுக்க வேண்டும் என்று எழிலின் அம்மா ஒரு பக்கம் பிரச்சினை செய்து கொண்டிருக்கிறார். அதுபோல கயலின் பெரியப்பாவும் இந்த திருமணத்தை நடத்தக்கூடாது விடக்கூடாது என்று பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இதே பிரச்சனைகள் தான் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. அதனால் கதையில் புதியதாக சில மாற்றங்களை இயக்குனர் செய்து இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது வெளியான ப்ரோமோவில் கயலை எழில் இரவு நேரத்தில் சந்திக்க வந்திருக்கிறார். பிறகு இருவரும் தண்ணீர் தொட்டிக்குள் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். இதே காட்சிகள் ஏற்கனவே கிரீடம் திரைப்படத்தில் இடம் பிடித்திருந்தது தானே? என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
ஏற்கனவே நடிகர் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியான புதியதில் அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற "மேகம் கருக்காதோ பெண்ணே பெண்ணே" என்ற பாடல் ட்ரெண்டாக இருந்து சமயத்தில் கயலும் எழிலும் அதே பாடலுக்கு டான்ஸ் ஆடுவது போன்று ஒரு எபிசோடு காட்சிகள் இருந்தது.
அதைத் தொடர்ந்து இப்போது இவர்கள் அஜித் படத்தையும் காப்பி அடித்து விட்டார்களா? என்று ரசிகர்கள் கலாய்க்கிறார்கள். அதிலும் இப்போது இருக்கிற திரைப்படத்தை காப்பி அடித்தால் தான் ரசிகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்று சில வருடங்களுக்கு முன்பே வந்த படங்களை தேடி தேடி இயக்குனர் பார்த்து அதை சீரியல் காட்சிகளாக வைத்து வருகிறாரா? என்பதும் பலருடைய கேள்வியாக இருக்கிறது.
-
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி












Click it and Unblock the Notifications