மீண்டும் சின்னத்திரைக்கு வரும் நடிகர் சூர்யா.. பாலிவுட் ஸ்டைலில் எண்ட்ரி?
நடிகர் சூர்யா சீரியல் ஒன்றில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: நந்தினி சீரியலில் கௌரவத் தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொதுவாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில், அதிரடியாக பிரபல நடிகர் அல்லது நடிகைகளை கௌரவத் தோற்றத்தில் நடிக்க வைப்பது பாலிவுட்டில் டிரெண்டாக உள்ளது. தமிழிலும்கூட கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சன் டிவி சீரியல் ஒன்றில் நடிகை குஷ்பு நடிகையாகவே காட்சியொன்றில் கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது குஷ்பு தயாரித்துள்ள நந்தினி சீரியலில் நடிகர் சூர்யா கௌரவத்தோற்றத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படமும் இணையத்தில் வைரலாகி உள்ளது.

சன் டிவி நந்தினி:
நாகினி சீரியல் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து சன் டிவியில் தற்போது நந்தினி என்ற பாம்பு சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. குஷ்பு தயாரிக்கும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நித்யா ராம் நடித்துள்ளார்.

சூர்யா போட்டோ:
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சீரியல் ஷூட்டிங்கிற்கு நடிகர் சூர்யாவும் சென்றுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் நந்தினி சீரியல் நடிகர்களோடு அவர் எடுத்துகொண்ட போட்டோ வெளியாகியுள்ளது.

எதிர்பார்ப்பு:
இதனால் இந்த சீரியலில் சூர்யா கௌரவத்தோற்றத்தில் நடித்திருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் இது குறித்து குஷ்பு தரப்பில் இருந்து எவ்வித விளக்கமும் வெளிவரவில்லை. நிஜமாகவே சீரியலில் சூர்யா நடித்திருக்கிறாரா அல்லது வேறு காரணங்களுக்காக அங்கு அவர் சென்றிருந்தாரா என்பது குறித்து தெரியவில்லை.

சின்னத்திரை:
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை சூர்யா தொகுத்து வழங்கியது நினைவு கூரத்தக்கது. சமீபகாலமாக நடிகர்கள் மற்றும் நடிகைகள் சினிமாவைப் போலவே சின்னத்திரைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். பத்து படங்களில் நடித்த புகழை ஒரு நிகழ்ச்சி அளித்து விடுவதாக அவர்கள் கருதுகின்றனர்.

பிக் பாஸ்:
நடிகர் கமல் பிக் பாஸ் முதல் மற்றும் இரண்டாவது சீனனை தொகுத்து வழங்கினார். தற்போது விஷால் சன் டிவியிலும், வரலட்சுமி ஜெயா டிவியிலும் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகின்றனர். காமெடி நடிகர் சூரியும் விரைவில் சீரியல் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications