சன் டிவியில் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்... காரணம் இதுதானா? ஆனால் இப்படி ஒரு டுவிஸ்ட்!
சென்னை: சன் டிவியில் புதியதாக பல சீரியல்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் திடீரென்று முடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது "பிரியமான தோழி" சீரியல் முடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சீரியலில் இறுதி நாள் ஷூட்டிங் காட்சிகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் பரவி வருகிறது.
சீரியலுக்கு பெயர் போன சன் டிவியில் ஒரு சீரியலில் நடித்தாலே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விடலாம் என்று பல நடிகர், நடிகைகள் சன் டிவி சீரியலில் நடிக்க போட்டி போட்டு கொண்டு இருக்கின்றனர். அதே நேரத்தில் ஆரம்பத்தில் சன் டிவியில் தான் சீரியல்கள் அதிகமாக மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று இருந்தது.

அதைத் தொடர்ந்து சன் டிவிக்கு போட்டியாக பல சேனல்கள் தொடங்கப்பட்டு இப்போது புதுப்புது சீரியல்களும் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனாலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சில சீரியல்களின் டிஆர்பியை யாராலும் அடித்துக் கொள்ள முடியவில்லை. டிஆர்பியில் டாப் 10 இடத்தில் அதிகமாக சன் டிவி சீரியல் தான் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் ஒரு சில சீரியல்கள் தொடங்கிய வேகத்திலேயே முடிவுக்கு வந்து விடுகிறது. அந்த வரிசையில் சன் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட பிரியமான தோழி சீரியல் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த சீரியலின் இறுதி நாள் சூட்டிங் முடிவடைந்து இருக்கும் நிலையில் அப்போது எடுத்த புகைப்படங்களை சீரியல் நடிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
பிரியமான தோழி சீரியல் இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை "பாண்டவர் இல்லம்" சீரியலை இயக்கிய குழுவினர்கள் தான் இயங்குகின்றனர். இந்த சீரியலின் கதாநாயகனாக விக்கி ரோஷன் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த சீரியல் முடிவடைந்ததும் அதற்கு பதிலாக "கல்யாண கலாட்டா" என்ற சீரியல் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.
இந்த சீரியலிலும் கதாநாயகனாக விக்கி ரோஷன் தான் நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே சன் டிவியில் "மல்லி" என்ற புது சீரியல் தொடங்க உள்ள நிலையில் "புன்னகை பூவே என்ற சீரியலும் தொடங்க இருக்கிறது. அடுத்ததாக கல்யாண கலாட்டா என்ற புது சீரியலும் ஒளிபரப்பாக இருக்கின்றது.
இப்படியாக பல சீரியல்கள் புதியது புதியதாக தொடங்க இருக்கும் நிலையில் ரசிகர்களுக்கு இனி எண்டர்டெயின்மென்ட் காத்திருக்கிறது. ஆனால் புதியதாக தொடங்கும் சீரியலில் எது மக்களை கவரும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications