சன் டிவியில் புது சீரியலில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்.. கூடவே பிக் பாஸ் பிரபலத்தின் மனைவியும்
சென்னை: சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் புது சீரியலில் நடிகை "கேப்ரில்லா" கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். அவரோடு அவருக்கு ஜோடியாக "கண்ணான கண்ணே" சீரியலில் நடித்த "நடிகர் ராகுல்" நடிக்கிறார். இந்த நிலையில் இந்த சீரியலில் மேலும் சிலர் நடிக்க இருக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இந்த வகையில் சீரியலுக்கு பெயர் போன சன் டிவியில் புதியது புதியதாக சீரியல்கள் இப்போது அறிமுகமாக இருக்கிறது. ஆரம்ப காலகட்டத்தில் சன் டிவி சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்றது. அதன் தாக்கம் இப்போது வரைக்கும் இடம் பிடிக்கிறது. அதன் காரணமாகவே கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் டிஆர்பியில் டாப் 10 சீரியல்களில் அதிகமாக சன் டிவி சீரியல்கள் தான் இடம் பிடிக்கிறது.

அதிலும் முதல் ஐந்து இடங்களுக்குள் சன் டிவி சீரியல்களே அதிகமாக இருக்கிறது. இப்படியான நிலையில் இப்போது சன் டிவியில் மேலும் டி ஆர் பியை கூட்டுவதற்காக பல புதிய நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்து கொண்டிருக்கின்றார். அந்த வகையில் விஜய் டிவி, ஜீ தமிழ் சீரியல்களில் நடித்த நடிகர் நடிகைகள் அதிகமானோர் சன் டிவி சீரியல்களுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே ஜீ தமிழில் நடித்து பிரபலம் அடைந்த ஷபானா, சைத்ரா ரெட்டி போன்ற பல கதாநாயகிகள் சன் டிவி சீரியலுக்கு வந்து விட்டனர். அந்த வரிசையில் இப்போது விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியலில் பிரபலம் அடைந்த நடிகை கேப்ரில்லா சன் டிவி சீரியலில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்திருக்கிறார் அதோடு ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் இப்போது சன் டிவியில் இவர் நடிக்கும் புதிய சீரியலுக்கான சூட்டிங் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த சீரியலுக்கான பிரமோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் கேப்ரில்லா நடிக்கும் சீரியலில் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் அப்பா கேரக்டரில் நடித்து வரும் நடிகர் நரசிம்மராஜு இந்த சீரியலில் அப்பா கேரக்டரில் நடிக்க இருப்பதாக தெரிகிறது.
அவர் அனேகமாக கேப்ரில்லாவின் அப்பாவாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் மணிகண்டன் அதாவது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரனான மணிகண்டனின் மனைவி சோபியா இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் அருவி சீரியலில் நடித்த நடிகை ஜீவிதா, ஷாம் ஆகிய இருவரும் இந்த சீரியலில் நடிக்க இருக்கிறார்களாம். அதுபோல கண்ணான கண்ணே சீரியலில் நடித்த துரைமணி, மோதலும் காதலும் சீரியலில் நடித்த சந்தோஷ் உட்பட சிலர் இந்த சீரியலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சீரியலில் கதாநாயகனாக நந்தினி மற்றும் கண்ணான கண்ணே சீரியலில் கதாநாயகனாக நடித்த ராகுல் இதில் சில மாதங்களுக்கு பிறகு நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் இந்த சீரியலின் டைட்டில் மருமகள் என்று வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சீரியலுக்கான ப்ரோமோ இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications