குணசேகரனை விடுங்க.. எதிர்நீச்சலில் நடந்த செம மாற்றம்.. படிப்பு விஷயத்தில் சூப்பரான சவுக்கடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் வேலராமமூர்த்தி ஆதி குணசேகரன் ஆக அறிமுகமான பிறகு கதையில் போக்கு சரியில்லை என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்.

ஆனால் நேற்றைய எபிசோட்டில் எதிர்நீச்சல் சீரியலில் படிப்பு குறித்து கொடுத்த விளக்கம் தற்போது இணையத்தில் பலருடைய பாராட்டை பெற்று இருக்கிறது.

Sun TV responded to the Bigg Boss issue with a ethirneechal serial

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் படிப்பு முக்கியமா? இல்லையா? என்ற விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இப்போது அதற்கு எதிர்நீச்சல் சீரியலில் செம அட்வைஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சமுதாயத்தில் நிலவும் அடிப்படை பிரச்சனைகளை சீரியலில் கொண்டு வருவதை பல சீரியல்களில் பார்க்க முடியும். அந்த வகையில் தற்போது அடிப்படைக் கல்வி முக்கியமா? இல்லை திறமை இருந்தால் போதும் கல்வி தேவை இல்லையா? என்ற விவாதம் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக சமூக வலைத்தளத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

அதை சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் லாவகமாக கையாண்டு இருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில தினங்களுக்கு முன்பு நடிகை விசித்திரா அடிப்படை கல்வி முக்கியம் அனைவரும் அடிப்படை கல்வியை கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சமுதாயத்தில் அவர்களால் மேனேஜ் செய்ய முடியும் என்று பேசிக் கொண்டிருக்கும்போது நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா எனக்கு படிப்பு வரவில்லை.

Sun TV responded to the Bigg Boss issue with a ethirneechal serial

என்னுடைய அம்மா என்னை எத்தனையோ பள்ளிகளில் மாற்றி படிக்க வைத்து பார்த்தார்கள். ஆனால் என்னால் படிக்க முடியவில்லை. அதனால் எட்டாம் வகுப்பு படிப்போடு நிறுத்திவிட்டேன். படிப்பு இல்லை என்றாலும் என்னுடைய திறமை மூலமாக என்னால் சாதிக்க முடியும் நான் நடிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்று இருக்கிறேன் என்று சொல்ல, என்னதான் பிற திறமைகள் இருந்தாலும் அடிப்படை கல்வி முக்கியம் என்று விசித்திரா சொல்ல அது அவர்கள் இருவருக்கும் இடையே சண்டையாக மாறி இருந்தது.

அது குறித்து சமூக வலைத்தளத்திலும் ஒரு தரப்பினர் கல்வி முக்கியமில்லை என்றும் திறமை இருந்தால் அதன்படி போனாலே போதும் என்றும், இன்னொரு தரப்பினார் கல்வி தான் முக்கியம் என்றும் கூறி வருகின்றனர். இதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில
சனிக்கிழமை எபிசோடு நடிகர் கமல்ஹாசன் இந்தப் பிரச்சினையில் இரண்டு தரப்பினர்களுக்கும் ஆதரவாக பேசி முடித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் நாங்கள் படிப்பை பாதியிலே நிறுத்தியவர்கள் என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கல்வி குறித்து பேசிய பல நடிகர்களின் வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. ஏற்கனவே கல்வி குறித்து நீயா நானா கோபிநாத் படிக்காமல் ஜெயித்தவர்கள் 10 பேர் இருப்பார்கள். ஆனால் படித்து ஜெயித்தவர்கள் லட்சம் பேரை நான் சொல்வேன் என்று சொல்லிய வீடியோ, நடிகர் தனுஷ், சூர்யா என்று அடுத்தடுத்து பல பிரபலங்கள் படிப்பு குறித்து பேசிய வீடியோக்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sun TV responded to the Bigg Boss issue with a ethirneechal serial

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலிலும் படிப்பு குறித்து நேற்றைய எபிசோடில் ரேணுகா மற்றும் ஜான்சி ராணி இதையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. அப்போது ஜனனியின் அப்பாவான நாச்சியப்பன் வீட்டிற்கு வந்திருக்கும் நேரத்தில் ஜான்சி ராணி யார் என்று தெரியாமல் இருக்கும்போது ஜான்சி ராணி உங்களுக்கு என்னை யாருன்னு தெரியாது. ஆனால் நீங்க யாருன்னு நான் இப்போ கண்டுபிடிச்சிட்டேன்.

உங்களுக்கு எப்படி என்னை தெரியும். இவங்க எல்லாம் ஒழுங்கா இருந்திருந்தா சொந்த பந்தம் எல்லாம் பார்த்து கல்யாணத்தை நடத்தி வச்சிருக்கலாம். இவ்வளவுதான் அவுத்துவிட்ட கழுதை மாதிரி ஆளுக்கு ஒரு திசையா போய்கிட்டு இருக்காங்களே. அப்புறம் சொந்தம் பந்தம் எல்லாம் எப்படி தெரியும். நீங்க இந்த வீட்டில் பொண்ணு கொடுத்த சம்பந்தி. நான் இந்த வீட்ல பொண்ணு எடுத்த சம்பந்தி என்று பேசிக் கொண்டிருக்கும் போதே இந்த வீட்டில் பொம்பளைகளுக்கு கொஞ்சமா மட்டு மரியாதை இருக்கா கேட்டா படிச்சு கிழிச்சேங்காளுக.

இந்தாருங்க ஐயா பொம்பள பிள்ளைங்க படிச்சா குடிகெட்டு போய்டும் அதுக்கு உதாரணம் தான் இந்த வீடு, ஐயா நானும் பொம்பளை தானே நான் என்ன படிச்சிட்டா, வாழ்ந்துகிட்டு இருக்கேன் என்று ஜான்சி ராணி கேட்க, அதற்கு நந்தினி எம்மா சிகாமணி நீ ஒரு பொம்பளை. நீ வாழ்கிறது ஒரு வாழ்க அதை பெருமையா வேற சொல்லிக்கிட்டு திரிகிறாயே? உனக்கு வெக்கமா இல்லையா? என்று கேட்க, அதற்கு ஜான்சி ராணி ஏண்டி என் வாழ்க்கைக்கு என்ன? ஊர் மெச்சூர மாதிரி கல்யாணத்தை பண்ணுனேன்.

ஊரு மெச்சூர மாதிரி பிள்ளைய பெத்து, என் பிள்ளைக்கு இப்போ கல்யாணமும் முடிச்சு வச்சிருக்கேன் என்று சொல்ல, அதற்கு நந்தினி எம்மா வாய்க்கு வந்ததெல்லாம் பேசாத, நீ ஒரு திருட்டு தாலி. உன் மகன் ஒரு திருட்டு தாலி என்று திட்ட, அதற்கு ரேணுகா இவயெல்லாம் ஒரு ஆளு இவ எல்லாம் படிப்ப பத்தி பேசுறா...? படிப்பை பத்தி பேச உனக்கு எல்லாம் ஒரு அருகதையும் கிடையாது. பள்ளிக்கூட வாசலை எல்லாம் என்னைக்காவது மிதிச்சிருந்தா தானே உனக்கு தெரியும். இத்தனூண்டு செல்போனை இடுப்புல சொருகி வெச்சிகிட்டு ஐயோ போலீஸ் வந்துடுச்சு போல கரிகால நான் ஓடுறேனு சொல்லுறியே அது யாரோ படிச்சவன் கண்டுபிடிச்சது தான?

இன்னைக்கு ராக்கெட்டிலிருந்து நீ போடுற ஜாக்கெட் வரைக்கும் எல்லாம் ஒரு படிச்சவன் கண்டுபிடிச்சது தானே? அதுல நீ குளிர் காய்ஞ்சுகிட்டு படிப்ப பத்தி பேசிகிட்டு இருக்கியா? ஒரு சமூகத்துக்கு படிப்பு எவ்வளவு தேவைன்னு உனக்கு ஏதாவது தெரியுமா? வெறும் வாயை வச்சுக்கிட்டு பேசாத என்று ரேணுகா பதிலடி கொடுத்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் பிக் பாஸ் பிரச்சனைக்கு எதிர்நீச்சல் சீரியலில் செம சவுக்கடி என்று ரசிகர்கள் இதை பாராட்டியும் வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+