ரோஜா சீரியல் பிரியங்காவிற்கு திடீர் திருமணம்.. மாப்பிள்ளை இந்த பிரபலம் தானா?அவரே வெளியிட்ட பதிவு
சென்னை: சன் டிவி ரோஜா சீரியல் மூலம் பிரபலம் அடைந்த பிரியங்கா நல்கரி மார்ச் 23ஆம் தேதியான இன்று திருமணம் செய்து புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார்.
இவர் பெங்களூரை சேர்ந்தவராக இருந்தாலும் பல மொழிகளிலும் திரைப்படங்களிலும் சீரியலிலும் நடித்து இருக்கிறார் .
திருமண புகைப்படங்களை பிரியங்கா நல்கரியே சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்.

புதிய சீரியல்
நடிகை பிரியங்கா நல்கரி மக்கள் மத்தியில் அதிகம் இடம் பிடித்தது ரோஜா சீரியல் மூலமாகத்தான் என்றாலும் தற்போது அந்த சீரியல் முடிவடைந்து விட்ட நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இந்த நிலையில் பிரியங்கா நல்கரி தற்போது பிசினஸ் மேன் ஒருவரை திடீர்னு சிம்பிளாக திருமணம் செய்து இருக்கிறார்.

திடீர் திருமணம்
நடிகை பிரியங்கா நல்கரி திருமணம் செய்திருக்கும் நபரின் பெயர் ராகுல் வர்மாவாம். இவர்களின் திருமணம் மலேசியாவில் இருக்கும் ஒரு முருகன் கோவிலில் வைத்து எளிமையாக முடித்து இருக்கின்றது. இந்த நிலையில் அவருடைய திருமண புகைப்படங்களை பிரியங்கா நல்கிரியே சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்கள் அதிகமாக பரவி வருகிறது. அதிகமானோர் திடீர் திருமணத்திற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பி வரும் நிலையில் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

ரொம்பவே சந்தோஷம்
முதலில் ரோஜா சீரியலில் காலடி எடுத்து வைக்கும் போது இவருக்கு தமிழ் தெரியாததால் ரொம்பவே பயந்து இருக்கிறார் .ஆனால் தமிழ் ரசிகர்கள் இந்த அளவுக்கு வரவேற்பு கொடுப்பார்கள் என்பதை அவர் அறியவில்லை .ஆனால் தற்போது இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பார்த்து இவர் ரொம்பவே சந்தோஷம் அடைந்து இருக்கிறார் .எப்பவுமே வந்தாரை வாழவைக்கும் ஊர் தானே நம்ம என்பதை தமிழ் ரசிகர்கள் நிரூபித்து விட்டனர்.

விளம்பர மாடல்
இவர் சீரியல் நடிகையாக மட்டுமல்லாமல் பல விளம்பர மாடலாகவும் இருந்து வருகிறார் . அதனால் சூட்டிங் இல்லாத நேரங்களில் மாடலிங் போட்டோ ஷூட் களை எடுத்து குவித்து வருகிறார் . அதனால் அடிக்கடி இவர் வெளியிடங்களுக்கு சென்று வருகிறார் .ஆனால் செல்லும் இடங்கள் எல்லாம் சில பல போட்டோக்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு வருகிறார் .அதுமட்டுமல்லாமல் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப இவர் விதவிதமாக களமிறங்குவார்.

மிஸ் பண்ணும் ரசிகர்கள்
தற்போது உள்ள தமிழ் நடிகைகளே தமிழில் பேச தெரியாமல் திணறிக் கொண்டிருக்கும்போது ஹைதராபாத்தில் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் நான் எனக்கு கிடைத்த வாய்ப்பிற்காக தனக்கு அங்கீகாரம் கிடைத்த இடத்தின் மொழியை நன்றாக பழகிக் கொண்டேன் என தன்னுடைய செல்லமான தமிழினால் ரசிகர்களையும், இளைஞர்களையும் வசியப்படுத்தி வைத்து இருக்கிறார்.

குடும்பத்திற்காக தியாகம்
தன்னுடைய எந்த கஷ்டத்தையுமே வெளியே காட்டாத பிரியங்கா நல்கரி இவருடைய வீட்டில் மூத்த பெண் ஸ்கூல் படிக்கும்போதே பொருளாதார ரீதியாக ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறார். ஆனாலும் இவருக்கு டான்ஸ் ரொம்ப பிடிக்கும் என்பதினால் இவரோட அம்மா இவரை டான்ஸ் ஷோவில் கலந்துக்க வைத்திருக்கிறார். அதனால் இவருக்கு கிடைத்த பணத்தில் தான் இவருடைய படிப்பு செலவிற்கு செலவழித்து இருக்கிறார். இவருடைய இரு தங்கைகளின் படிப்புக்காக தன்னுடைய படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். சின்ன வயதிலேயே நிறைய ஸ்டேஜ் ஷோவில் கலந்து கொண்டிருந்ததால் அதன் மூலமாக நடிப்பிற்கு வந்திருக்கிறார். தற்போது சமீபத்தில் தான் அவருடைய சகோதரியின் திருமணத்தை பிரம்மாண்டமாக பிரியங்கா நடத்தி வைத்திருந்தார்.

ஆரம்பத்தில் உருவ கேலி
காலேஜ் படிக்கும் போது பிரியங்காவின் உயரத்தையும் லுக்கையும் பார்த்து பலர் கலாய்த்து இருக்கிறார்கள். ஆனால் இப்போது அதே உயரத்தையும், ஸ்ட்ரக்சரையும் தான் தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. இதனை நினைத்து எனக்கு இப்போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது என்று பிரியங்காவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். புசுபுசுவென உடல் அமைப்பையும் பலருக்கும் பிடித்திருக்கிறது. ஒல்லியாக இருந்தால்தான் அழகு என்று நினைத்து இருந்த ரசிகர்களின் மத்தியில் கொழுக்கு முழுக்கு என்று இருந்தாலும் நம்ம சன் டிவி ரோஜா மாதிரி இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications