லீக்கானது டாப் குக்கு டூப் குக்கு போட்டியாளர்கள் லிஸ்ட்.. வேலராம மூர்த்தி முதல் இவர்களுமா? சண்டக்கோழியும் இருக்காங்களே
சென்னை: சன் டிவியில் வெற்றிகரமாக முடிவுக்கு வந்த டாப் குக்கு குக்கு நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற உத்தேச பட்டியல் இப்போது வெளியில் இருக்கிறது. அதில் நடிகர் வேலராம மூர்த்தி முதல் எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள் மற்றும் பாடகர்கள் உட்பட பல சீரியல் பிரபலங்களும் கலந்து கொள்கிறார்களாம். அது பற்றி பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் மற்றும் அந்த நிகழ்ச்சியில் நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் உட்பட சிலர் விஜய் டிவியில் இருந்து வெளியே வந்து சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொடங்கியிருந்தனர். இந்த நிகழ்ச்சி தொடங்கப்படும் போது பல விமர்சனங்கள் இருந்தது, இது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் காப்பி நிகழ்ச்சி என்று பலர் கூறி வந்தனர்.

விமர்சனங்கள்
ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை எடுத்த அதே நிறுவனம்தான் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொடங்கி இருந்தது. இதனால் இந்த நிகழ்ச்சி பற்றிய ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த நிகழ்ச்சியில் அதிகமான சினிமா பிரபலங்களும் இதில் கலந்துகொண்டனர். இதுவரைக்கும் சினிமாவில் வில்லனாக மிரட்டி கொண்டிருந்தவர்கள் கூட அவர்களுடைய இன்னொரு முகத்தை இந்த நிகழ்ச்சியில் காட்டியிருந்தனர்.
ஆடிஷன் தொடங்கியது
முதல் சீசன் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றி அடைந்தது. அந்த சீசனில் நரேந்திர பிரசாத் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் இரண்டாவது சீசன் எப்போது ஆரம்பிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. இந்த நிலையில் தான் இப்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த நிகழ்ச்சிக்கான ஆடிஷன் பணி தொடங்கி விட்டதாம். இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட இருக்கிறதாம்.
வில்லன் நடிகர்கள்
இரண்டாவது சீசனில் முதல் சீசனை போலவே பலருக்கும் பரீட்சையமான மற்றும் பிரபலமானவர்களை கலந்து கொள்ள வைப்பதாக கூறப்படுகிறது. அதிலும் சினிமாவில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் வேலராம மூர்த்தியும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள போகிறாராம். அவர் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
டாப் குக்கு டூப் குக்கு போட்டியாளர்கள்
நடிகர் வேல ராமமூர்த்தியும் அந்த சீரியலில் அவரிடம் அடிக்கடி சண்டைக்கு நிற்கும் பார்வதியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக தெரிகிறது. அதுபோல நடிகை இனியாவும் இந்த நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய கம்பேக் கொடுப்பதற்காக முயற்சி செய்திருக்கிறாராம். இவர்களுடன் பாடகர் உன்னிகிருஷ்ணனும் போட்டியாளர் ஆக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
உத்தேச பட்டியல்
அது போல சினிமாவில் குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் எம் எஸ் பாஸ்கரன் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்கிறாராம். அவரை தொடர்ந்து சீரியல் நடிகர் நந்தன், சீரியல் நடிகை கேப்ரில்லா, சூப்பர் சிங்கர் பிரபலம் ஷாம் விஷால் போன்றோர்களும் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. இவர்களுடன் நடிகை சாக்ஷி அகர்வாலும் என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications