சன் டிவியின் மாஸ்டர் பிளான்.. டிஆர்பிக்காக செய்த சித்து வேலை.. சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி
சென்னை: சன் டிவியில் டிஆர்பிக்காக சில சீரியல்களின் நேரம் அதிரடியாக மாற்றப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே சன் டிவிக்கு போட்டி சேனல் ஆக இருக்கும் விஜய் டிவியில் பிக் பாஸ் தொடங்கப்பட்டதிலிருந்து சன் டிவி தங்களுடைய டிஆர்பியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக புது விதமான முயற்சி செய்திருக்கிறது.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியல் மற்றும் இனியா சீரியல் போன்றவை நேரம் மாற்றப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அது குறித்து முழு தகவல்களையும் விரிவாக பார்க்கலாம்.
இந்த வகையில் சீரியலுக்கு பெயர் போன சன் டிவியில் புதிது புதிதாக பல சீரியல்கள் வந்தாலும் அது பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருவது தான் சிறப்பு. இதனாலேயே இந்த சேனலுக்கு ரசிகர்களின் மத்தியில் அதிகமான வரவேற்பு இருக்கிறது. சின்ன திரையில் அதிகமான வருடங்கள் ஒளிபரப்பான பல சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பானது தான்.
ஒரு சீரியலுக்கு ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு கிடைத்துவிட்டால் அதை பல வருடங்களாக கதையை நகர்த்தி டிஆர்பியை தக்க வைத்துக் கொள்வதற்கு சன் டிவி பல வருடங்களாகவே முயற்சி செய்து வருகிறது. அதே நேரத்தில் சன் டிவிக்கு போட்டியாக பல சேனல்கள் இருந்து வருகிறது. அதுவும் விஜய் டிவி சன் டிவியை போலவே பல சீரியல்களையும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் தொடங்கி கொண்டிருக்கிறது. அதனால்யே டாப் 10 சீரியல்களில் சன் டிவி, விஜய் டிவி சீரியல்கள் அதிகமாக இடம் பிடித்து விடுகிறது.
அந்த வகையில் இந்த முறை விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி ரசிகர்களின் எதிர்பார்ப்போடு ஒளிபரப்பாகி வருகிறது. அதுவும் இந்த முறை அதிகமான இளைஞர்கள் இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. அதனாலேயே சன் டிவி தன்னுடைய டிஆர்பி ரேட்டிங் குறைந்து விடக்கூடாது என்பதற்காக அதிரடியாக சில மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இனியா சீரியல் இனி ஒன்பது முப்பது மணிக்கு ஒளிபரப்பாகும் என்று நேரம் மாற்றப்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில் 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் இனி ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகும் என்று மாற்றப்பட்டிருக்கிறது. ஏற்கனவே எதிர்நீச்சல் சீரியலிலும் இப்போது முக்கியமான திருப்பம் வந்திருக்கிறது. இத்தனை நாட்களாக குணசேகரன் யார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இப்போது அந்த கேரக்டரில் நடிகர் வேலராமமூர்த்தி அறிமுகம் ஆகி இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த சீரியல் ஆரம்பத்திலேயே சரிந்து விடக்கூடாது என்பதற்காக 9 மணி நேரத்தை சரியாக பிடித்திருக்கின்றனர்.
ஆனாலும் அதே நேரத்தில் விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தான் இப்போது விஜய் டிவி சீரியல்களில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. அதேபோல டாப் 10 சீரியல்களின் முதல் இடத்தில் எதிர்நீச்சல் சீரியல் இருக்கிறது. அந்த வகையில் இனி எதிர்நீச்சல் மற்றும் சிறகடிக்க ஆசை சீரியல் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகி வருவதால் இந்த சீரியலுக்கு அதிகமான வரவேற்பு கிடைக்கும் என்பது அடுத்த வாரத்தில் தெரியும்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications