Sun TV Serials: ராத்திரி 9 மணிக்கு.. சன் டிவியின் புது உத்தி!
Recommended Video
சென்னை: டாய்லெட் கழுவும் வேலையாக இருந்தாலும் நம்மை மாதிரி செய்ய முடியாது என்று பெயர் வாங்க வேண்டும் என்று, உலக நாயகன் கமல்ஹாசனின் அம்மா சொல்வார்களாம்.
இப்படி ஏ டூ இசட் எந்த வேலையாக இருந்தாலும் சரி, இந்த யுக்தியை சரியாக கையாண்டு வந்தால் வெற்றி நமக்கே.
சன் டிவி இப்படிப்பட்ட பல யுக்திகளை கையாண்டுதான் எப்போதும் ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து வருகிறது. இது மக்களின் நாடி பிடித்து செயல்பட வேண்டிய ஒரு விஷயம் என்பதில் சன் டிவி கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது.

இரவு 9 மணி ஸ்லாட்
சன் டிவியின் முக்கியமான ப்ரைம் டைம் இரவு 9 மணி நேரம்தான் என்கிறார்கள்.அப்போதுதான் எல்லார் வீட்டிலும் ஆண்கள் சாப்பிட உட்கார்ந்து டிவி பார்க்கும் நேரம் என்றும் சொல்கிறார்கள். அப்போது குடும்ப தலைவனுடன் சேர்ந்து எல்லாருமே அந்த நேரத்தில் சன் டிவியை பார்ப்பார்கள் என்பதும் சன் டிவியின் கணிப்பு.

தப்பவில்லை கணக்கு
இப்படித் திட்டம் போட்ட சன் டிவியின் கணக்கு தப்பவில்லை. எந்த புது சீரியல் ஆரம்பித்தாலும், அதாவது இரவு நேர சீரியல்கள் ஆரம்பித்தாலும், அதற்கான ஸ்லாட்டை இரவு ஒன்பது மணிக்கு முதலில் ஒதுக்கித் தந்துவிடுமாம். அதன் படி அந்த சீரியல் ஹிட் ஆனதும், அதற்கான நேர மாற்றத்தையும் சில வாரங்களில் அறிவித்து விடுமாம்.

ரன் கண்மணி
நாமே யோசிச்சு பார்க்கலாமே.. முதலில் கண்மணி சீரியலுக்கு 9 மணி நேர ஸ்லாட்டை கொடுத்த சன் டிவி, அடுத்து விகடன் டெலிவிஸ்டாஸ் ரன் சீரியலுக்கு அந்த நேரத்தை ஒதுக்கித் தந்தது. இப்போது ரன் ஓரளவுக்கு பார்வையாளர்களை ஈர்த்துவிட, அதை 10 மணிக்கு மாற்றிக் கொடுத்த சன் டிவிக்கு இதன் வியூவர்ஸ் குறைய மாட்டார்கள் என்று அசாத்திய நம்பிக்கையில் உள்ளது.

ராசாத்தி சீரியல்
மதிய நேரம் ஒளிபரப்பான ரோஜா சீரியலுக்கு பார்வையாளர்கள் கூடிக்கொண்டே வர, அந்த சீரியலை அனைவரையு ம் பார்க்க செய்து,பின்னர் அதன் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று, 9 மணி ஸ்லாட்டை ஒதுக்கித் தந்தது. சீரியல் ரேட்டிங்கில் இடம் பிடித்துவிட்ட நிலையில், ரன் சீரியலுக்கு 9 மணியை ஒதுக்கித் தந்தது.
இப்போது அந்த இடத்தை புதிதாக ஒளிபரப்பாகி வரும் ராசாத்தி சீரியலுக்கு ஒதுக்கித் தந்துள்ளது. கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் கணக்கு சரியாகத்தான் வருது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications