Chithi 2 Serial: சித்தி 2... ராதிகாவை கொண்டாட ஆரம்பித்த சன் டிவி!
சென்னை: சித்தி 2 அறிவிப்பு, ப்ரோமோ என்று ராதிகாவை கொண்டாட ஆரம்பித்து இருக்கிறது சன் டிவி.
சன் குடும்ப விருதுகள் விழாவில் ராதிகா சரத்குமாருக்கு ஒரு விருதையும் அறிவித்து வழங்கியது சன் டிவி.
சன் டிவியில் சித்தி 2 சீரியல் வருகிற 27ம் தேதி முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

பொங்கல் நிகழ்ச்சிகள்
பொங்கல் நிகழ்ச்சிகள் என்று சன் டிவி 6 தினங்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி விடுமுறை தினத்தை கொண்டாடி வருகிறது. கடந்துவிட்ட இந்த நாட்களில் சித்தி 2 சீரியலுக்கான ப்ரோமோ தவிர வேறு எந்த சீரியல் ப்ரோமோவையும் சன் டிவி ஒளிபரப்பவில்லை.எல்லாம் பழைய சீரியல் சித்தி 2 மட்டும்தான் புது சீரியல் என்றாலும், சும்மாவேனும் ஒளிபரப்பாகும் வேறு சீரியலுக்கான ப்ரோமோவை சன் டிவி ஒளிபரப்பவில்லை.

சித்தி 2 ப்ரோமோ
வழக்கமாக புது சீரியல் ஒளிபரப்புவது என்றால் அதற்கான நேரத்தை ரொபம்பவும் சஸ்பென்சாக வைத்திருந்து, கடைசி நேரத்தில் மட்டுமே சன் டிவி நேரத்தை அறிவிக்கும். ஆனால், சித்தி 2 விஷயத்தில் ப்ரோமோ ஒளிபரப்பும்போதே நாள், நேரம் எல்லா சஸ்பென்ஸையும் போட்டு உடைத்து விட்டதன் மர்மம் என்னவென்று புரியவில்லை.

முதலில் விரைவில்
ஒரு புது சீரியல் வருகிறது என்றால் முதலில் விரைவில்.. விரைவில்.. என்று மக்களின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் போட்டுவிட்டு, பின்னர் நாள் நேரத்தை அறிவிப்பதுதான் சன் டிவியின் வழக்கம். ஆனால், ராதிகாவின் சித்தி 2 வில் அனைத்து வழக்கத்தையும் மாற்றிக்கொண்டு இருக்கிறது சன் டிவி.

வணக்கம் தமிழா
ராதிகாவின் சித்தி 2 வருவதற்குள் அவரை கொண்டாட ஆரம்பித்து இருக்கும் சன் டிவி, வணக்கம் தமிழாவில் ராதிகா சரத்குமார் மற்றும் சரகுமாரை சிறப்பு விருந்தினராகவும் நேர்காணல் செய்து இருக்கிறது. அதன் ப்ரோமோவையும், சித்தி 2 ப்ரோமோவையும் மட்டும் போட்டுத் தாக்கி வருகிறது சன் டிவி.
மொத்தத்தில் இதுநாள் வரை கொண்டாடாமல் விட்டுவிட்ட ராதிகாவை புதிதாக கொண்டாட ஆரம்பித்து இருக்கிறது சன் டிவி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications