சன் டிவி சீரியல் காதல் ஜோடியின் திடீர் திருமணம்... யார் தெரியுதா? குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கேரக்டரில் நடித்து பிரபலமான நடிகர் அரவிஷ் இன்று சீரியல் நடிகை ஹரிகாவை திருமணம் செய்து இருக்கிறார். நடிகை ஹரிகா சன் டிவியில் ஒளிபரப்பாகிய திருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தவர்தான்.
ஹரிகா மற்றும் அரவிஷ் திருமணம் பெரியோர்களின ஆசிர்வாதத்தோடு இரு வீட்டார் சம்மதத்தோடு நடைபெற்று இருந்த நிலையில் இவர்களுக்கு அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சின்னதிரையில் ஒன்றாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. இது பல வருடங்களாகவே பின்பற்றப்பட்டு வருகிறது தான். அதிலும் சமீப காலமாக ஒரே சீரியலில் நடிக்காத நடிகர்கள் கூட காதலித்து திருமணம் செய்து இருக்கின்றனர்.
அந்த வகையில் தான் சில வருடங்களுக்கு முன்பு ஷபானா மற்றும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆரம்பத்தில் செழியனாக நடித்து வந்து இப்போது ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் ஆர்யன் திருமணமும் நடைபெற்றது.
இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் காதலிக்கிறார்கள் என்ற செய்தி இணையத்தில் வெளியானதும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. காரணம் இருவரும் வெவ்வேறு சேனலில் வெவ்வேறு சீரியலில் நடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்களுக்குள் காதல் என்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்போது இவர்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அதே வரிசையில் மற்றொரு சின்னத்திரை பிரபலங்கள் சேர்ந்து இருக்கின்றனர். அதாவது சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கேரக்டரில் நடித்து பிரபலமான அரவிஷ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த திருமகள் சீரியலில் கதாநாயகி ஹரிகாவை காதலித்து இன்று திருமணமும் செய்து இருக்கிறார்.
சுந்தரி சீரியலில் சுந்தரியின் அண்ணனாக இருந்து பல உதவிகளை செய்து கொண்டிருக்கும் அரவிஷ். சுந்தரி சீரியலின் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் நடித்து வருகிறார். கோயம்புத்தூரை சேர்ந்த அரவிஷ் இப்போது இலக்கியா சீரியலிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் சில மாதங்களுக்கு முன்பு அரவிஷ் மற்றும் ஹரிகா காதல் விவாகாரம் இணையத்தில் ரசிகர்களுக்கு தெரிய வந்தது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications