இளமை இதோ இதோ.. 80களின் சூப்பர் ஹிட் படங்கள்.. அடித்துக் கலக்கும் சன் டிவி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவி இந்த வாரம் முழுக்க இரவு 9: 30 மணிக்கு 80களின் சூப்பர் ஹிட் படங்களை ஒளிபரப்ப இருக்கிறது. அதன் படி சூப்பர் ஹிட் பாடல் இடம்பெற்ற விஷ் யு எ ஹேப்பி நியூ இயர் என்று காலத்தால் அழிக்க முடியாத படம் இடம்பெற்ற சகலாகலவன் படமும் ஒளிபரப்பாக உள்ளது.

60கள்...80கள் ஆகிய இரண்டு காலங்களை தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று கூறுவார்கள். நல்ல நல்ல படங்கள் வெளிவந்த காலம்...சூப்பர் ஹிட் என்று மக்கள் மறுபடி மறுபடி என்று பார்த்து பார்த்து வெற்றியாக்கிய படங்கள்.

அப்போதைய 60ஸ் காலம் சிவாஜி எம்ஜிஆர் காலம், 80ஸ் காலம் கமல், ரஜினி காலம். கூடவே விஜயகாந்த்..சத்யராஜ், பிரபு முரளி உள்ளிட்டோர் சூப்பர் ஹிட் படங்களை வரிசையாக கொடுத்த காலமும் கூட...! எல்லாவற்றையம் விட இளையராஜா என்ற இசை மேதையின் சாம்ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறந்த காலம்.

 மை நேம் ஈஸ் பில்லா

மை நேம் ஈஸ் பில்லா

மை நேம் ஈஸ் பில்லா என்று அதிரடி பாடல் இடம் பெற்ற...டைரியில் டிவிஸ்ட் வைத்து அதைத் தேட மலேசியாவுக்கு புறப்படும் விறு விறு கதையுடன் ஆரம்பிக்கும் படம், ரஜினிதான் பில்லா. இந்த படம் திங்கள் இரவு 9:30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த படத்தை ரீ மேக் செய்து அஜித் நடித்தபோதும் வசூலை வாரிக்குவித்தது.

 மவுன ராகம்

மவுன ராகம்

மணி சார் மணி சார் என்று இளசுகள் இயக்குநரை செல்லமாக அழைக்க ஆரம்பித்த படம். ரேவதி, கார்த்திக், மோகன் மூவரும் சூப்பர் நடிப்பில் அசத்தி இருப்பார்கள். மோகன் எந்தவித அலட்டலும் இல்லாமல், முக்கியமாக கையில் மைக் இல்லாமல் நடித்தும் அவர் ரசிகர்கள் அவரை ஏற்றுக்கொண்ட படம்.

 அம்மன் கோயில் கிழக்காலே

அம்மன் கோயில் கிழக்காலே

விஜயகாந்த்துக்கு மிகப் பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த படம். இந்த படத்தில் இளையராஜா வழங்கிய அத்தனை பாடல்களும் முத்து முத்தனாவை. விஜயகாந்த் அவ்வளவாக அதிரடி ஆக்ஷன் காண்பிக்காமல் நடித்த படம். செதுக்கி வச்ச சிலை மாதிரியான அழகில் ராதாவை பிரேமுக்கு பிரேம் காண்பித்து இருக்கும். இந்த படம் புதன் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

 அதிரடி வியாழன்

அதிரடி வியாழன்

அதிரடி வியாழன் என்று சொல்லும் அளவுக்கு வியாழக்கிழமை இரவு 9:30 மணிக்கு உலக நாயகன் கமல் நடிப்பில் வந்த சகலாகலா வல்லவன். இன்றைய வரைக்கும் இந்த படத்தில் இடம்பெற்ற ஹேப்பி நியூ இயர் பாடல்தான் இப்போது புத்தாண்டுக்கு ஒளிபரப்பி மகிழ்கிறார்கள். சில்க் ஸ்மிதாவின் ஒரே ஒரு டான்ஸ் இன்று வரை சூப்பர் ஹிட்டாக உள்ளது. பக்கா மசாலா படம் இது.. ஆனால் வசூலில் வாரிச் சுருட்டிய படமும் கூட. உலகநாயகன் வசூல் மன்னனாக இதில் தன்னை நிரூபித்த படம்.

 நல்லவனுக்கு நல்லவன்

நல்லவனுக்கு நல்லவன்

ரஜினிகாந்த், ராதிகா நடிப்பில் ஏவிஎம் தயாரித்து எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் படம். கார்த்திக்கும் இந்த படத்தில் நடித்து இருப்பார். ரஜினியின் நடிப்புக்கு கொஞ்சம் தீனி கொடுத்த படங்களில் இதுவும் ஒன்று என்று சொல்லலாம். நடிப்பில் ஒருபக்கமும், அதிரடி ஆக்ஷனில் இன்னொரு பக்கமுமாக விளையாடிருப்பார் ரஜினி. வெள்ளி இரவு இந்த படத்தை சன் டிவி ஒளிபரப்புகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+