சன் டிவி சீரியல் நடிகைக்கு திருமணம்.. கணவர் இந்த பிரபலம் தான்.. ஃபங்ஷனில் குவிந்த பிரபலங்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி, அழகு போன்ற சீரியல்களில் நடித்த நடிகை சாரா என்ற ஜெனிப்பிரியாவிற்கு திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பு நலுங்கு பங்க்ஷனில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
சின்னத்திரையில் நடிக்கும் பல நடிகைகள் தொடர்ச்சியாக சினிமாவில் கலக்கி வருகிறார்கள். ஒரு சிலர் நடிகைகள் சீரியல் மற்றும் சினிமா என இரண்டிலும் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஒருவர்தான் நடிகை சாரா என்ற ஜெனிப்பிரியா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி, அழகு போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் துணை கேரக்டரில் நடித்த இவர் ராஜமன்னார் வகையறா என்ற சீரியலில் லீட் ரோலில் நடித்தார். அதற்குப் பிறகு ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக தமிழ் படம் 2 படத்தில் இவரும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். சினிமா வாய்ப்பு தனக்கு எதிர்பார்த்த அளவில் கிடைக்காததால் சைடு பிசினஸ் ஆக பிரபலங்களுக்கு மேக்கப் மற்றும் மேக்கப் பயிற்சி வகுப்புகளையும் தொடங்கி இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்ட ஜூலி தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் போட்டோ சூட் மூலம் புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தாரே அவருக்கு மேக்கப் போட்டதே சாரா தானாம். பொதுவாக தனக்குத் தெரிந்த கலையை அப்படியே வேலையாக மாற்றுவது ஒரு சிலர்தான். அதில் இவரும் ஒருவர். தனக்கு தெரிந்த கலையை பணமாக சம்பாதித்து கொண்டு இருக்கின்றனர்.

அதில் சாரா என்ற ஜெனிப்பிரியாவிற்கும் சிங்கப்பூரை சேர்ந்த துநேசன் என்பவருக்கும் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய நலங்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சீரியல் நடிகைகள் ஸ்ரீவித்யா, லதா ரா உட்பட பல நடிகைகள் கலந்து கொண்டிருக்கின்றனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜெனிப்பிரியாவின் வருங்கால கணவர் துநேசன் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பைலட்டாம். சிங்கப்பூர் குடியுரிமை வைத்திருக்கிறாராம். இது காதல் திருமணம் கிடையாது பெற்றவர்கள் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் தான் திருமணத்திற்கு பிறகு அவருடைய கணவர் நீ சீரியலில் நடிக்கிறது என்றாலும் நடிக்கலாம் அல்லது மேக்கப் வேலையை அங்கேயும் தொடங்கலாம் என்று சொல்லிவிட்டார் நானும் அதனால் திருமணத்திற்கு ஓகே சொல்லி சொல்லிவிட்டாராம். இவர்களுடைய திருமணம் அடுத்த மாதம் நவம்பர் எட்டாம் தேதி மற்றும் 11ஆம் தேதிகளில் சிங்கப்பூரில் வைத்து நடக்க இருக்கிறதாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications