Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெப்சி உமாவை போல்! 90 கிட்ஸ்களின் பிரபல விஜே மீண்டும் ரீஎன்ட்ரி .. அனுகூலமான சேனல் எதுவோ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ராசி பலன் படித்து அனுகூலமான திசை கூறிய விஜே விஷால் சுந்தர் மீண்டும் மீடியாவுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளார்.

சினிமா நடிகர், நடிகைகளை போல செய்தி வாசிப்பாளர்கள், டிவி ஆங்கர்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கும். 90 கிட்ஸ்களின் பேவரைட் ஆங்கர்கள் என்றால் பெப்சி உமா, விஜயசாரதி, செய்தி வாசிப்பாளர் ரத்னா, ஆனந்த கண்ணன், அர்ச்சனா உள்ளிட்டோர் ஆவர்.

Sun TV VJ Vishal Sundar announces about reentry in media

அந்த வகையில் தினமும் காலையில் ராசி பலன் சொல்லும் விஜே விஷால் சுந்தரை நினைவிருக்கிறதா? மேஷ ராசி நேயர்களே என ஆரம்பித்து மீன ராசி வரை அன்றாட ராசிபலன்களை கூறுவார். இவரது தமிழை கேட்டு மயங்காதவர்களே கிடையாது.

தூய்மையான தமிழில் அழகான உச்சரிப்பை கொடுப்பார். அனுகூலமான திசை, அணிய வேண்டிய ஆடையின் நிறம் உள்ளிட்டவைகள்தான் காலை நேரங்களில் பெரும்பாலான வீடுகளில் டிவிகளில் ஒலிக்கும். இப்படிப்பட்ட அனைவருக்கும் பிடித்தமான விஷால் சுந்தர் தற்போது லண்டனில் உள்ளார்.

அவர் 18 ஆண்டுகளாக சன்டிவியில் ராசி பலனை படித்து வந்தார். இவர் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே பகுதி நேரமாக ராசி பலனை படித்தார். எம்பிஏ படித்திருக்கும் இவர் ஒரு கட்டத்தில் வேலை விஷயமாக 3 ஆண்டுகளுக்கு லண்டன் செல்ல வேண்டியிருந்ததால் ராசி பலன் நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டார்.

இவர் தற்போது யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மேஷ ராசி நேயர்களே இன்று கோடை வெப்பம் அதிகமாக உள்ளதனால் தண்ணீர் பாட்டிலுடன் மட்டுமே செல்ல வேண்டும் என தொடங்கினார். மேலும் அவர் பேசுகையில் நான் மீண்டும் மீடியா துறைக்கு வர வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

எனக்கு பிடித்தமான வேலை செய்யும்போது மற்ற எல்லாமே நன்றாக இருக்கும் என்றார். அப்போது ஒருவர் அவர் குறித்து கவிதையை வாசித்தார். அதில் அவர் கூறுகையில்

நான் பதறி எழுந்து பள்ளிக்கு செல்ல தேனீயை போல பரபரக்கும் சூழலில் ராசி பலனில் ஒலிக்கும் உங்கள் குரல் என்னை ஒரு நிமிடம் உறைய வைத்துவிடும். அனுகூலமான திசை நீங்கள் கிழக்கு என சொன்னாலும் மேற்கில் இருக்கும் என்னுடைய பள்ளிக்குத்தான் நான் செல்ல முடியும். ராசியின் நிறம் ஊதா, பச்சை என நீங்கள் சொன்னாலும் பள்ளி சீருடையை மாற்ற முடியாதே என எண்ணி பல நாள் அவதியுற்றிருக்கிறேன்.

ஆனாலும் அந்த நிமிடங்கள் வீணாகவில்லை. உங்களிடம் இருந்து அழகு தமிழை உச்சரிக்க கற்று தேர்ந்திருக்கிறேன். உங்களுடைய ரீ என்ட்ரியை ஆவலோடு எதிர்நோக்கும் 90ஸ் கிட்ஸ் என ஒருவர் வாசித்து முடித்த போது நன்றி என விஷால் சொன்னார். மேலும் விஷால் தொடர்கையில் எங்களுக்கு ஜோசியர் எழுதி கொடுத்ததை நான் அப்படியே படித்தேன். அவருடையது சரியானது மற்றும் நல்ல ஜோசியம்தான்.

பொதுவாக என் ஜாதகத்தையோ என் வீட்டில் இருப்போரின் ஜாதகத்தையோ பார்த்ததே கிடையாது. என்னுடைய பையனுக்கு 21 வயதாகிறது. அவருடைய ஜாதகத்தை நான் கணித்தது கூட கிடையாது. ஜோசியத்தை நம்பி நான் என் நாட்களை நகர்த்த மாட்டேன். என்னுடைய ராசி துலாம். ஜோதிடரிடம் இருந்து ஸ்கிரிப்ட் வந்துவிட்டால் உடனே நானும் எனது உடையை என் ராசிக்கு ஏற்ற நிறத்தில் மாற்றி கொள்வேன்.

2015 ஆம் ஆண்டு நான் சென்னையிலிருந்து பிரிட்டன் சென்றேன். நான் படித்து கொண்டே ராசி பலன் ஷோவை செய்தேன். மேலும் மீடியாவில் ஃபுல்டைம் ஷோ செய்தால் திருமணம் நடக்க வேண்டும். அவர்கள் மீடியா வேண்டாம் என சொல்லிவிட்டால் நம் கேரியரே வீணாகிவிடும். நான் எம்பிஏ படித்திருந்தேன். அதை வீணடிக்கக் கூடாது என்பதால் ஐடி துறையில் வேலை செய்துக் கொண்டே இந்த வேலையை பார்த்தேன்.

சென்னை விமான நிலையத்தில் என்னை இமிகிரேஷன் அதிகாரி அடையாளம் கண்டு கொண்டார். மேலும் லண்டனில் தமிழர்களுக்கான கடைகளில் நிறைய தமிழக மாணவர்கள் பார்ட் டைமாக பணியாற்றுவார்கள். அவர்கள் என்னை அடையாளம் கண்டு செல்ஃபி எடுத்துக் கொண்டனர். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அத்துடன் அந்த புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துவிட்டனர். இதனால் என்னை நிறைய பேர் அடையாளம் கண்டு கொண்டனர். இவ்வாறு விஷால் சுந்தர் தெரிவித்திருந்தார். ஏற்கெனவே அர்ச்சனா மீடியாவுக்கு மீண்டும் வந்துவிட்டார். நியூஸ் ரீடர் ரத்னா சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கிறார். தற்போது பெப்சி உமா மீண்டும் மீடியாவுக்குள் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் விஷால் சுந்தரும் தனது ரீ என்ட்ரியை அறிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+