எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் சொன்னது வேறு செய்வது வேறு.. ஏன் இப்படி? அடுத்தடுத்து மாற்றப்படும் கதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் ஆரம்ப காலகட்டத்தில் அடுத்தடுத்த எதிர்பாராத திருப்பங்கள் கதையில் வந்து கொண்டிருந்த நிலையில் இப்போது கதையில் ஏற்பட்ட மாற்றம் மக்கள் மத்தியில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அதிலும் இந்த சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வந்த மாரிமுத்து இறப்பிற்கு பிறகு எதிர்பார்க்காத வகையில் கதை பயணித்துக் கொண்டிருக்கிறது. பெண்களின் முன்னேற்றத்தை மையப்படுத்திய இந்த சீரியலில் பெண்களை ஒவ்வொரு முறையும் அடிமைப்படுத்துவது போன்று தான் கதை வந்து கொண்டே இருக்கிறது.

Sun TV s ethirneechal serial story is being criticized fans

இந்த சீரியலின் மையகருத்தே பெண்கள் சுயமாக எதிர்நீச்சல் போடுவது தான். ஆனால் இந்த சீரியல் தொடங்கி இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் பெண்கள் எதிர்நீச்சலை தொடங்கவில்லை. ஒவ்வொரு இடங்களிலும் பெண்கள் இனி சுயமாக முடிவெடுப்பார்கள் என்று எதிர்பார்த்து இருக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.

அதிலும் இந்த சீரியலில் பெண்கள் வீர வசனம் பேசுவதற்கு மட்டும்தான் சரி படுவார்கள் என்பது போன்று கதையை பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். கதையின் வில்லன் தான் ஒவ்வொரு இடத்திலும் ஜெயித்துக் கொண்டிருக்கிறார். அதனால் இதே போன்று சமுதாயத்தில் ஆண் ஆதிக்க குணம் படைத்தவர்களும் பெண்கள் வீர வசனம் பேசினாலும் கடைசியில் எதிர்நீச்சல் சீரியலில் வருவது போன்று தான் நடக்கும் என்று எடுத்துக்காட்டுக்கு சொல்வது போல தான் நிலைமை மாறிக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே ஆதிரை திருமணத்தில் பல பிரச்சனைகள் வந்தது. அதுவும் பல மாதங்களாக நடந்து கடைசியில் அவருக்கு பிடிக்காத ஒரு திருமணத்தை தெருவில் வைத்து அண்ணன்கள் செய்து விட்டனர். அதற்குப் பிறகு பல மாதங்கள் கழித்து இப்போது ஆதிரை வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். ஆனாலும் அவருடைய வாழ்க்கையில் பெரிய அளவில் இன்னும் எந்த முன்னேற்றமும் வரவில்லை. அதுபோல அப்பத்தா இந்த சீரியலில் முக்கிய தூணாக இருந்த நிலையில் திடீரென்று அவரும் இறந்து போவது போன்று காட்சி வைத்திருக்கிறார்கள்.

ஆனால் அவருக்கு உண்மையில் என்ன ஆனது என்பதை சொல்ல மறந்து விட்டார்கள். அடுத்ததாக தர்ஷினி காணாமல் போனதாக மாத கணக்கில் கதையை இழுத்துக் கொண்டு போனார்கள்... அப்போதும் பெண்கள் நாங்களே தர்ஷினியை கண்டுபிடித்து கொண்டு வருவோம் என்று போட்ட சபதத்தில் தோற்றுப் போய் தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் இந்த சீரியலில் குணசேகரன் ஜெயிப்பது போன்றே கதை போய்க் கொண்டிருக்கும் நிலையில் அவர்தான் இந்த சீரியலின் ஹீரோவாக மாறிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் குணசேகரன் கேரக்டர் சரி என்று சொல்வதற்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது இந்த சீரியலுக்கு வெளியான ப்ரோமோக்களில் கமாண்டுகளில் தெரிகிறது. இதனால் இந்த சீரியலில் கதையை சீக்கிரமாக மாற்ற வேண்டும் என்று சீரியல் ரசிகர்கள் வேண்டுகோள் வைக்கிறார்கள். அதே நேரத்தில் இந்த சீரியலின் இயக்குனர் சில மாதங்களுக்கு முன்பு பேசிய பேட்டியில் நான் மத்த சீரியல்களைப் போல கதை எடுக்கப் போவது கிடையாது.

சில சீரியல்கள் டிஆர்பி கிடைக்க வேண்டும் என்பதற்காக கடத்தலும், பரிகாரங்களும் தான் இருக்கிறது. அதனாலயே அந்த சீரியல்கள் பல வருடங்களை இழுத்துக் கொண்டு போகிறது தவிர மக்களுக்கு பிடித்த மாதிரி இல்லை. ஆனால் நான் மக்களுக்கு பிடித்த மாதிரி கதையை கொண்டு போவேன். ஒருவேளை என்னுடைய சீரியல்கள் மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை உடனே விறுவிறுப்பாக கொண்டு போய் முடித்து விடுவேன் என்று கூறி இருக்கிறார்.

ஆனால் இந்த சீரியல் நெகட்டிவாக போக ஆரம்பித்து சில மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் சீரியலில் எந்த மாற்றமும் இல்லை. ஏற்கனவே தர்ஷினிக்கு கரிகாலனை குணசேகரன் மாப்பிள்ளையாக கொண்டு வந்தார். பிறகு ஆதிரைக்கு கட்டி வைத்தார். அதற்குப் பிறகு ஆதிரை தாலியை கழட்டி வீசிவிட்டு போன பிறகு மீண்டும் தர்ஷினிக்கு கரிகாலனை கட்டி வைக்க போகிறேன் என்று சொல்லியிருந்தார்.

இப்போது கரிகாலனை வீட்டை விட்டு அடித்து துரத்தி விட்டு ஜனனியின் அத்தை பையனுக்கு தர்ஷினியை கட்டி வைக்கப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படி படிக்கிற பிள்ளைக்கு கல்யாணம் நடத்துற மாதிரிதான் கதையை சுற்றி சுற்றி கொண்டு வருகிறார்கள். அதனால் வேகமாக இந்த கதையை மாற்ற வேண்டும் என்பது ரசிகர்கள் வேண்டுகோள்... என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+