சன் டிவியில் முடிவுக்கு வந்த முக்கிய சீரியல்.. வெளியான கடைசி நாள் புகைப்படம்.. செம கிளைமாக்ஸ்
சென்னை: சன் டிவியில் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருந்த இனியா சீரியலில் இந்த வாரத்தோடு முடிவடைய இருக்கும் நிலையில் அதன் கிளைமாக்ஸ் ஷூட்டிங் புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.
சீரியலுக்கு பெயர் போன சன் டிவியில் பல சீரியல்கள் புதியது புதியதாக தொடங்கப்பட்டு வருகிறது. சன் டிவி சீரியலில் நடித்து விட்டால் தமிழ் ரசிகர்களின் மனதில் எளிமையாக இடம் பிடித்து விடலாம். வேற மொழி நடிகைகள் கூட சன் டிவி சீரியலில் நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார்கள். அதற்கு உதாரணமாக நடிகை பிரியங்கா நல்கரி உட்பட ஒரு சிலரை சொல்லலாம்.

பிரியங்கா நல்கரி சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலமாகத்தான் பிரபலமானார். இவர் அதற்கு முன்பு மலையாளம் உட்பட பல மொழிகளில் நடித்திருக்கிறார். ஆனால் தமிழில் இவருக்கு இதுதான் முதல் சீரியல். இந்த சீரியல் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். அதற்கு பிறகு தான் இந்த சீரியல் முடிவடைந்ததும் ஜீ தமிழ் சீரியல்களில் நடித்திருந்தார்.
அதுபோல ஒரு சில சீரியல்கள் சன் டிவியில் பல வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. டிஆர்பி யில் எப்போதும் சன் டிவி சீரியல் தான் முதல் ஐந்து இடங்களை பிடித்துக் கொண்டிருக்கிறது.
அதுபோல விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமடைந்த ஆலியா மானசா சன் டிவியில் இனியா சீரியல் மூலமாக அறிமுகமானார். இந்த சீரியல் ஆரம்பத்தில் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருந்தது. ஆனால் சமீபத்தில் அந்த சீரியலுக்கான நேரம் மாற்றம் செய்யப்பட்டபோது அந்த சீரியலின் டிஆர்பியும் குறைய தொடங்கியது.

ஆரம்பத்தில் பெண்கள் முன்னேற்றம், சுயமரியாதை போன்ற கதைகளத்தோடு தொடங்கிய இந்த சீரியல் பிறகு கதைக்களம் மாற்றப்பட்டது. ஆனாலும் டிஆர்பியில் சரிவடைய தொடங்கியது. அதன் காரணமாக இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.
இதற்கான கிளைமாக்ஸ் ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் ஆலியா மானசாவிற்கு குழந்தை பிறந்து இருப்பது போன்று மொத்த குடும்பத்தினரும் ஒன்று சேர்ந்திருப்பது போன்று காட்சிகள் இருக்கிறது. இந்த சீரியலில் ஆலியா மானசாவின் மாமனார் எதிர்நீச்சல் சீரியல் குணசேகரன் போல தான் ஆரம்பத்தில் பெண்களை அடக்கி ஆட்டி வைத்து கொண்டு இருந்தார்.
அவர் இப்போது திருந்தி இருக்கும் கிளைமாக்ஸ் குறித்து பலரும் பாராட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் இந்த சீரியலை ரசிகர்கள் இனி மிஸ் பண்ணுவதாக கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications