சன் டிவி நடிகையை திருமணம் செய்த சுந்தரி சீரியல் நடிகர்.. ரசிகர்களிடம் பகிர்ந்த மகிழ்ச்சி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கேரக்டரில் நடித்த நடிகர் அரவிஷ், சன் டிவியில் ஒளிபரப்பான திருமகள் சீரியலில் கதாநாயகியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவியின் பிறந்தநாளை சர்ப்ரைஸ் ஆக கொண்டாடியிருக்கிறார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அதிகமான லைக் பெற்று வருகிறது.
சினிமாவாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி ஒன்றாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. இது பல வருடங்களாகவே இருக்கிறது. ஒரு சில பிரபலங்கள்தான் தங்களுடைய திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு போய் இருக்கிறார்கள். ஒரு சில நடிகைகள், நடிகர்கள் வெவ்வேறு சேனலில் நடித்தாலும் காதலில் விழுந்திருக்கிறார்கள்.

சின்னத்திரையில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள், சரவணன் மீனாட்சி சீரியல் புகழ் செந்தில்- ஸ்ரீஜா, ஆலியா மானசா- சஞ்சீவ் தம்பதி என பலரை சொல்லிக்கொண்டே போகலாம். சமீபத்தில் கூட சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் வெற்றி வசந்த் விஜய் டிவியில் பொன்னி சீரியலில் நடிக்கும் வைஷ்ணவியை காதலிப்பதாக அறிவித்திருந்தார்.
இவர்களுடைய எங்கேஜ்மென்ட்டும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்று இருக்கிறது. இவர்களை போலத்தான் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் ஹீரோவின் நண்பர் கிருஷ்ணா கேரக்டரில் நடித்து பிரபலமானவர்தான் அரவிஷ். இந்த சீரியல் முதல் பாகம் முடிவடைந்தது தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது அதிலும் அரவிஷ் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கோயம்புத்தூரை சேர்ந்த அரவிஷ் இப்போது இலக்கியா சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அரவிஷ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த திருமகள் சீரியலில் கதாநாயகி ஹரிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண செய்தி இணையத்தில் அதிகமாக பேசப்பட்டது.
இரு வீட்டாரின் சம்மதத்தோடு பிரபலங்களின் முன்பு இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி ஹரிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு சர்ப்ரைஸ் கேக் கட் செய்துள்ளார். இந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது. ஹரிகாவின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications