கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சுந்தரி சீரியல் கேப்ரில்லா.. வதந்திகளுக்கு வைத்த முற்றுப்புள்ளி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை கேப்ரில்லா தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படம் வெளியிட்டு அறிவித்திருக்கிறார். இவருக்கு பல ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
டிக் டாக் ஆக்டிவ்வாக இருந்த காலகட்டத்தில் கதை சொல்லலாமா என்று கவிதை மற்றும் கதை சொல்லி பெரிய அளவில் பிரபலமடைந்த நடிகை கேப்ரில்லாவிற்கு சன் டிவியில் சுந்தரி சீரியல் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. கருப்பு தேவதையாக இவர் இந்த சீரியலில் அறிமுகமானார்.
சினிமா மற்றும் சீரியல் என்றால் கலராக இருந்தால் தான் வாய்ப்பு, கலராக இருந்தால்தான் மக்கள் ஏற்றுகொள்வார்கள் என்று பின்பற்றப்பட்ட ஒரு மாயையை உடைத்து இருந்தார். தமிழ் பெண்களுக்கும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்று இந்த சீரியல் மூலமாக சின்னத்திரையில் ஒரு புரட்சியை செய்த கேப்ரில்லா 4 வருடங்களாக சுந்தரி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சுந்தரி சீரியலுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சாம்பியன் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிறகு பாதியிலே அந்த நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேற்றப்பட்டார். அதற்கு பிறகு தான் இவருக்கு சுந்தரி சீரியல் வாய்ப்பு கிடைத்தது.
இந்த சீரியல் சில வருடங்களுக்கு முன்பு முடிவடைந்து இரண்டாவது பாகம் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் இந்த சீரியலின் இரண்டாவது பாகமும் முடிவுக்கு வந்துவிட்டது என்று இறுதி நாள் சூட்டிங் புகைப்படங்களை கண்ணீரோடு சீரியல் குழுவினர்கள் எல்லோரும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் கேப்ரில்லா தான் கர்ப்பமாக இருக்கும் போட்டோ சூட் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதற்கு முன்பு அவரும் சீரியலின் இறுதி நாள் புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய வருத்தத்தை தெரிவித்திருந்தார். அடுத்த போஸ்டில் இவர் கர்ப்பமாக இருப்பதை அறிவித்ததும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வருகிறார்கள்.
சில வாரங்களுக்கு முன்பு கேப்ரில்லா அவருடைய கணவரை பிரிந்து விட்டதாக செய்திகள் வைரலாகி வந்தது. அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது தன்னுடைய கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். குடும்பத்தை விட்டு நடிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்த கேப்ரில்லாவிற்க்கு உறுதுணையாக இருந்தது அவருடைய கணவர் சுருளி தான்.

ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் நட்பாக பழகி பிறகு காதலித்து திருமணமும் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய கனவை நிறைவேற்றுவதற்கு தன் கணவர் சுருளி தான் காரணம் என்று பல இடங்களில் கேப்ரில்லா பேசியிருக்கிறார். தற்போது அம்மாவாக மாறி இருக்கும் கேப்ரில்லாவிற்கு நம்முடைய வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்ளலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications