சன் டிவியில் அந்த சீரியல் முடியப்போகிறது! டிஆர்பியில் டாப்பில் இருந்தாலும் முடிய காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சீரியலுக்கு பதிலாக என்ன சீரியல் வரப்போகிறது என்று தகவலும் வெளியாகி இருக்கிறது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

சீரியலுக்கு பெயர் போன சன் டிவியில் பல வருடங்களாக சில சீரியல் ஒளிபரப்பாகி வருவது வழக்கம். ஒரு சில சீரியல் ப்ரைம் டைமில் பல வருடங்களை கடந்து ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தை பிடித்திருக்கிறது. அது முடியப்போகிறது என்ற தகவல்கள் வெளியாகும் போது ரசிகர்கள் அந்த சீரியலை ரொம்பவே மிஸ் பண்ணுவார்கள்.

television top 10 serials 10

கோலங்கள், நாதஸ்வரம், ரோஜா என பல சீரியல்கள் மூன்று வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்தது. அந்த வகையில் சமீபத்தில் கூட சன் டிவியில் சுந்தரி சீரியலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் ஆரம்பத்தில் கிராமத்தில் இருக்கும் ஒரு பெண் தான் படித்து ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் நிலையில், அவருடைய திருமணம்... திருமணத்திற்கு பிறகு வரும் பிரச்சனைகள் காரணமாக ஏற்படும் தடைகள் போன்றவை பற்றி தான் இந்த சீரியல் இருந்தது. ஆனாலும் இந்த சீரியல் திடீரென்று முடிவுக்கு வந்தது.

television top 10 serials 10

அதற்கு பிறகு அதில் இரண்டாவது பாகமும் தொடங்கப்பட்டது. முதல் பாகத்தில் சுந்தரியின் கணவரின் இன்னொரு மனைவியான அனு இறந்து போவது போல காட்சிகள் காணப்பட்டது. அதனால் சுந்தரியின் கணவர் அவரை பலி வாங்குவது போன்று இரண்டாவது பாகத்திலும் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.

தற்போது இந்த கதை முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சீரியலை முடிக்க வேண்டும் என்று பலர் இணையத்தில் தினமும் கருத்து போடுவதை பார்த்து முடிகிறது. சுந்தரி சீரியலின் ப்ரோமோவிற்கு கீழே கூட பலரும் இந்த கருத்தை பதிவு செய்து வருவார்கள்.

television top 10 serials 10

ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவது போல தான் இப்போது கிளைமேக்ஸ் சூட்டிங் இன்னும் ஒரு சில நாட்களில் நடக்கப்போகிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சீரியலுக்கு பிறகு பதிலாக சன் டிவியில் ஆடுகளம் என்று சீரியல் வர இருக்கிறது. ஆனால் சுந்தரி சீரியலின் தீவிரமான ரசிகர்கள் அந்த சீரியல் முடிவுக்கு வருவது குறித்து வருத்தப்படுகிறார்கள். இந்த சீரியல் முடிவது குறித்து உங்கள் கருத்து என்ன என்பதை கமெண்ட் தட்டி விடுங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+