பாரதி கண்ணம்மா 2வில் நடிக்கும் சுந்தரா டிராவல்ஸ் கதாநாயகி..ஆரம்பத்திலேயே இப்படியா ரசிகர்கள்கலாய்ப்பு
பாரதி கண்ணம்மா சீசன் 2வில் வில்லியாக சுந்தரா டிராவல்ஸ் திரைப்பட நடிகை ராதா நடித்திருக்கிறார்.
சென்னை: நடிகர் முரளி நடித்த சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ராதா நடித்திருந்தார்.
தற்போது அவர் பாரதி கண்ணம்மா சீரியலில் நெகடிவ் கேரக்டரில் நடித்து வருகிறார்.
ஆரம்பத்திலேயே இவர் பாரதியின் அத்தையாக இருந்தாலும் சீரியலில் வீட்டுக்குள்ளேயே இருந்து வில்லங்கம் செய்யும் வில்லியாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

தொடரும் அதே பெயர்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீசன் 2 தொடங்கி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் இந்த சீரியல் அதிகமாக நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பாரதி கண்ணம்மா முதல் சீசனும் அதிகமாக நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு பிரபலமான நிலையில் தற்போது இதற்கும் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறதா? என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள். கடந்த சீசனுக்கும் இந்த சீசனுக்கும் கதை வேறுபட்டு இருந்தாலும் அதே கேரக்டர் பெயர்கள் தான் இந்த சீசனிலும் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக பாரதி, கண்ணம்மா, சௌந்தர்யா, அஞ்சலி, அகிலன் ,வெண்பா போன்ற கேரக்டர்கள் அதே சீசனில் இருந்த பெயர்களாக மீண்டும் தொடர்கிறது.

சுந்தரா ட்ராவல்ஸ் வசந்தி
இந்த நிலையில் இந்த சீசனில் பல புது முகங்களும் அறிமுகமாகி இருக்கின்றனர். அந்த வகையில் ஒருவராகத் தான் நடிகை ராதா இருந்து வருகிறார். இவர் இதற்கு முன்பு அசோகன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு முரளி மற்றும் வடிவேலுவின் காமெடியான நடிப்பில் உருவான காமெடியான திரைப்படம் சுந்தரா ட்ராவல்ஸ். இரண்டு திரைப்படத்தில் நடிகர் முரளிக்கு ஜோடியாக நடிகை ராதா நடித்திருப்பார். இந்த திரைப்படம் பஸ்ஸை வைத்து கதை மிகவும் காமெடியாக இருக்கும். இந்த திரைப்படத்தில் முரளி மற்றும் வடிவேலுவின் காம்பினேஷன் இப்ப வரைக்கும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அந்த திரைப்படத்தில் இவர் வசந்தி என்கிற கேரக்டரில் நடித்திருப்பார்.

முதல் திரைப்படம்
இவரின் முதல் படமே சுந்தரா ட்ராவல்ஸ் தான். அதற்குப் பிறகு கேம், அடாவடி, காத்தவராயன் போன்ற சின்ன சின்ன திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார். ஆனால் இவர் எதிர்பார்த்த அளவிற்க்கு அந்த திரைப்படங்களில் இவருடைய நடிப்பு அங்கீகரிக்கப்படவில்லை .இந்த நிலையில் நீண்ட வருடமாக இவர் சினிமாவை விட்டு விலகி இருந்த நிலையில், மீண்டும் தற்போது நடிக்க வந்திருக்கிறார். அதுவும் சின்னத்திரையில் தான் வந்திருக்கிறார் .அந்த வகையில் ஆரம்பத்தில் நடிகை ராதா பைரவி என்கிற சீரியலில் நடித்தார். அதைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீசன் இரண்டில் வில்லியாக நடித்து இருக்கிறார்.

வீட்டுக்குள்ளே வில்லி
இந்த நிலையில் பாரதியின் வீட்டில் அடைக்கலம் வந்து அங்கேயே குழந்தைகளோடு தங்கி இருந்து அனைவரிடமும் நாட்டாமை செய்து கொண்டிருக்கும் கேரக்டராக இவர் இருந்து வருகிறார். முதல் அறிமுகத்திலேயே இவர் கேரக்டரை பார்த்து நெட்டிசன்கள் அதிகமாக கலாய்த்து வருகின்றனர். சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்தபோதிலும் இவர் நெகட்டிவ் கேரக்டரை தேர்ந்தெடுத்து இருப்பது பலருடைய அதிருப்தியை வெளிக்காட்டி வருகின்றனர். குறிப்பாக "உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்யும் கேரக்டராக இவர் இருக்கிறாரே" என்று பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications