Sundari Neeyum Sundaram Naanum Serial: நான் சாய்ந்து கொள்ள தோள் வேண்டும்...!
சென்னை: நான் உறங்கும் நாள் வேண்டும் சாய்ந்துகொள்ளத் தோள் வேண்டும்.இது வெறும் பாடல் அல்ல...மனிதர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் தோன்றும் ஒரு உணர்வு.
இதற்கான நாட்களை கடக்கமால் ஒரு மனிதன் தனது வாழ்நாளை கழிக்கவே முடியாது இதுதான் உண்மை.வாழும் வரை ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதையும் இந்த பாடல் உணர்த்தும் தத்துவம்.
எதுக்கு இந்த பில்டப்னு கேட்பீங்க...விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் சீன் அப்படி பேச வைக்குது. தமிழ்ச்செல்வி, வேலுவின் காதல் இப்படியான ஆறுதல் காட்சியில் ஆரம்பமாகுது.

அம்மா தமிழ்ச்செல்வி
தமிழ்ச்செல்வியின் அம்மாவுக்கு உடம்பு சரி இல்லாமல் போக, அவளுக்குப் பிடிக்காத வேலுதான் அவர்களை அவசரமாக அழைச்சுகிட்டு வந்து ஆஸ்பிடலில் சேர்க்கிறான். இருந்தாலும், அங்கும் அவனை திட்டிக் கொண்டே இருக்கிறாள் தமிழ்ச்செல்வி.

தமிழ்ச்செல்வி பாட்டி
வேலுவின் பாட்டிக்கு எப்படியாவது தமிழ்ச் செல்வியை வேலுவுக்கு கட்டி வச்சுடணும்னு நினைப்பு. ஆனால், வேலுவின் சித்தி இதைக் கெடுத்து பாட்டிக்கும் தமிழுக்குமான உறவை கெடுத்துடறாங்க. தமிழ் இனி வீட்டுப் பக்கமே வரமாட்டேன்னு சொல்லிட்டு போறா.

வேலுவுக்கும் தமிழுக்கும்
பாட்டிக்கும் வேலுவுக்கும் தமிழ் இனி இந்த வீட்டுக்கு வர மாட்டான்னு நினைச்சு மனசுக்குள் கஷ்டப்படறாங்க.தமிழுக்கும் அப்படி இருந்தாலும் வெளியில் காமிச்சுக்க மாட்டேங்கறா. வெறுக்கற மாதிரி நடிக்கறா.இந்த சமயத்தில்தான் தமிழ்ச்செல்வியின் அம்மாவுக்கு உடம்பு சரி இல்லாமல் போயி, வேலு காப்பாத்தி ஆஸ்பிடலில் சேர்க்கிறான்.

தமிழ் வேலு
வேலுவும் தமிழும் இதில் நெருக்கமாகி ஒருத்தருக்கு ஒருத்தர் மனம் விட்டு பேசிக்கறாங்க. அம்மா இல்லை எனக்குன்னு புலம்பறான் வேலு.. எனக்கு கல்யாணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்தால் அது மேல நான் அம்மா மேல காண்பிக்கற மாதிரி நிறைய பாசத்தை காமிக்கணும்னு கண்ணீர் விடறான்.
அம்மாதான் எனக்கு எல்லாம்... அவங்களை நீ காப்பாத்தினத்துக்கு நன்றின்னு சொல்லி கண்ணீர் வடிக்கறா.மெல்ல அவன் தோளில் இவள் சாய... அவர்களுக்குள் மெல்ல காதல் உருவாகிறது.












Click it and Unblock the Notifications