Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sundari Neeyum Sundaran Naanum serial: பேரு எம்ஜிஆர் ரசிகை.. பார்க்கிறது நம்பியார் வேலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை லதா என்று சொல்வதை விட எம்ஜிஆர் லதா என்று தன்னை எல்லாரும் சொல்வதைத்தான் விரும்புகிறார். நீண்ட இடைவெளி விட்டு, நடிகை ராதிகாவின் செல்வி சீரியலில் நடிக்க வந்தவர்.

இப்போது இவரைத் தேடி பல சீரியல் வாய்ப்புக்கள் வந்துகொண்டே இருக்கின்றன. சன் டிவியில் வள்ளி, விஜய் டிவியில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்று இரண்டு சீரியல்களில் இவருக்கு நல்ல புகழ் கிடைத்துள்ளது.

சின்னத் திரையில் நடிப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று சொல்லும் லதா, வெளிநாடுகளில் மட்டும் அல்ல.. நம்ம ஊர் மக்கள் கூட என்னை பார்க்க நேர்ந்தால் எம்ஜிஆர் லதாவான்னு கேட்பது சந்தோஷத்தில் ஆழ்த்துகிறது என்று கூறுகிறார்.

சன் டிவியின் வள்ளி

சன் டிவியின் வள்ளி

சன் டிவியின் வள்ளி சீரியலில் மறைந்த நடிகை ஜோதி லட்சுமி பாட்டி வேடத்தில் நடித்து வந்தார். அவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மறைந்த நிலையில் அந்த வேடத்தில் இப்போது லதா நடித்து வருகிறார். அதில் தன்னுடைய ஹேர் ஸ்டைல் மக்களை மிகவும் கவர்ந்துள்ளது என்றும், அதை நானே தேர்ந்தெடுத்து எனக்கு இது பொருத்தமாக இருக்கும் என்று இயக்குநரிடம் அனுமதி வாங்கியதையும் கூறுகிறார்.

சுந்தரன் நானும்

சுந்தரன் நானும்

சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் அரசியல்வாதியின் பாட்டியாக நடித்து வருகிறார். பேரன் என்றால் பாட்டிக்கு உயிர்.பாட்டி என்றால் பேரனுக்கு உயிர். பாட்டிக்கு பேரனைத் தவிர வீட்டில் உள்ள மற்றவர்கள் சதிகாரர்களாக இருக்கிறார்கள். பேரனுக்கு தனியார் பள்ளி வைத்து நடத்தி வரும் தமிழ்செல்வியை கட்டி வைக்க பாடு படுகிறார் பாட்டி.

நம்பியார் வில்லத்தனம்

நம்பியார் வில்லத்தனம்

தமிழ்ச்செல்வியை கட்டி வைக்க பல தந்திரங்கள் செய்யும் பாட்டியை செல்லமாக பேரன் திட்டுவான்,பாட்டி ரூமிலிருந்து வெளியே வந்த பேரன் கீழே விழப் போன தமிழ்ச் செல்வியை பய புள்ள தாங்கிப் புடிச்சுக்கறான். பாட்டி இதைப் பார்த்து ரசிச்சு சிரிக்க, தமிழ்ச்செல்வி வெடுக்கென்று பேசிவிட்டு போகிறாள். எல்லாம் இந்த பாட்டியின் வேலை... சொல்லிக்கறது எம்ஜிஆர் ரசிகைன்னு.பண்றது நம்பியார் வில்லத்தனம் என்று திட்டுகிறான். உண்மையில் அவர் எம்ஜிஆர் ரசிகை என்பதைத்தான் அவரும் சொல்லி இருக்கிறார்.

சேதுபதி அரச குடும்பம்

சேதுபதி அரச குடும்பம்

ராமநாதபுரம் சேதுபதி அரச குடும்பத்தில் பிறந்த லதாவுக்கு நடிப்பதில் ஆர்வம் வந்தது மும்பையில் வசித்து வந்த தனது சித்தியால்தான் என்று கூறுகிறார். சித்தி ஒரு நடிகையாக இருந்ததில் அவர் தன்னையும் ஊக்குவிக்க. எம்ஜிஆருடன் நடிக்க தானாக வாய்ப்பு வந்து, அதை மறுத்து இருக்கார் லதாவின் அம்மா. பிறகு எம்ஜிஆர் அம்மாவை வீட்டுக்கு அழைத்து நான் பார்த்துக்கறேன்.. உங்க பெண்ணுக்குத்தான் நடிக்க விருப்பம் இருக்கிறததே என்று சமாதானம் செய்து தான் தயாரித்த படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்து இருக்கார்.

எம்ஜிஆர் ரசிகை என்றாலும் அவரை நான் குருவாக பார்க்கிறேன் என்று கூறுகிறார் நடிகை எம்ஜிஆர் லதா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+