Sundari Neeyum Sundaran Naanum Serial: விடிய விடிய கோட்டையை கோட்டை விடவா பேசினீங்க?
சென்னை: தமிழ்ச் செல்வியும், வேலுவும் விடிஞ்சு சுள்ளுன்னு வெயில் அடிக்கறது கூட தெரியாம பேசினாங்க ஆனால், காதலை சொல்லாம விஷயத்தை கோட்டை விட்டுட்டாங்க.
இப்போ பாருங்க வேலுவுக்கு நிஷாவுடன் நிச்சயதார்த்தம் நடக்கப் போவுது. தமிழும், வேலுவும் என்ன பேசறதுன்னு தெரியாம முழிக்கறாங்க.
விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில்தான் அன்னிக்கு இல்லாமல் விடிய விடிய பேசினாங்க. இன்னிக்கு நிஷாவுடன் நிச்சயம்னு கேள்விப்பட்டு தமிழ்ச்செல்வி வாயடைச்சு நிக்கறா.

வேலு பாட்டி
வேலுவின் பாட்டி வேலுவுக்கு தமிழ்ச்செல்வி மாதிரி ஒரு பொண்ணுதான் வேணும்னு முடிவு பண்றாங்க. அந்த கிராமத்தில் பள்ளிக் கூடம் நடத்தி வரும் தமிழ்ச்செல்வி கூட அன்பா பழக ஆரம்பிச்சு ஃபிரண்டு ஃபிரண்டுன்னு வீட்டுக்கே அழைச்சுட்டு வந்துடறாங்க.

தமிழ் வேலு
வேலுவுக்கும் தமிழுக்கும் ஆரம்பத்தில் கொஞ்சமும் பிடிக்காமல் வாக்கு வாதம், சண்டைன்னு வருது. இருந்தாலும், தமிழுக்குள்ளும், வேலுவுக்குள்ளும் ஒருவர் மீது ஒருவர் மெல்லிய காதல் இழையோட ஆரம்பிக்கையில், இருவரும் ஒரு நாள் அவள் காதலை சொல்வாள் என்று அவனும், அவன் காதலை சொல்வான் என்று இவளும் எதிர்பார்த்தும், பேசாமலே பொழுது விடிஞ்சுருது.

சித்தி வேலு
வேலுவின் சித்தி நிஷாவின் அப்பாவிடம் வேலுவை நிஷாவுக்கு கல்யாணம் பண்ணி வைப்பதாக சொல்லி, யாருக்கும் தெரியாமல் நிறைய பணம் வாங்கிடறாங்க. இந்த சமயத்தில்தான் நிஷாவின் அப்பா பாட்டியிடம் சொல்லிட்டு நிஷாவுக்கு, வேலுவுக்கும் நிச்சயதார்த்தம்னு முடிவு பண்ணிடறார்.

தமிழை வெறுப்பேத்த
தமிழை வெறுப்பேத்த வேலுவின் கையைக் கோர்த்துக்கிட்டு, எனக்கும் வேலுவுக்கும் நிச்சயதார்த்தம் தமிழ். உனக்கு வர நேரம் இருக்காது. இந்த நிச்சயதார்த்தத்தை முடிவு பண்ணியதே பாட்டிதான். அவங்க என்ன நடந்துச்சுன்னு சொல்லுவாங்க என்று வெறுப்பேத்தறா.
வாயடைச்சு பேச முடியாம அதிர்ச்சியில் நிக்கறா தமிழ்.












Click it and Unblock the Notifications