Sundari Neeyum Sundaran Naanum serial: என்ன சரக்குடா இது...இதனாலதான் பசங்க...?
சென்னை: தமிழ்ச்செல்வி என் கண்ணைப் பார்த்து நேரா பேசுடான்னு வேலுவை சொல்ல, அப்போது தனது லவ்வை சொல்ல வாயெடுத்த வேலு. தமிழின் கண்ணைப் பார்த்து அப்பான்னு திரும்பிக்கறான். அப்போதுதான் என்ன சரக்குடா இது...ஜிவ்வுன்னு ஏறுது!
இதனால்தான் பசங்க பொண்ணுங்க கண்ணைப் பார்த்து லவ்வை சொல்றதில்லையோன்னு சொல்லிக்கறான். வந்து... வந்து என்று இவன் இந்த பக்கம் திரும்பிக்க..
தைரியமான ஆம்பளையா இருந்தா என் கண்ணை நேருக்கு நேரா பார்த்துப் பேசு..இல்லேன்னா வழிவிடு நான் போறேன்னு தமிழ்ச்செல்வி ஜீப்பை விட்டு இறங்கிப் போய் விடுகிறாள்.

சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில்தான் மேற்கண்ட வசனம் இடம் பெற்றது. தமிழ்ச்செல்வியிடம் தனது லவ்வை சொல்லப் போன வேலுவை தமிழ்ச் செல்வியும் காதலிக்கறா. அவன் சொல்லட்டுமேன்னு இவள் எதிர்பார்க்கிறாள். அதனால்தான் அவன் தயங்கும்போது என்னை பார்த்து சொல்லாதே..என் கண்ணைப் பார்த்து சொல்லுன்னு தமிழ்ச்சொல்றா.

சித்தி வேற பொண்ணு
வேலுவுக்கு சித்தி வேற பொண்ணு பார்த்துட்டு நிச்சயதார்த்த புடவை செலக்ட் பண்ண கூப்பிட்டுகிட்டே இருக்கும் போது இதெல்லாம் நடக்குது. அவங்க போன் பண்ணி கடைக்கு வான்னு டார்ச்சர் ,பண்றாங்க.இவன் தன் லவ்வை சொல்லிடத் துடிக்கிறான். சொல்லுவான் சொல்லுவான்னு எதிர்பார்த்த தமிழ் அப்செட் ஆகி.ஜீப்பில் அவள் வீடு வரைக்கும் வந்தாச்சு.

கோபம் தமிழுக்கு
இவன் இன்னும் தன் லவ்வை சொல்லாம இருக்கானேன்னு எல்லை மீறிய கோவம் வந்து தமிழ் கடுப்பாக பேச,ஜீப்பில் இப்போ நம்ம லவ்வை சொல்லக் கூடாதுன்னு அடக்கி வச்சுக்கறான். இதுதான் பெண் மனசை ஆண்களால் புரிஞ்சுக்க முடியாதுன்னு சொல்றது.

90 ஸ் கிட்ஸா
அது சரி பெண்ணின் கண்ணை என்ன சரக்குடா இதுன்னு சொல்றானே வேலு... இவன் என்ன 90 ஸ் கிட்ஸா.. இப்போ எல்லாம் இப்படித்தாங்க வித்தியாசமா பேசிக்கறாங்க.நாம் புரியாம எதாவது கேட்டால் இதெல்லாம் 90 ஸ் கிட்ஸ் விஷயம் உங்களுக்குத் புரியாதுன்னு சொல்றாங்க.என்னவோ போங்க...
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications